உலகின் டாப் 50 பெண் தொழில் அதிபர்கள் பட்டியலில் 4 இந்தியர்கள்
நியூயார்க்: உலகின் தலைசிறந்த 50 பெண் தொழில் அதிபர்கள் பட்டியலை பார்ச்சூன் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓ சந்தா கொச்சார் உள்பட 4 இந்திய பெண்கள் இடம் பிடித்துள்ளனர்.
பார்ச்சூன் பத்திரிக்கை உலகின் தலைசிறந்த 50 பெண் தொழில் அதிபர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் 4 இந்திய பெண்கள் இடம் பிடித்துள்ளனர்.
முதல் மூன்று இடங்களை வெளிநாட்டவர்களே பிடித்துள்ளனர்.

பெட்ரோபிராஸ்
உலகின் தலைசிறந்த 50 பெண் தொழில் அதிபர்கள் பட்டியலில் பிரேசிலைச் சேர்ந்த எண்ணெய் மற்றும் கேஸ் கம்பெனியான பெட்ரோபிராஸின் சிஇஓ மரியா டாஸ் கிராஸஸ் ஃபாஸ்டர் முதலிடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டும் இவரே முதலிடத்தில் இருந்தார்.

2, 3வது இடங்கள்
உலகின் தலைசிறந்த 50 பெண் தொழில் அதிபர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் துருக்கியைச் சேர்ந்த சபான்சி ஹோல்டிங்ஸின் குலெர் சபான்சியும், மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான வெஸ்ட்பேக்கின் சிஇஏ கெய்ல் கெல்லியும் உள்ளனர்.

முன்னேறிய சந்தா
இந்த பட்டியலில் ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் 4வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு பட்டியலில் அவர் 5வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்ரா ராமகிருஷ்ணா
தேசிய பங்குச் சந்தையின் முதல் பெண் தலைவரான சித்ரா ராமகிருஷ்ணா இந்த பட்டியலில் 17வது இடத்தை பிடித்துள்ளார்.

ஷிகா, நைனா
இந்த பட்டியலில் ஆக்சிஸ் வங்கியின் ஷிகா சர்மா 32வது இடத்திலும், ஹெச்.எஸ்.பி.சி. இன் தலைவர் நைனா லால் கித்வாய் 42வது இடத்திலும் உள்ளனர்.

இந்திரா நூயி
அமெரிக்காவின் அதிகாரமிக்க பெண் தொழில் அதிபர்கள் பட்டியலை பார்ச்சூன் பத்திரிக்கை தனியாக வெளியிட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பெப்சி நிறுவன தலைவர் இந்திரா நூயி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications