முதல்வர் விஜய் முதலீடுகள் எப்படி இருக்கு? மார்க் போடும் ஆனந்த் சீனிவாசன்.. என்ன இப்படி சொல்லிட்டாரு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த விஜய், இப்போது தமிழ்நாடு முதல்வராகப் பதவியேற்றுள்ளார். இப்போது மீண்டும் அவரது முதலீடு, வருமானம் ஆகியவை இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன், விஜய் முதலீடுகள் தொடர்பாக சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்து. 108 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்த நிலையில், தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இருப்பினும், மெஜாரிட்டி இல்லாததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு விஜய் ஆட்சியை அமைத்தார்.

Anand Srinivasan on Vijay Net Worth Anand Srinivasan Vijay

விஜய்

நேற்று அவர் முதல்வராகப் பதவியேற்ற நிலையில், இன்று தமிழ்நாடு சட்டசபை கூடியது. அதில் முதல் நபராக விஜய் எம்எல்ஏவாகாவும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். இதற்கிடையே விஜய் மற்றும் அவரது அமைச்சரவையில் உள்ளவர்களின் சொத்து மதிப்பு, முதலீடுகள் ஆகியவை இப்போது மீண்டும் பேசுபொருள் ஆகியுள்ளது.

தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தபோது, விஜய் தனது சொத்து விவரங்களை வெளியிட்டிருந்தார். சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் இருந்தாலும், அதில் அவர் கடைப்பிடித்துள்ள நிதி மேலாண்மை தான் பலரையும் ஆச்சரியப்பட வைத்திருந்தது. இப்போது விஜய் முதல்வராகப் பதவியேற்றுள்ள நிலையில், அது மீண்டும் பேசுபொருள் ஆகியிருக்கிறது.

சொகுசு கார்கள்

விஜய்யின் பிரமாணப் பத்திரத்தின்படி, அவரிடம் சுமார் 404 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், 220 கோடி ரூபாய் மதிப்பிலான அசையாச் சொத்துக்களும் உள்ளன. இதில் ஹைலைட் என்னவென்றால், அவரது வங்கிக் கணக்குகளில் மட்டும் 313 கோடி ரூபாய்க்கும் மேல் இருப்பு உள்ளதுதான். குறிப்பாக, ஒரே சேமிப்புக் கணக்கில் 213 கோடி ரூபாயை வைத்திருப்பது, அவரிடம் இருக்கும் மிகப் பெரிய லிக்விட் கேஷ் இருப்பதைக் காட்டுகிறது.

ஆனந்த் சீனிவாசன்

அதேபோல பல்வேறு சொகுசு கார்களையும் வைத்துள்ளார். அந்த சொகுசு கார்கள் மதிப்பே 15 கோடி ரூபாய் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லெக்ஸஸ் 350, பிஎம்டபிள்யூ i7, டொயோட்டா வெல்ஃபையர் உள்ளிட்ட கார்கள் உள்ளன. இதற்கிடையே விஜய்யின் முதலீடுகள் தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில் சில கருத்துகளைக் கூறியுள்ளார்.

அதில் அவர், "இந்த சொகுசு கார்களை எல்லாம் சொத்தாகக் கருத முடியாது. வரும் காலத்தில் யாராவது சிலர் இது விஜய் வைத்திருந்த கார் எனச் சொல்லி விற்கலாம். அதாவது இந்தப் பொருட்கள் பின்னொரு நாளில் 'இது விஜய்யின் கார்' என்ற அடிப்படையில் ஒரு 'கலெக்டபிள்' ஆக மாற வாய்ப்பு உண்டே தவிர, இவற்றால் நேரடி நிதி லாபம் ஏதுமில்லை.

லைப் ஸ்டைல்

சிலர் வரி சேமிப்பிற்காகக் கூட விஜய் சொகுசு கார்களை வாங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை. வரி சேமிப்பு வேறு.. முதலீடு வேறு.. லைஃப் ஸ்டைலுக்காகவே இந்த கார்களை வாங்குகிறார்கள். எனக்கு அந்த காரில் செல்ல வேண்டும் என்ற விருப்பம் காரணமாகவே இந்த கார்களை வாங்குகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் காங்கிரஸ் கட்சியிலும் இருக்கிறார். அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக மற்றும் தகவல் தொடர்புத் துறைத் தலைவராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+