92 ஆண்டுகால இந்திய வரலாற்றின் முதல் ஒருங்கிணைந்த பட்ஜெட்... அல்வா முதல் அருண் ஜெட்லி வரை

ரயில்வே பட்ஜெட்டும், பொது பட்ஜெட்டும் இணைந்து ஒருங்கிணைந்த பட்ஜெட்டாக பிப்ரவரி 1ஆம் தேதி நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டில் முதல் முறையாக 2017 - 18ம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டும், பொது பட்ஜெட்டும் இணைந்து ஒருங்கிணைந்த பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் 92 ஆண்டுகாலம் நடைமுறையில் பொது பட்ஜெட், ரயில்வே பட்ஜெட் என்ற தனித் தனி பட்ஜெட் முறைகள் முடிவிற்கு வருகின்றன.

இதுவரை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 26 அல்லது 27ம் தேதியில் ரயில்வே பட்ஜெட்டும், பிப்ரவரி மாதத்தின் இறுதி நாளில் பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுவது தான் வழக்கம்.

இந்த ஆண்டு அதிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தின் முதல் நாளிலேயே ஒருங்கிணைந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் ஏப்ரல் முதல் மார்ச் வரை நிதியாண்டாக கடைப்பிடிக்கப்படுகிறது. பிப்ரவரி இறுதியில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட், நாடாளுமன்ற நடைமுறைகளை கடந்து மே மாதம் பாதியில்தான் நிறைவேற்றுகிறது. இதனால் மே மாதம் வரை மாதங்களுக்கான பல்வேறு செலவினங்களுக்காக தனியாக நாடாளுமன்றத்தில் கணக்கு தாக்கல் செய்யப்பட வேண்டி உள்ளது.

மானியங்கள் மற்றும் ஒதுக்கீட்டு மசோதா, ஆண்டு செலவினம் மற்றும் வரி மாறுதல்கள் தொடர்பான மசோதாக்களும் ஏப்ரல், மே மாதங்களில் தான் நிறைவேற்றப்படுகிறது. இந்த பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நிதியாண்டு தொடங்குவதற்கு முன்னதாக அதாவது மார்ச் 31ம் தேதிக்கு முன்பே பட்ஜெட்டை நிறைவேற்ற அரசு திட்டமிட்டது. இந்த ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட் ரத்து செய்யப்பட்டு, பொது பட்ஜெட்டிலேயே அதற்கும் நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ரயில்வே உள்பட ஒருங்கிணைந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.

நாட்டின் சாமான்யன் முதல் பெரும் பணக்காரர்கள் வரையில் தற்போது எதிர்பார்க்கும் விஷயம் இந்த ஆண்டு பட்ஜெட் எப்படி இருக்கும் என்பதுதான். பட்ஜெட்டை வைத்துத்துதான் தங்களுடைய குடும்ப பட்ஜெட்டையும், வருமான வரி சேமிப்பையும் முடிவு செய்வார்கள். பட்ஜெட் பற்றிய சில சுவாரஸ்யங்களை தெரிந்து கொள்ளுங்கள்

அல்வா கிண்டுவாங்க

அல்வா கிண்டுவாங்க

நல்ல விசயம் செய்வதற்கு முன்னாடி சுவீட் உடன் ஆரம்பிக்கணும்னு சொல்வாங்க. இது விளம்பர வாசகம் மட்டுமல்ல பட்ஜெட்டுக்கும் பொருந்துங்க. பட்ஜெட் தயாரிக்கும் முன்பாக பாரம்பரியமாகவே அல்வா கிண்டும் விழா நடத்துகிறார்கள். இந்த விழாவில் நிதியமைச்சர் முதல் சாதாரண ஊழியர்கள் வரை பங்கேற்பார்கள்.

அல்வா சாப்பிடுங்க

அல்வா சாப்பிடுங்க

சுட சுட நெய் ஊற்றி கிண்டிய அல்வாவை உடனே சாப்பிட்டு விட மாட்டார்கள். அதை பத்திரமாக எடுத்து வைத்து விடுவார்களாம். நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர்தான் பட்ஜெட் தயாரிக்க உதவிய அனைவருக்கும் பகிர்ந்து அளிப்பார்களாம்.

பாரம்பரியத்தை மாற்றிய பாஜக

பாரம்பரியத்தை மாற்றிய பாஜக

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மதிய நேரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் பொது பட்ஜெட் பிப்ரவரி மாதம் 28 அல்லது 29ஆம் தேதி மாலை 5 மணிக்கு தாக்கலானது. அந்த பாரம்பரியத்தை 1999ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக மாற்றியது. வாஜ்பாய் பிரதமராக இருந்த போது நிதியமைச்சரான யஷ்வந்த் சின்ஹா காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தனி தனி பட்ஜெட்

தனி தனி பட்ஜெட்

பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ரயில்வே அமைச்சர் இந்த பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார். ஒரு நாள் இடைவெளி விட்டு பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்வார். இந்த ஆண்டு முதல் ஒருங்கிணைந்த பட்ஜெட் ஆக தாக்கல் செய்யப்படுகிறது.

மீண்டும் மாறிய பாரம்பரியம்

மீண்டும் மாறிய பாரம்பரியம்

முதன்முறையாக பிப்ரவரி 1ஆம் தேதியே ஒருங்கிணைந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் 92 ஆண்டுகாலம் நடைமுறையில் பொது பட்ஜெட், ரயில்வே பட்ஜெட் என்ற தனித் தனி பட்ஜெட் முறைகள் முடிவிற்கு வருகின்றன. அல்வா கிண்டி பாரம்பரியமாக பட்ஜெட் தயாரித்த அருண் ஜெட்லி நாட்டு மக்களுக்கு இனிக்கும் பட்ஜெட்டை அளிப்பாரா என்பதே சாதாரண குடிமகன் முதல் கார்ப்பரேட் முதலாளிகள் வரை பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+