Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாவிற்கு ருசியான பாரம்பரிய பலகாரங்களை ட்ரெட்டி ஃபுட்ஸ்.காமில் குஷியோட ஆர்டர் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

அல்வா, பால்கோவா உள்ளிட்ட அறுசுவை பலகாரங்களை ஆன்லைனில் https://www.tredyfoods.com இணையதளத்தில் ஆர்டர் செய்தால் போதும், எல்லாம் உங்கள் வீடு தேடி வரும்.

சென்னை: அல்வா, பால்கோவா உள்ளிட்ட அறுசுவை பலகாரங்களை ஆன்லைனில் https://www.tredyfoods.com இணையதளத்தில் ஆர்டர் செய்தால் போதும், எல்லாம் உங்கள் வீடு தேடி வரும்.

கமகமக்கும் நெய் சொட்டச் சொட்ட சுடச் சுட நெகு நெகுவென நெளியும் திருநெல்வேலி அல்வாவை நினைத்தாலே நா ஊறும். நாவை தாண்டி தொண்டையில் இறங்கும் போதே மனம் முழுவதும் இனிக்கும். மனதின் உத்தரவைக் கேட்டு அல்வாவை ருசிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டால் உடனே திருநெல்வேலிக்கு விமானமோ, ரயிலோ ஏற வேண்டிய அவசியமில்லை ஆன்லைனில் https://www.tredyfoods.com இணையதளத்திற்கு சென்று ஆர்டர் செய்தாலே போதும் உங்கள் வீடு தேடி பத்திரமாக வரும்.

கண்களைக் கவரும் வகையில் கடைகளில் எத்தனையோ இனிப்பு பலகாரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தாலும், பாரம்பரிய பலகாரங்களான அல்வா,முருக்கு, அதிரசம், பால்கோவா, சீடையை இன்றைக்கும் தேடி தேடி ருசிக்கின்றனர் சுவைப்பிரியர்கள்.

இதற்குக் காரணம், பலகாரங்களின் ருசியும் மணமும் நாவின் சுவை அரும்புகளை தட்டி எழுப்புவதுதான். நமது பாரம்பரிய பலகாரங்கள் அனைத்தையும் இன்றைய தலைமுறையினரும் மறக்காமல் ருசிக்க வேண்டும் என்பதற்காகவே www.tredyfoods.com இணையதளத்தில் விற்பனை செய்கின்றனர்.

From Halwa to Everything You Want: Tredyfoods gives you wide range of sweet options

பாரம்பரிய இனிப்பு பலகாரங்கள்:

திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மணப்பாறை அதிரசம், ஆட்டயம்பட்டி அதிரசம், குறுக்கத்தி இனிப்பு சீடை,மணப்பாறை முருக்கு, ஹோம் மேட் நிலக்கடலை உருண்டை என www.tredyfoods.com மில் வகை வகையாக பாரம்பரிய பலகாரங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. இந்த பலகாரங்கள் எல்லாமே அந்தந்த ஊர்களில் பிரத்யேகமாக தயாரிக்கப்படுபவை. மண் மணம் மாறாத பலகாரங்களின் சுவைக்கு அந்த ஊரின் தண்ணீர் முக்கிய காரணமாக இருக்கிறது. திருநெல்வேலி அல்வாவின் பிரத்யேக சுவைக்குக் காரணமே நெல்லையில் பாய்ந்தோடும் ஆற்றின் தண்ணீர்தான்.

From Halwa to Everything You Want: Tredyfoods gives you wide range of sweet options

ருசிப்பிரியர்களுக்கு ஏற்ற இணையதளம்:

ஆட்டயம்பட்டி அதிரசத்தை கையில் தொட்டாலே போதும் பொல பொலவென உதிரும் வாயில் போட்டாலே கரையும். இதே போலத்தான் சுண்டி இழுக்கும் நிறத்தோடு சுவையையும் ஆரோக்கியத்தையும் பரிசளிக்கிறது ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா. இன்றைக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பால்கோவாவின் சுவைக்கு அடிமையானவர்கள்தான். சுவைப்பிரியர்களுக்காகவே அத்தனை பலகாரங்களையும் தேடித் தேடி அந்தந்த ஊர்களில் இருந்து வாங்கிக் கொடுக்கிறது https://www.tredyfoods.com இணையதளம். சொடக்கு போடும் நேரத்தில் ஆர்டர் செய்யுங்கள் உங்களின் வீடு தேடி பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் வந்து சேரும்.

இனிப்போடு காரமும் இருக்கு:

நாவின் சுவைக்கு அடிமையானவர்களுக்கு பாரம்பரிய இனிப்பு பலகாரங்கள் மட்டுமல்ல, ஊரின் பெருமை பேசும் சாத்தூர் சேவு, மணப்பாறை முருக்கு, கோவில்பட்டி கடலை மிட்டாய், பாரம்பரிய கார வகைகளும், உணவிற்கு சுவை கூட்டும் ஊறுகாய்கள் என ஆயிரக்கணக்கான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தனித்தனியாக மட்டுமல்லாது கோம்போவாகவும் https://www.tredyfoods.com மில் ஆர்டர் செய்து வாங்கி ருசிக்கலாம்.

From Halwa to Everything You Want: Tredyfoods gives you wide range of sweet options

விரல் நுனியில் ஆர்டர்:

பலகாரங்களை ஆர்டர் செய்வதோடு சுவைஞர்களின் பணி முடிந்து விடுகிறது. ஆனால் www.tredyfoods.com அந்த பொருட்களை வாடிக்கையாளர்களின் கைகளில் பாதுகாப்பான பேக்கிங்கில் கொண்டு வந்து சேர்க்கிறது. இந்தியாவின் எந்த ஊரில் இருந்து ஆர்டர் செய்தாலும் டெலிவரி இலவசம்தான். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, யுஏஇ, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் வசிப்பவர்களும் நம்ம ஊர் பலகாரங்களை ருசிக்க ஆர்டர் செய்யலாம். கடைகளுக்கு சென்று சுவைத்து பார்த்து வாங்கினால் கூட இத்தனை தரமான பொருட்கள் உங்களுக்கு கிடைக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. அந்த அளவிற்கு தரமான ஸ்நாக்ஸ்களை உங்களின் இருப்பிடத்திற்கு கொண்டு வந்து சேர்க்கின்றனர். எங்கிருந்தும் எப்போதும் ஆர்டர் செய்து ருசித்து பாருங்க. பலகாரம் சாப்பிடும் ஆசை வரும்போதெல்லாம் உங்களின் கை விரல்கள் தானாக Tredyfoods.com ஐ தேடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+