படிச்சு படிச்சு சொல்லியும் கேட்கல! "புதிய தங்கம்னு" பில்டப் வேற.. இப்போ 30% சரிவு! கதறும் பொதுமக்கள்
சென்னை: தங்கத்தை போலவே இந்தாண்டு பிட்காயின் விலை தொடக்கத்தில் படுவேகமாக அதிகரித்தது. பலரும் தங்கத்திற்குப் பதிலாக பிட்காயின் தான் சரியாக இருக்கும் என்று கூட சொன்னார்கள். ஆனால், இப்போது பிட்காயின் வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு பிட்காயின் குறுகிய காலத்தில் சுமார் 30% வரை சரிந்துள்ளது.
இந்தாண்டு சந்தேகமே இல்லாமல் தங்கத்திற்கானது தான். இந்தாண்டு மட்டும் தங்கம் விலை சுமார் 60% வரை உயர்ந்துள்ளது. இப்போது சில காலம் ஏற்ற இறக்கம் இல்லாமல் இருந்தாலும் கூட அதிக லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்த விஷயமாகத் தங்கம் இருக்கிறது. இதனால் பலரது பார்வையும் இப்போது தங்கம் பக்கம் திரும்பியுள்ளது.

பிட்காயின்
தங்கத்தை போலவே இந்தாண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு விஷயம் என்றால் அது பிட்காயின். 2025 தொடக்கம் முதல் அதன் விலையும் உயர்ந்து வந்த நிலையில், இதுவரை இல்லாத புதிய உச்சத்தை பிட்காயின் எட்டிப்பிடிக்கும் என்று பலரும் நினைத்தனர். குறிப்பாக இளைஞர்கள் அதில் ஆர்வமாக முதலீடு செய்தனர். பலரும் இதுதான் புதிய தங்கம் என்று கூட சொன்னார்கள்.
இதனால் இந்தாண்டு தங்கத்தை பிட்காயின் தூக்கிச் சாப்பிட்டுவிடும் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், இப்போது அது திணறி வருகிறது. கடந்த சில நாட்களாகவே அதன் விலை மிக மோசமாகச் சரிந்துள்ளது. 2025ஆம் ஆண்டின் அதிகபட்ச விலையில் இருந்து பிட்காயின் சுமார் 30% சரிந்துள்ளது. இது மற்ற அனைத்து முதலீடுகளையும் மிக மிக மோசமாகும்.
புதிய தங்கம்
உலகில் அதிக வளர்ச்சி தரும் முதலீடாக பிட்காயின் கருதப்பட்டது. மேலும், இது பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பைக் கொடுக்கும் என்றே பலரும் கருதினர். எப்படி தங்கத்தில் குறிப்பிட்ட பங்கை முதலீடு செய்வதன் மூலம் ரிஸ்க்கை குறைக்க முடியுமோ.. அதுபோல கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தாலும் ரிஸ்க்கை குறைக்கலாம் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், இப்போது அது தடுமாறி வருகிறது.

30% சரிவு
சில வாரங்களுக்கு முன்பு ஒரு பிட்காயின் விலையே கூட ரூ.1.10 கோடி வரை போனது. ஆனால், இப்போது மிக மோசமாகச் சரிந்து ரூ.81 லட்சத்தில் அது வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச சந்தையிலும் கூட பிட்காயின் விலை முதல்முறையாக 90,000 டாலருக்கு கீழ் சரிந்தது. சமீப காலங்களில் பிட்காயின் விலை இந்தளவுக்கு மோசமாகச் சரிவது இதுவே முதல்முறை.
பிட்காயின் விலை ஏறும்போது அதன் ஆதரவாளர்கள் பலரும் தங்கத்திற்கு இனிமேல் வேலை இல்லை என்றே சொன்னார்கள். தங்கம் எல்லாம் பழங்காலத்து முதலீடு என்றும் இப்போது தங்கம் செய்யும் வேலையை பிட்காயின் செய்யும் என்றும் சொன்னார்கள். தங்கம் விலையும் கூட சமீப காலத்தில் சரிந்தது என்றாலும் கூட அது பிட்காயின் அளவுக்குச் சரியவில்லை. தங்கம் மட்டுமில்லை அமெரிக்கப் பங்குச்சந்தைகளை விடவும் கூட பிட்காயின் விலை கடுமையாகச் சரிந்துள்ளது.
ஒன்னும் மாறல
இது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்துகவே இருக்கிறது. ஏனென்றால் பலரும் இந்தாண்டை கிரிப்டோவின் எழுச்சி ஆண்டாகவே பார்த்தனர். ஏனென்றால் இப்போது அமெரிக்க அதிபராக டிரம்ப் இருக்கிறார். அவர் முழுக்க முழுக்க கிரிப்டோ ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவராகவே இருக்கிறது. மேலும், கிரிப்டோ ரூல்ஸ் கூட இந்தாண்டு எளிமையாக்கப்பட்டது. இதனால் விலை உச்சத்தைத் தொடும் என்றே பலரும் நினைத்திருந்தனர். ஆனால், அதற்கு நேர்மாறாகவே நடந்துள்ளது.
படிச்சு படிச்சு சொன்னாங்களே
அதேநேரம் வாரன் பபெட், ஆனந்த் சீனிவாசன் உள்ளிட்ட பொருளாதார வல்லுநர்கள் பிட்காயின் என்பது ரிஸ்கான ஒன்று.. அதை முதலீடாகக் கருத முடியாது என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லி வந்தனர். குறிப்பாக வாரன் பபெட் உலகில் இருக்கும் எல்லா பிட்காயின்களையும் கொடுத்தாலும் அதை 25 டாலருக்கு கூட வாங்க மாட்டேன் எனக் கூட எச்சரித்திருந்தார். அதாவது பிட்காயினின் மதிப்பு அவ்வளவு தான்.. சும்மா கொடுத்தாலும் வாங்க மாட்டேன் என்பதே உலக கோடீஸ்வரர் வாரன் பபெட்டின் கருத்தாகும்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications