DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!
இந்திய ரீடைல் வர்த்தகத் துறையில் புரட்சியை ஏற்படுத்திய டிமார்ட் (DMart) நிறுவனத்தின் நிறுவனரும், நாட்டின் முன்னணி கோடீஸ்வர முதலீட்டாளருமான ராதாகிஷன் தமானி (Radhakishan Damani) மிகப்பெரிய ரியல் எஸ்டேட் முதலீட்டாளர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
ரீடைல் சந்தையை தொடர்ந்து தற்போது ரியல் எஸ்டேட் வாடகைச் சந்தையிலும் ஒரு புதிய சாதனையைப் படைத்து ஒட்டுமொத்த மும்பை மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ராதாகிஷன் தமானி
ராதாகிஷன் தமானி இயக்குநராக இருக்கும் 'டிரைவ் டிரேடிங் அண்ட் ரிசார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்' (Derive Trading and Resorts Pvt. Ltd) நிறுவனம், மும்பையின் மிக முக்கிய பகுதியான வொர்லியில் (Worli) அமைந்துள்ள ஒரு சொகுசு அப்பார்ட்மென்ட் வீட்டை பிரபல கார்ப்பரேட் நிறுவனத்திற்கு மிகப்பெரிய தொகைக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
இது இந்திய ரியல் எஸ்டேட் வரலாற்றிலேயே அதிகப்படியான வாடகை ஒப்பந்தமாக விளங்குகிறது.
பிரம்மாண்ட வாடகை ஒப்பந்தம்
ராதாகிருஷ்ணன் தமணி இயக்குநராக உள்ள டெரைவ் டிரேடிங் அண்ட் ரிசார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மும்பை வொர்லி பகுதியில் உள்ள 'த்ரீ சிக்ஸ்டி வெஸ்ட்' (Three Sixty West) எனும் ஆடம்பர அப்பார்ட்மெண்ட்-ல் சுமார் 6,831 சதுர அடி பரப்பளவுள்ள வீடு + 4 கார் பார்க்கிங் வசதியுடன் கூடிய வீட்டை One SGG Ventures LLP நிறுவனத்துக்கு வாடகைக்கு விட்டுள்ளது.
இந்த வீட்டிற்கு மாத வாடகை ரூ.27.5 லட்சமாம், இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.3.3 கோடி வருமானம் பெறுகிறார் ராதாகிஷன் தமணி. மேலும் ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் வாடகை உயர்வுடன் 5 ஆண்டு கால ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இதோடு இந்த வீட்டுக்கு செக்யூரிட்டி டெபாசிட் ஆக ரூ.1.65 கோடியும் பெற உள்ளார் ராதாகிஷன் தமணி.
இதன் மூலம் மொத்த 5 ஆண்டு காலத்தில் சுமார் ரூ.18 கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
One SGG Ventures
One SGG Ventures LLP என்பது கோலாபூர் தலைமையிடமாக கொண்ட சஞ்சய் கோடாவத் குழுமத்தின் ஒரு பிரிவு. இந்தக் குழுமம் எரிசக்தி, விமானம், நுகர்வோர் பொருட்கள், கல்வி, ரியல் எஸ்டேட், சில்லறை வணிகம் உள்ளிட்ட பல துறைகளில் செயல்பட்டு வருகிறது.
தமணியின் பெரும் முதலீடு
ராதாகிருஷ்ணன் தமணியும் அவரது குடும்பமும் 2023-ல் இந்த 'த்ரீ சிக்ஸ்டி வெஸ்ட்' அப்பார்ட்மென்ட்டில் சுமார் 28 வீடுகளை ரூ.1,238 கோடிக்கு வாங்கியது நாடு முழுவதும் பெரும் செய்தியானது. இந்த ரியல் எஸ்டேட் முதலீடு தற்போது பெரும் லாபத்தை கொடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications