தங்கம் விலை ரூ.7500க்கு சரியுமா? எல்லாருக்கும் உள்ள கேள்வி- ஆனந்த் சீனிவாசன் நறுக்! ஆஹா என்ன பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்றம் இறக்கம் என மாறி மாறியே இருந்து வருகிறது. இதனால் தங்கத்தை இப்போது வாங்கலாமா இல்லை.. கொஞ்சம் பொறுத்திருந்து வாங்கலாமா என்று தெரியாமல் மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். இதற்கிடையே தங்கம் விலை தொடர்பாகப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தாறுமாறாகவே இருந்து வருகிறது. ஏற்றம் இறக்கம் என்று மாறி மாறியே இருந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை 4 நாட்கள் உயர்ந்துள்ளது.. 3 நாட்கள் குறைந்துள்ளது.. கடந்த 3 நாட்கள் எந்தவொரு ஏற்ற இறக்கம் இல்லாமல் இருந்தது.

Anand Srinivasan Gold personal finance

தங்கம் விலை

இப்படி விலை ஏற்றம் அல்லது குறைவு என்பதில் எந்தவொரு தெளிவும் இல்லாமல் தங்கம் விலை தாறுமாறாகவே இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை கொஞ்சம் காத்திருந்தால் குறையுமா.. இல்லை ரேட் உயரும் என இப்போதே வாங்க வேண்டுமா என்பதில் மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் இது தொடர்பாக சில கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

ஆனந்த் சீனிவாசன்

இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கம் விலை ஏறும் என்றேன் ஏறி இருக்கிறது. அமெரிக்கா மீதான அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்கத் தங்கம் விலை உயரும் என்றேன். அதுவே தான் நடக்கிறது. இடையில் விலை குறைந்தபோது அதை வாங்க ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்தது. தங்கம் விலை இந்தாண்டு ரூ.8500 + வரி என்ற அளவுக்கு மட்டும் போகும் என நினைத்தேன். ஆனால், அதை எப்போதோ தாண்டிவிட்டது.

தங்கம் விலை குறைந்த போதும் ரூ.8700 வரை தான் போனது. அதற்குக் கீழ் பெரிதாகப் போகவில்லை. இப்போது அது ரூ.9000ஐ மீண்டும் நெருங்கிவிட்டது. கூடவே வரியும் இருக்கிறது. தங்கம் விலை அடுத்து எப்படிப் போகும் எனக் கேட்டால் நிச்சயம் அது அதிகரிக்கவே செய்யும். கொஞ்சம் விழுந்து விழுந்து ஏறும் அவ்வளவே.. அதேநேரம் பெரியளவில் தங்கம் விலை குறையுமா என்றால் குறையாது.

ரூ.7500க்கு போகுமா

அதாவது தங்கம் ரூ.7000க்கு போகுமா என்றால் போகாது.. தங்கம் விலை ரூ.8000க்கு போகுமா என்றால் மிக மிகக் குறைவான வாய்ப்புகளே உள்ளன. இதனால் தற்போதைய சூழலில் ரூ.7500க்கு எல்லாம் கண்டிப்பாகப் போகவே போகாது. ரூ.8000க்கு போவதே கஷ்டம். ரூ.8500 போவதே அபூர்வம். ரூ.8700 வரை சென்று மீண்டும் அதன் விலை ஏறலாம். இப்போது தங்கம் விலை மீண்டும் உயர வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் கூட சரிந்தே வருகிறது. ரிசர்வ் வங்கி டாலர் விற்பனை நிறுத்தினால் ரூபாய் மதிப்பு மேலும் சரியும். அடிப்படையில் நமது ஏற்றுமதி ஏறவில்லை. ஏற்றுமதி அதிகரித்து, டாலர் உள்ளே வராத வரை ரூபாய் மதிப்பு உயராது. இதனால் தங்கம் விலை நல்ல நிலையிலேயே இருக்கும். நாம் தங்கம் முதலீடு குறித்து கவலையே பட வேண்டாம்" என்றார்.

உயரவே வாய்ப்பு இருக்கு

அதேபோல அவர் தனது மற்றொரு வீடியோவில், "அமெரிக்காவில் 3100 டாலரில் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த தங்கம் விலை இப்போது பாதுகாப்பாக 3300 டாலரை தாண்டிவிட்டது. இதே டிரெண்ட் தொடர்ந்தால் ஆபரணத் தங்கம் ரூ.9000ஐ தாண்டிவிடும். ஏற்கனவே 24 கேரட் தங்கம் ஜிஎஸ்டியை சேர்த்தால் ரூ.10,000 நெருங்கிவிட்டது. இன்னும் கொஞ்சம் உயர்ந்தாலும் ரூ.10,000ஐ ஈஸியாக தாண்டிவிடும்" என்றார்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+