9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?!
சென்னை: நவீன கார்ப்பரேட் உலகில் லட்சக்கணக்கில் சம்பளத்துடன் 'ஹை-பே' (High-pay) வேலைகள் அதிகம் இருந்தாலும், மன அமைதியும் மகிழ்ச்சியும் இல்லாததால் பலர் தங்களின் ஆடம்பர வாழ்க்கையைத் துறந்து எளிய வாழ்வியலை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகச் சமீபத்தில் இணையத்தில் வைரலான ஒரு சுவாரசியமான உண்மைச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
தொழில் முனைவோரான டாக்டர் நெஸ்ரின் மிட்லாஜ், சமீபத்தில் தனது ஆட்டோ பயணத்தின்போது சந்தித்த ஒரு பெண் ஓட்டுநரின் கதையை வீடியோவாக பதிவிட்டது மூலம், இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ஐடி மேனேஜராக 9 ஆண்டுகள் பணியாற்றிய அந்தப் பெண், மனஅழுத்தம் தரும் வேலையை விட்டுவிட்டு ஆட்டோ ஓட்டும் பணிக்கு மாறிய கதை பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

அமைதியைத் தேடி மாற்றம்
நெஸ்ரின் மிட்லாஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், தான் பயணித்த ஆட்டோவில் ஓட்டுநராக ஒரு பெண் இருந்துள்ளார். அவருடைய முகத்தில் நம்பிக்கை நிறைந்த புன்னகையும், அமைதியான பேச்சும் தன்னை ஈர்த்த நிலையில் அவரிடம் பேச துவங்கினார்.
அவரிடம் பேசும் போது சுமார் 9 ஆண்டுகளாக ஐடி மேனேஜராக பணியாற்றியுள்ளது, தெரிய வந்துள்ளது. ஆனால், தொடர்ந்த பணி சுமை, மன உளைச்சல் மற்றும் பதற்றம் காரணமாக அந்த வேலையை விட்டுவிட்டார். தற்போது சொந்த ஆட்டோவை ஓட்டி வருகிறார். மாதம் சுமார் 60,000 ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும், முக்கியமாக மன அமைதியுடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நெஸ்ரின் மிட்லாஜ், "ஒவ்வொரு வெற்றிக் கதையும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியமில்லை. புகழ் மற்றும் பதவியை விட, அமைதியைத் தேர்ந்தெடுப்பது சில சமயங்களில் மிகத் துணிச்சலான முடிவாக இருக்கும்" என்று தனது பதிவில் எழுதியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சி எங்கே இருக்கிறது என்பதைப் பற்றி கமெண்ட் செய்து வருகின்றனர்.
இன்றைய வேகமான தொழில் உலகில், அதிகப்படியான சம்பளம், பதவி மற்றும் அந்தஸ்தை நோக்கி ஓடும் இளைஞர்களுக்கு இந்தக் கதை ஒரு முக்கிய பாடமாக அமைகிறது. பணம் மற்றும் புகழ் மட்டுமே வெற்றி அல்ல; மன அமைதியும், திருப்தியும் மிக முக்கியம் என்பதை இந்தப் பெண் ஆட்டோ ஓட்டுநரின் வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது.
இன்றைய நுகர்வோர் கலாச்சாரத்தில் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோம் என்பதை விட, அன்றாட வாழ்க்கையை எவ்வளவு மகிழ்ச்சியாகவும் எளிய முறையிலும் வாழ்கிறோம் என்பதே முக்கியம் என்பதை உணர்த்துகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications