Gold Price: ஏறுமுகத்தில் தங்கம் விலை.. இனி இதுதான் நிரந்தரமா.. தங்க நகை வாங்குவோர் என்ன செய்ய வேண்டும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகளாவிய சந்தைகளில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயர்ந்துள்ளன. இதற்கான முக்கிய காரணம் போர் பதற்றம் மற்றும் நாணய மதிப்பில் ஏற்பட்ட அடுத்தடுத்து மாற்றங்கள் தான். குறிப்பாக அமெரிக்கா - ஈரான் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளாக கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளியை நோக்கி நகர்ந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸுக்கு சுமார் 4,849 டாலர் வரை உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், வெள்ளி விலை சுமார் 81 டாலர் வரை அதிகரித்துள்ளது. தங்கத்தை விட வெள்ளி விலை அதிக வேகத்தில் உயர்ந்துள்ளது கவனிக்க வேண்டிய விஷயமாகும். கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை தொடர் ஏறுமுகத்தில் உள்ளது.

Gold Price Rise April 16 Silver Price Increase 2026 US Iran Tensions Gold Dollar Weakness Precious Metals Safe Haven Demand Gold Silver 16 2026 gold price rise April 16 2026 silver price increase April 16 US Iran tensions gold silver dollar weakness gold demand safe haven assets April 16 gold futures 4849 ounce silver futures 81 ounce Asian stock markets gold impact US inflation data gold support US Iran talks dollar effect industrial demand silver price global uncertainty precious metals COMEX gold silver trading mixed market signals gold rally oil volatility gold silver correlation 16 2026 16 16 4849 81 COMEX

இந்திய சந்தையில் மார்ச் மாதம் மிகவும் மோசமான காலமாக அமைந்தது, ஆம் ஒரு மாதத்தில் சுமார் 13.4 சதவீதம் வரையிலான தங்கம் விலை குறைந்துள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் மாதம் மெல்ல மெல்ல உயர்ந்து 14,320 ரூபாய் அளவுக்கு உயர்ந்த கிட்டத்தட்ட 2 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

பொதுவாக பங்கு சந்தைகள் உயர்ந்தால் தங்கத்தின் தேவை குறையும். ஆனால் தற்போதைய சூழலில், ஆசியா டூ அமெரிக்க பங்கு சந்தைகளும் சரி, தங்கம் - வெள்ளி விலையும் சரி ஒரே நேரத்தில் உயர்ந்துள்ளன. இது சந்தையில் கலவையான சிக்னல்கள் இருப்பதை காட்டுகிறது. ஒருபுறம் போர் பதற்றம் குறையும் என்ற நம்பிக்கை இருந்தாலும், மறுபுறம் இன்னும் உறுதியற்ற நிலை நீடிக்கிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை பங்குகள் மற்றும் பாதுகாப்பு சொத்துகள் என இரண்டிலும் பகிர்ந்து வருகின்றனர்.

வெள்ளி விலை உயர்விற்கு தொழில்துறை தேவைவும் முக்கிய காரணமாக உள்ளது. உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப துறைகளில் வெள்ளி அதிகம் பயன்படுத்தப்படுவதால் அதன் தேவை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இருப்பினும், உலக பொருளாதாரத்தில் நிலவும் uncertainty அதன் விலை உயர்வை ஒரு அளவுக்கு கட்டுப்படுத்துகிறது.

அமெரிக்க டாலர் மதிப்பு குறைவதும் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளை உயர்த்திய முக்கிய காரணமாகும். சமீபத்தில் அமெரிக்க பணவீக்கம் குறித்த தரவுகள் தளர்வாக இருந்ததும், அமெரிக்கா - ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பும் டாலரை பலவீனப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், எண்ணெய் விலைகள் இன்னும் நிலையற்ற நிலையில் உள்ளன. குறிப்பாக டிரம்ப் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கச்சா எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க அரசு ஈரான் மற்றும் ரஷ்ய கச்சா எண்ணெய் மீது விதித்துள்ள தடையை நீக்கி அனைத்து நாடுகளும் வாங்குவதற்கு அனுமதி அளித்திருந்த நிலையில், தற்போது இதற்காக அளிக்கப்பட்ட காலக்கெடு நீட்டிக்க முடியாது என அறிவித்துள்ளார். இதனால் உலகளவில் மீண்டும் சப்ளை குறையும் வாய்ப்பு உருவாகி கச்சா எண்ணெய் விலை உயரும்.

இந்த கச்சா எண்ணெய் விலை உயர்வு தங்கத்திற்கு எதிரானது என்பதால் தங்கம் விலை மீண்டும் குறையலாம். இதேபோல் பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்பதால் உலக நாடுகள் தங்களிடம் இருக்கும் தங்கத்தை தொடர்ந்து விற்பனையும் செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகும். இதனால் தங்கம் விலை 10000 ரூபாய் வரையில் சரிய கூட வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதனால் தங்கம் - வெள்ளி விலை தற்போது மொத்தமாக முதலீட்டு - பொருளாதாரத்துடன் பிணைந்துள்ளது என்பதால் சந்தையின் போக்கு தான் இதன் விலை உயர்வை தீர்மானிக்கும் என்பதால் போர் மற்றும் பொருளாதார மாற்றங்களை கவனித்து தங்கம் - வெள்ளியை வாங்குவது தான் சரியான முடிவாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+