பர்சனல் லோன் வாங்க போறீங்களா? எவ்வளவு சிபில் ஸ்கோர் இருக்க வேண்டும்! அதை அதிகரிப்பது எப்படி?
மும்பை: சிபில் ஸ்கோர் குறைவாக இருப்போருக்கு லோன் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. வங்கிகளும் கூட இதைக் காரணமாகச் சொல்லித் தான் நிராகரிக்கும். இந்த சிபில் ஸ்கோர் என்றால் என்ன.. இது எப்படி லோன் செயல்முறையைப் பாதிக்கிறது.. இந்த சிபில் ஸ்கோரை அதிகரிப்பது எப்படி என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
சிறுதொழில் செய்யும் ஒருவர் தனது பிஸ்னஸை விரிவுபடுத்த விரும்புகிறார். இதற்காக அவர் பெர்சனல் லோன் கோரி வங்கியில் விண்ணப்பிக்கிறார். ஆனால், அவருக்கு லோன் கிடைக்கவில்லை. சிபில் ஸ்கோர் குறைவாக இருப்பதால் அவருக்கு லோன் தர முடியாது என வங்கி சொல்லிவிட்டது.

இதுபோல உங்களைச் சுற்றி பலருக்கும் நடந்து இருக்கலாம்.. உங்களுக்கே கூட நடந்து இருக்கலாம். சிறு தொழிலை டெவலப் செய்ய என இல்லை.. பல காரணங்களுக்காக நீங்கள் லோன் கோரி விண்ணப்பித்தாலும் கூட சிபில் ஸ்கோரை காரணம் காட்டி அதை வங்கிகள் நிராகரிக்க வாய்ப்புகள் அதிகம்.
சிபில் ஸ்கோர்:
கடன் தர மட்டுமின்றி, அதற்கு எத்தனை சதவிகிதம் வட்டி என்பதை முடிவு செய்வதிலும் சிபில் ஸ்கோருக்கு ரொம்பவே முக்கிய பங்கு இருக்கிறது. இந்த சிபில் ஸ்கோரை அதிகரிப்பது எப்படி.. இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் பார்க்கலாம். அதற்கு முன்பு சிபில் ஸ்கோர் என்றால் என்ன என்பதை நாம் முதலில் பார்க்கலாம்.
சிபில் ஸ்கோர் அல்லது கிரெடிட் ஸ்கோர் என்பது ஒருவரின் கடன் தகுதியின் குறி காட்டியாகும்.. நீங்கள் எந்தளவுக்குச் சரியாக கடனை திருப்பி செலுத்தியுள்ளீர்கள் என்பதே இதன் அர்த்தம். இது பொதுவாக 300 முதல் 850 வரை இருக்கும்.
ரிஸ்க்:
நீங்கள் சரியாகக் கடனை திருப்ப செலுத்துகிறீர்களா இல்லையா என்பதையே இது காட்டுகிறது. அதாவது கம்மியான சிபில் ஸ்கோர் இருந்தால் வங்கிகளுக்கு ரிஸ்க் அதிகம். சிபில் ஸ்கோர் அதிகமாக இருந்தால் ரிஸ்க் குறைவு என்றே வங்கிகள் கருதும். இதன் காரணமாகவே சிபில் ஸ்கோர் அதிகம் இருப்போருக்கு எளிதாக லோன் கிடைக்கும்.
நமது நாட்டில் பலருக்கும் சிபில் ஸ்கோர் மட்டுமே தெரியும். ஆனால், உண்மையில் இதுபோன்ற கிரெடிட் ஸ்கோரை கணக்கிட சிபிலை தாண்டியும் சில நிறுவனங்கள் உள்ளன. CRIF Highmark, Equifax மற்றும் Experian ஆகிய நிறுவனங்களும் கூட சிபிலை போலவே கிரெடிட் ஸ்கோரை கணக்கிடும்.
எவ்வளவு தேவைப்படும்:
வழக்கமாக 750க்கு மேல் ஒருவருக்கு சிபில் ஸ்கோர் இருந்தால் அது மிகச் சிறந்த ஒன்றாகவே கருதப்படும். அவர்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கும். எனவே, கடனுக்கு விண்ணப்பிக்கத் திட்டமிடும் நபர்கள் நல்ல கிரெடிட் ஸ்கோரைப் பராமரிப்பது அவசியம். சரி, இந்த சிபில் ஸ்கோரை எப்படி அதிகரிப்பது என்பதை நாம் பார்க்கலாம்.
எப்படி அதிகரிக்கலாம்:
உங்கள் சிபில் அல்லது கிரெட்டிட் ஸ்கோரை தொடர்ந்து கண்காணிக்கவும். சிலர் சிபில் ஸ்கோரை அடிக்கடி பார்ப்பதால் அது கம்மியாகும் என தவறாக நினைக்கிறார்கள். ஆனால், அது அப்படி இல்லை. லோன் எடுக்க விண்ணப்பித்து வங்கிகள் அடிக்கடி சிபில் ஸ்கோரை பார்த்தால் மட்டுமே அது குறையும். நாம் நமது சிபில் ஸ்கோரை பார்ப்பதால் அது குறையாது. எனவே, அவ்வப்போது அதைப் பார்த்து செக் செய்து சிபில் ஸ்கோரை பராமரிக்கவும்.
சிபில் ஸ்கோரை எளிதாக அதிகரிக்க முதன்மை வழி ஒரு கிரெடிட் கார்டை வாங்கி, அதை முறையாகப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் நீங்கள் பயன்படுத்திய முழு தொகையைச் செலுத்திவிடுங்கள். குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்தக் கூடாது. அடுத்த மாதத்திற்கு என தள்ளிப்போட்டால் சிபில் ஸ்கோர் குறைந்துவிடும்.
அதேபோல CUR என்பதும் credit utilisation ratio-ஐ குறைவாகவே வைத்திருங்கள். CUR அதிகம் இருந்தால் அதுவும் சிபில் ஸ்கோரை பாதிக்கும். எனவே, உங்கள் கார்டில் அனுமதிக்கப்பட்ட தொகையில் அதிகபட்சம் 20-30% தொகையை மட்டுமே செலவிடுங்கள்.












Click it and Unblock the Notifications