ஐடி துறை இனி என்ன கதி ஆகுமோ? ஏஐ கோடிங் நிறுவனத்தை வாங்கும் எலான் மஸ்க்!

Subscribe to Oneindia Tamil

உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் தனது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட திட்டமிட்டு வரும் இதேவேளையில் ஏஐ துறையில் வேகமாக வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக முக்கியமான முடிவை எடுத்துள்ளார். தற்போது ஏஐ நிறுவனங்கள் அனைத்தும் கோடிங் செய்வதை எளிதாகுவதன் மூலமாக பெரிய அளவிலான புரட்சியை செய்து வரும் வேளையில் எலான் மஸ்க்-ம் இதில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் AI கோடிங் தொழில்நுட்ப நிறுவனமான Cursor-ஐ சுமார் 60 பில்லியன் டாலர் மதிப்பில் இந்த ஆண்டு இறுதியில் வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்துள்ளது. இல்லையெனில் இரு நிறுவனங்களும் இணைந்து பணியாற்றுவதற்காக 10 பில்லியன் டாலர் செலவிட முடிவு செய்துள்ளது.

elon musk AI IT Coding OpenAI software coding software engineer SpaceX Cursor Acquisition SpaceX AI Coding Push Elon Musk xAI Cursor Deal 60 Billion AI Startup Deal Cursor AI Coding Assistant Cursor AI xAI Cursor 60 AI Cursor AI spacex cursor acquisition 60 billion spacex ai coding startup deal elon musk spacex cursor collaboration spacex xai merger cursor cursor ai coding assistant 60 billion ai deal spacex spacex plans ipo 2026 cursor musk vows rebuild xai coding tools cursor valuation 50 billion spacex catch up ai coding rivals cursor helps programmers write debug code anthropic openai ai coding competition spacex hardware ai integration cursor president oskar schulz statement ai vibe coding era startup cursor 60 AI cursor spacex xai cursor cursor AI 60 AI spacex 2026 ipo cursor xai cursor 50 spacex AI cursor anthropic openai AI spacex AI cursor AI

இந்த ஒப்பந்தம் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் AI கோடிங் துறையில் பெரிய அளவில் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்பை பெறும். இதோடு ஒப்பன்ஏஐ, கிளாட் போன்ற சக போட்டியாளர்களுக்கு இணையாக ஏஐ துறையில் போட்டிபோடும் திறனை ஸ்பேஸ்எக்ஸ் பெரும். ஏன் ஸ்பேஸ்எக்ஸ்? சமீபத்தில் எலான் மஸ்க் டிவிட்டர், Grok ஆகியவற்றின் தாய் நிறுவனமான xAI நிறுவனத்தை ஸ்பேஸ்எக்ஸ் உடன் இணைத்தது. இதன் வாயிலாக கர்சர் நிறுவனத்தை ஸ்பேஸ்எக்ஸ் வாங்கி அதை xAI உடன் இணைக்கும்.

இந்த ஆண்டு இறுதியில் ஸ்பேஸ்எக்ஸ் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட உள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் மூலம் நிறுவனத்தின் AI துறை மதிப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஐ கோடிங் பிரிவில் xAI பெரிய அளவில் பின்தங்கியிருக்கும் வேளையில், இப்பிரிவில் வேகமாக வளர்ச்சி அடைய சில மாதங்களுக்கு கர்சர் நிறுவனத்தில் இருந்து முக்கிய அதிகாரிகளை தனது நிறுவன பணியில் அமர்த்தினார். இது பலன் அளித்த நிலையில் தற்போது கர்சர் நிறுவனத்தையே மொத்தமாக வாங்க முடிவு செய்துள்ளார் எலான் மஸ்க்.

Cursor 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு AI கோடிங் அசிஸ்டென்ட் நிறுவனமாகும், இது சாப்ட்வேர் புரோகிராமர்களுக்கு கோடிங் எழுதவும், கோடிங்கில் ஏற்படும் பிழைகளை சரிசெய்யவும் உதவுகிறது. இதேபோல் பலதரப்பட்ட ப்ரோகிராமிங் லேங்வேஜ்-ல் நொடிகளில் கோடிங் செய்யும் திறன் கொண்டதாக உள்ளது.

இது டெக் உலகில் "வைப் கோடிங்" என்று அழைக்கப்படும் புதிய யுகத்தில் மிக வேகமாக வளர்ந்த நிறுவனங்களில் ஒன்று. சமீபத்தில் இது 50 பில்லியன் டாலர் மதிப்பில் 2 பில்லியன் டாலர் நிதியை திரட்டும் பேச்சுவார்த்தையில் கர்சர் இருந்தது. Nvidia மற்றும் Andreessen Horowitz போன்ற பெரிய நிறுவனங்கள் இதில் பங்கேற்க தயாராக இருந்தன.

இதற்கு மத்தியில் தான் கர்சர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். என்விடியாவின் ஜென்சன் ஹுவாங் மற்றும் Andreessen Horowitz நிறுவனத்தின் தலைவரும் எலான் மஸ்க்-ன் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தம் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் xAI-க்கு AI கோடிங் துறையில் வலுவான அடித்தளத்தை உருவாக்கும். AI கோடிங் துறையில் Anthropic, OpenAI உள்ளிட்ட பல நிறுவனங்கள் போட்டியிட்டு வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் ஸ்பேஸ்எக்ஸ்-க்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.

ஏற்கனவே Anthropic-ன் கிளாட் ஏஐ தளம் ஐடி ஊழியர்கள், ஐடி சேவை நிறுவனங்கள், கன்சல்டிங் நிறுவனங்களின் வர்த்தகத்தையும், தேவையையும் பாதியாக குறைத்திருக்கும் வேளையில், எலான் மஸ்க் தலைமையிலான கர்சர் இத்துறைக்கு வருவது பெரும் தாக்கத்தை உருவாக்கும் என கணிக்கப்படுகிறது. இதன் மூலம் கார்க், எக்ஸ் தளத்தை பயன்படுத்தும் அனைவரும் இனி வரும் காலக்கட்டத்தில் கர்சர் தளத்தை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+