டீசல் விலை லிட்டருக்கு 95 பைசா உயர்ந்தது... சென்னையில் 99 பைசா உயர்வு!
டெல்லி: டீசல் விலை லிட்டருக்கு 95 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
அதேவேளையில், பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளைப் பொருத்து, மாதந்தோறும் 1 மற்றும் 15-ஆம் தேதிகளில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கும்.
அதன் அடிப்படையில், டெல்லியில் ரூ.44.95-ஆக இருந்த ஒரு லிட்டர் டீசலின் விலையை ரூ.45.90-ஆக உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் வியாழக்கிழமை முடிவு செய்தன. இந்த மாதத்தில் மட்டும் இரண்டாவது முறையாக டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 1-ஆம் தேதி டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் வரிகளின் அடிப்படையில் டீசல் விலை மாநிலங்களுக்கு மாநிலம் மாறுபடுகிறது. ஒப்பீட்டுக்கு டெல்லி விலையை கணக்கில் எடுக்கப்படுகிறது.
சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 99 காசுகள் உயர்ந்துள்ளது. லிட்டருக்கு 46 ரூபாய் 8 காசாக இருந்த டீசல் விலை, இப்போது 47 ரூபாய் 7 காசாக உயர்ந்தது.
கொல்கத்தாவில், ரூ.48.71 ஆக இருந்த டீசல் விலை, 81 காசு உயர்ந்து, ரூ.49.52 ஆனது.
மும்பையில் டீசல் விலை ரூ.1.01 உயர்ந்தது. அங்கு ரூ.52.08-ல் இருந்து ரூ.53.09 ஆக உயர்ந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications