அஞ்சி நடுங்கும் GenZ தலைமுறையினர்..? 500 ரூபாய்க்கு காஃபி வாங்க முடியும்.. ஆனா.. இது முடியாது!

Subscribe to Oneindia Tamil

ஒரு கப் காபிக்காக 500, 1000 ரூபாய் செலவிட தயங்காத இளைஞர்கள், வீடு வாங்குவது, நீண்டகால கடன் எடுப்பது, குடும்ப சொத்து உருவாக்குவது போன்ற முக்கிய நிதி இலக்குகளில் ஏன் அதிக ஆர்வம் காட்டுவதில்லை? இது வெறும் வாழ்க்கை முறை மாற்றமா, அல்லது பொருளாதார அமைப்பில் ஏற்பட்டிருக்கும் பெரிய மாற்றத்தின் அறிகுறியா?

தற்போது உலகம் முழுவதும் பேசப்படும் Gen Z தலைமுறையின் செலவு பழக்கவழக்கங்கள், எதிர்கால நுகர்வு சந்தையையும், வீட்டு வசதி துறையையும், முதலீட்டு கலாச்சாரத்தையும் மாற்றக்கூடிய சக்தியாக மாறி வருகிறது.

Gen Z Millennials investment Gen Z spending habits Gen Z prefers coffee over house Raj Shamani Gen Z Gen Z financial goals India Gen Z middle class Gen Z real estate hesitation Gen Z lifestyle spending Gen Z vs Millennials finance Gen Z economic behavior India Gen Z consumption pattern Gen Z Gen Z vs Gen Z Gen Z Gen Z Gen Z Gen Z Gen Z vs Millennials Gen Z Gen Z

Gen Z தலைமுறையினர்

இந்தியாவில் Gen Z தலைமுறையினர் சிறு ஆடம்பரங்களில் பணத்தை தாராளமாக செலவிடுவதாகவும், ஆனால் வீடு வாங்குவது போன்ற நீண்டகால நிதி இலக்குகளில் கவனம் செலுத்துவதில்லை என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பிரபல பாட்காஸ்டர் மற்றும் தொழில்முனைவோர் ராஜ் ஷாமானி தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவரது கருத்து இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Gen Z ஏன் சிறு ஆடம்பரங்களில் பணம் செலவிடுகிறது?

ராஜ் ஷாமானி கூறுகையில், Gen Z இளைஞர்கள் நீண்டகால நிதி இலக்குகளை அடைவது இப்போது மிகவும் கடினமாகிவிட்டதாக உணர்கின்றனர். குறிப்பாக, வீடு வாங்குவது போன்ற முக்கியமான முடிவுகள் அவர்களுக்கு இப்போது முந்தைய தலைமுறையினருக்கு இருந்ததை விட மிகவும் தொலைவில் உள்ளதாகத் தெரிகிறது. காரணம் பெரு நகரங்களில் இருக்கும் ராக்கெட் வேகத்தில் உயர்திருக்கும் ரியல் எஸ்டேட் விலை.

இதனால் அவர்கள், அடைய முடியாது என்று நினைக்கும் இலக்குகளுக்காக தங்களைத் தாங்களே கட்டுப்படுத்தி, வறுத்திக்கொண்டு மன நிம்மதியை இழப்பதை விட, தினசரி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் சிறு செலவுகளில் பணத்தை செலவிட விரும்புகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

"வீடு வாங்குவது போன்ற நீண்டகால இலக்குகள் இந்த பொருளாதாரத்தில் முற்றிலும் எட்ட முடியாததாக உணரப்படுவதால், Gen Z இளைஞர்கள் உடனடி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் விஷயங்களுக்கு முன்னுரிமைப்படுத்துகின்றனர்" என்று ராஜ் ஷாமானி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வீடு வாங்குவது இப்போது கனவாகிவிட்டதா?

ராஜ் ஷாமானி கூறுகையில், ரியல் எஸ்டேட் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், இளைஞர்களின் சம்பளம் அதற்கேற்ப உயரவில்லை. இதனால் பல இளைஞர்கள் வீடு வாங்குவது போன்ற பெரிய நிதி இலக்குகளை அடைவது சாத்தியமில்லை என்று நினைக்கின்றனர்.

இதன் விளைவாக, அவர்கள் எதிர்காலத்திற்காக சேமிப்பதை விட, தற்போதைய வாழ்க்கையை இனிமையாக்கும் சிறு செலவுகளை மேற்கொள்கின்றனர் என்று அவர் விளக்கினார்.

இணையத்தில் கலவையான கருத்துக்கள்

ராஜ் ஷாமானியின் இந்தக் கருத்து இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர், Gen Z தலைமுறையினர் முந்தைய தலைமுறையினரை விட, கரியரின் ஆரம்பத்திலேயே முதலீடு செய்யத் தொடங்கியுள்ளதாகவும், அவர்கள் நிதி ரீதியாக மிகவும் விழிப்புடன் இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மற்ற சிலர், GenZ இளைஞர்கள் உயர் தரமான காபி போன்றவற்றில் பணம் செலவிடுவது, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைத் தேர்வுகள் மற்றும் சமூக தாக்கங்களால் ஏற்பட்டவை என்றும், இது நிதி நம்பிக்கையின்மையால் மட்டும் ஏற்பட்டதல்ல என்றும் வாதிட்டுள்ளனர்.

வாழ்க்கைத் தேர்வா அல்லது பொருளாதார நிலைமையா?

இந்த விஷயத்தில், சிலர் Gen Z இளைஞர்களின் செலவு செய்யும் முறை பொருளாதார நிலைமையால் ஏற்பட்டதாகவும், மற்ற சிலர் இது அவர்களின் வாழ்க்கைத் தேர்வு என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த விவாதம், இந்தியாவில் Gen Z தலைமுறையினரை தாண்டி கார்ப்ரேட் நிறுவனங்களுக்கும் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. காரணம் இவர்கள் தான் இனி வர்த்தக சந்தையை தீர்மானிக்கும் காரணியாக இருப்பதால், இவர்கள் எதில் அதிகம் செலவு செய்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டே வர்த்தக திட்டங்கள் அமைத்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+