புதிய EPFO ரூல்ஸ் ரொம்ப குழப்புதா? எளிமையாக விளக்கிய பிரபல பொருளாதார வல்லுநர்! இவ்வளவு தான் மேட்டர்
சென்னை: மத்திய அரசு சமீபத்தில் தான் புதிய EPFOஇல் இருந்து பணம் எடுக்கும் விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை அறிவித்திருந்தது. இருப்பினும், அதன் புதிய விதிகள் குழப்பம் வகையில் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர். இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ராஜேஷ் இது தொடர்பாக எளிய விளக்கங்களைக் கொடுத்துள்ளார்.
திடீரென எதாவது ஒரு எமர்ஜென்சி என்றால் கடன் வாங்க வேண்டாம் என நினைக்கும் பலரும் EPFO எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் இருந்து பணத்தை எடுப்பார்கள். மாத சம்பளம் வாங்கும் பலருக்கும் இது அவசர காலத்தில் பெரியளவில் உதவியுள்ளது. இருப்பினும், நினைத்தவுடன் எல்லாம் இதில் இருந்து பணம் எடுக்க முடியாது. இதற்கென சில கட்டுப்பாடுகள் இருந்தன.

மாறிய ரூல்ஸ்
இதற்கிடையே மத்திய அரசு சமீபத்தில் தான் EPF பணம் எடுக்கும் விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை அறிவித்திருந்தது. EPF பணம் எடுக்கும் ரூல்ஸகளை எளிமையாக்குவதே இதன் பிரதான நோக்கமாகும். இருப்பினும், மத்திய அரசின் விதிமுறைகள் குழப்பும் வகையில் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் கூறி வருகிறார்கள்.
பொருளாதார வல்லுநர்
இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ராஜேஷ் இது குறித்து விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "புதிய EPF பணம் எடுக்கும் விதிமுறைகள்...
எத்தனை காரணங்களுக்கு எடுக்கலாம்?
- தற்போது: 13 காரணங்கள் (வீடு வாங்குதல், கல்வி, திருமணம் போன்றவை)..
- புதிய விதி: 3 காரணங்கள் மட்டும் (அத்தியாவசிய தேவைகள், வீடு வாங்குதல், சிறப்பு சூழ்நிலைகள்)
எளிய விளக்கம்
- ஆவணங்கள் தேவையா? தற்போது: பெரும்பாலும் தேவையில்லை.. புதிய விதி: தேவையில்லை
- 'சிறப்பு சூழ்நிலைகள்' என்றால் என்ன? தற்போது: வரையறை இல்லை.. புதிய விதி: எந்த நோக்கத்திற்கும் பணம் எடுக்கலாம்..
- எத்தனை முறை எடுக்கலாம்? தற்போது: திருமணம் & கல்விக்கு 3 முறை, வீடு கட்டுவதற்கு 1 முறை.. புதிய விதி: திருமணத்திற்கு 5 முறை, கல்விக்கு 10 முறை, வீட்டு வசதி: தெளிவில்லை, சிறப்பு சூழ்நிலைகள்: வருடத்திற்கு 2 முறை
- எவ்வளவு எடுக்கலாம்? தற்போது: வெவ்வேறு விதிகள் (எ.கா: வீடு வாங்க அடிப்படை சம்பளத்தின் 36 மடங்கு), புதிய விதி: ஒரே விதி - மொத்த தொகையில் 75%
காலக்கெடு
எவ்வளவு விரைவில் எடுக்கலாம்? தற்போது: வெவ்வேறு காலக்கெடு (வீட்டிற்கு 5 ஆண்டுகள், திருமணம்/கல்விக்கு 7 ஆண்டுகள்), புதிய விதி: எல்லாவற்றிற்கும் 1 ஆண்டு
முழுமையான மற்றும் இறுதி EPF பணம் தற்போது: வேலையின்மை 1 மாதத்திற்குப் பின் 75%, வேலையின்மை 2 மாதங்களுக்குப் பின் 100%.. புதிய விதி: வேலையின்மை 1 மாதத்திற்குப் பின் 75%.. வேலையின்மை 12 மாதங்களுக்குப் பின் 100%" என்று பதிவிட்டுள்ளார்.
விதிகளில் மாற்றம்
தொடர்ந்து ஈபிஎஸ் பங்களிப்பு விதிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றம் குறித்து அவர், "EPS பங்களிப்பைப் பொறுத்தவரை (ஓய்வூதிய பங்களிப்பு) பணிக் காலம் 10 ஆண்டுகளுக்கு குறைவு என்றால் தற்போதைய விதி: வேலையின்மை 2 மாதங்களுக்குப் பின்! புதிய விதி: வேலையின்மை 36 மாதங்களுக்குப் பின் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பணிக் காலம் 10 ஆண்டுகளுக்கு மேல் என்றால் தற்போது & புதிய விதி என இரண்டிலும் எடுக்க முடியாது. 58 வயதிற்குப் பின் ஓய்வூதியம் கிடைக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
வரி விதிப்பு குறித்தும் விளக்கியுள்ள அவர், "வரி விதிப்பைப் பொறுத்தவரை 5 ஆண்டுகளுக்கு முன் என்றால் வரி விதிக்கப்படும் (ஊழியர் பங்களிப்பு + அதன் வட்டி தவிர).. 5 ஆண்டுகளுக்குப் பின்: வரி இல்லை" என்று தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், இந்த புதிய விதிகள் சில மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்று EPFO ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications