Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிடில் கிளாஸ் மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிர்மலா சீதாராமன்? டேக் ஹோம் சம்பளம் உயர வாய்ப்பில்லை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பட்ஜெட்டில் மிடில் கிளாஸ் மக்களுக்கு மத்திய அரசு இன்ப அதிர்ச்சி கொடுக்குமா என்பதே எதிர்பார்ப்பாக இருந்தது. வருமான வரி விலக்கை உயர்த்த வாய்ப்பில்லை என்றாலும் கூட சில குறிப்பிட்ட அறிவிப்புகள் மூலம் மிடில் கிளாஸ் மக்கள் கைக்கு வரும் சம்பளத்தை மத்திய அரசு உயர்த்த வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்பட்டது.. இருப்பினும், அதுபோல எதுவும் நடக்கவில்லை. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இந்த பட்ஜெட்டில் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன மாதிரியான அறிவிப்புகள் இருக்கும் என்பது குறித்தும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கடந்தாண்டைப் போல மத்திய அரசு கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்குமா அல்லது நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிக வரிச் சலுகை அளிப்பாரா என்பதே அனைவரின் மனதிலும் உள்ள முக்கியக் கேள்வி.

Budget 2026 Will Section 87A Standard Deduction Rise for Zero Tax All eyes on Nirmala Sitharaman

வருமான வரிச் சட்டம்

வருமான வரிச் சட்டம் 87A குறித்தே இப்போது கேள்வி இருக்கிறது.. புதிய வரி முறையில், ₹12 லட்சம் வரை வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கும் முக்கிய கருவி இந்தச் சட்டம் தான். வெறும் வரம்புகள் மட்டுமின்றி, இது கணக்கீட்டிற்குப் பின் வரியை முழுமையாக நீக்குகிறது. வரம்பைச் சற்று தாண்டுபவர்க்கும் திடீர் வரிச்சுமையைக் குறைக்கிறது. இதில் வரும் மாற்றம் என்பது வரி செலுத்துவோர் பட்டியலை மொத்தமாக மாற்றிவிடும். இதன் காரணமாகவே நிர்மலா சீதாராமன் இதில் எதாவது அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்ப்பு நிலவியது.

Standard deduction எனப்படும் நிலையான கழிவு எளிமையான வரிச் சலுகையாகும். இதில் வரிக்குரிய சம்பளம் எளிதாகக் குறைக்கப்படும். புதிய வரி விதிப்பில் ₹75,000 ஆகவும், பழைய முறையில் ₹50,000 ஆகவும் உள்ளது. இதை ₹1 லட்சமாக உயர்த்தினால், மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்கும். இதனால் 87A மூலம் ₹15 லட்சம் வரை வருமானத்தை வரி இல்லாததாக்க அரசு முயலுமா என்பதில் கேள்வி நிலவுகிறது..

கவனிக்க வேண்டியது

இருப்பினும், கடந்த ஆண்டு மாற்றங்களால் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை நேரடி வரி வருவாய் இழப்பு ஏற்பட்டது. நிதி ஒருங்கிணைப்பு, புதிய முறைக்கு மக்களை ஈர்ப்பதில் அரசு கவனம் செலுத்தி வரும் சூழலில், மீண்டும் ஒரு பெரிய சலுகையை அறிவிப்பது கடினம் என்றும் வல்லுநர்கள் கூறுகிறார்கள். மேலும், பெரிய வரிச் சலுகை புதிய வரி விதிப்பு முறையின் கட்டமைப்பைப் பாதிக்கலாம். ஒரு சிறிய தவறு கூட பணவீக்கம், அதிகரித்து வரும் குடும்பச் செலவுகளால் பாதிக்கப்பட்ட நடுத்தர வர்க்கத்தினரின் அதிருப்தியைச் சந்திக்க நேரிடும்.

தங்கம், வெள்ளி

தங்கம், வெள்ளி சந்தைகளில் பெரும் புயல் அடிக்கப் போகிறது என்றே சொல்லப்படுகிறது. காரணம் தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒரு தரப்பினர் தங்கம் மீதான இறக்குமதி வரியை 6%இல் இருந்து 4%ஆக குறைக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். அதேநேரம் இது அந்நியச் செலாவணியைப் பாதிப்பதால் இறக்குமதி வரி உயர்த்தி, ரூபாய் மதிப்பை மேம்படுத்த வேண்டும் என்ற குரல்களும் வருகிறது. இதனால் இன்றைய பட்ஜெட் அறிவிப்பில் தங்கம் குறித்து நிச்சயம் முக்கிய அறிவிப்பு இருக்கும்.

தங்கம் ஒரு பக்கம் இருந்தாலும் சட்டம் 87A-ல் என்ன மாற்றம் நிகழும் என்றும் இதனால் டேக் ஹோம் சம்பளம் உயரலாம் என்றும் எதிர்பார்ப்பு நிலவியது. இருப்பினும், அதுபோல எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

புதிய வரி விதிப்பு முறை - முக்கிய விவரங்கள்:

தற்போதைய வரி வரம்புகள்

ரூ.0-4 லட்சம்- 0%

ரூ.4-8 லட்சம்- 5%

ரூ.8-12 லட்சம் -10%

ரூ.12-16 லட்சம் -15%

ரூ.16-20 லட்சம் -20%

ரூ.20-24 லட்சம் -25%

ரூ.24 லட்சத்திற்கு மேல் -30%

ஏமாற்றம்

ரூ.4 லட்சத்திற்கு மேல் போனாலே வரி என்று இருந்தாலும் Rebate இருப்பதால் ரூ.12 லட்சம் வரை வரி இல்லை. அத்தோடு நிலையான கழிவும் ரூ75,000 வரை இருப்பதால் ரூ.12.75 லட்சம் வரை வருமான வரி செலுத்தத் தேவையில்லை.

இந்த Rebateஐ சொல்லும் 87A மற்றும், நிலையான கழிவுகளை உயர்த்த வேண்டும் என்பதே மிடில் கிளாஸ் மக்களின் கோரிக்கையாக இருந்தது. இருப்பினும், அதுபோல எதுவும் நடக்கவில்லை. இதனால் மிடில் கிளாஸ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+