சர்வதேச சந்தையில் தடாலடியாக சரிந்த தங்கம் விலை.. சூப்பர் சான்ஸ் ஆச்சே! நாளை இந்தியாவில் என்னவாகும்?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கடந்த சில காலமாகவே நமது நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சம் தொட்டு வந்தது. கடந்த சில நாட்கள் சற்று குறைந்தாலும் மீண்டும் உயரும் என்றே பலரும் எதிர்பார்க்கிறார்கள். இதற்கிடையே இன்று சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை சட்டென சரிந்துள்ளது. இது இந்திய மார்கெட்டிலும் நாளை எதிரொலிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை கடந்த சில காலமாகவே தொடர்ந்து உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு வந்தது. கடந்த வாரம் இதுவரை இல்லாத அளவுக்கு 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தைத் தாண்டியது. தங்கம் விலை இந்தளவுக்கு உயர்வது இதுவே முதல்முறை. இதனால் மிடில் கிளாஸ் மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாத சூழல் இருக்கிறது.

Gold is down for more than 2 in international market as US-China trade tensions ease amp amp dollar rises

சரியும் தங்கம் விலை

இதற்கிடையே சர்வதேச மார்கெட்டில் இன்று வெள்ளிக்கிழமை தங்கம் விலை சட்டென சரிந்துள்ளது. அமெரிக்கச் சந்தையில் இன்று (ஏப்ரல் 25) ஒரே நாளில் தங்கம் விலை 2% வரை சரிந்துள்ளது. இதற்கு இரு காரணங்களைக் குறிப்பிடுகிறார்கள்.

காரணங்கள்

முதலில் அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தகப் போரே தங்கம் விலை உச்சம் தொடக் காரணமாக இருந்தது. இரு நாடுகளும் மாறி மாறி வரியை விதித்ததே தங்கம் விலை உச்சம் தொடக் காரணமாக இருந்தது. இதற்கிடையே இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை நடைபெறக்கூடும் எனத் தெரிகிறது. டிரம்ப்பும் கூட அதுபோலவே கருத்துகளைக் கூறியிருந்தார். மேலும், சீனாவும் அமெரிக்க இறக்குமதியில் சில குறிப்பிட்ட பொருட்களுக்கு வரியைக் குறைப்பதாக அறிவித்திருந்தது.

அதேபோல எப்போதும் டாலரும் தங்கமும் தலைகீழாக கனெக்டட்டாக இருக்கும். அதாவது டாலர் மதிப்பு உயர்ந்தால் தங்கம் விலை சரியும். டாலர் மதிப்பு குறைந்தால் தங்கம் விலை உயரும். இப்போது கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலர் மதிப்பு வலுவடைந்து வரும் நிலையில், அதுவும் தங்கம் விலை உயரக் காரணமாக இருக்கிறது.

தங்கம் விலை எவ்வளவு

அமெரிக்காவில் இப்போது ஸ்பாட் தங்கம் 1.9% குறைந்து ஒரு அவுன்ஸ் $3,284.13ஆக உள்ளது.. அதாவது இந்திய மதிப்பில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 9,883 ரூபாயாக உள்ளது. அதேபோல கோல்ட் ப்யூச்சர்ஸ் 1.6% குறைந்து $3,294.50 ஆக இருந்தது. இந்திய மதிப்பில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9923ஆக இருக்கிறது.

கடந்த ஒரு வாரமாகவே அமெரிக்காவில் தங்கம் விலை குறைந்தே வருகிறது. ஒரு வாரத்தில் கணிசமான அளவுக்குத் தங்கம் விலை டாலரில் குறைந்துள்ளது. ஆனால், இந்தியாவில் வரி மற்றும் டாலர்- ரூபாய் மதிப்பு காரணமாகத் தங்கம் விலை அந்தளவுக்குக் குறையவில்லை. இருப்பினும், கடந்த ஒரு வார டிரெண்டை வைத்துப் பார்க்கும் போது தங்கம் விலை குறைந்துள்ளது. இது வரும் காலங்களிலும் தொடரும் என்றே தெரிகிறது.

வல்லுநர்கள் சொல்வது என்ன

தங்கம் தொடர்பாக TD செக்யூரிட்டீஸ் கமாடிட்டி நிறுவனத்தின் டேனியல் காலி கூறுகையில், "வரியை நிறுத்தி வைத்துள்ளது தங்கத்தின் விலை குறைய உதவுகிறது. அதேநேரம் இதுவரை பெரியளவில் முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்கவில்லை" என்றார். அதாவது டிரம்ப் எப்போது என்ன பேசுவார் என்றே தெரியாது. இப்போது வரி நிலைமை சீராகி வருவது போலக் கூட டிரம்ப் எப்போது வேண்டுமானாலும் மாற்றி பேசலாம். இதன் காரணமாகவே முதலீட்டாளர்கள் பெரியளவில் தங்கத்தை விற்கவில்லை.

அதேநேரம் வர்த்தகப் போர் தான் தங்கம் விலை உயரப் பிரதானக் காரணமாக இருக்கிறது. வர்த்தகப் போர் சீரானால் தங்கம் விலை நிச்சயம் குறையவே செய்யும். தற்போதைய நிலைமையை வைத்துப் பார்த்தால் வர்த்தகப் போர் சீராகி வருவது போலவே தெரிவதால் தங்கம் விலை குறையவே வாய்ப்புகள் அதிகம் எனச் சொல்லப்படுகிறது.

இதர உலோகங்கள்

இதர உலகோர்களைப் பொறுத்தவரை ஸ்பாட் வெள்ளி 1.1% சரிந்து ஒரு அவுன்ஸ் $33.21ஆக இருக்கிறது. அதாவது ஒரு கிராம் சுமார் ரூ.100க்கு வர்த்தகமாகிறது. பிளாட்டினம் 0.5% சரிந்து $965.75ஆகவும், பல்லேடியம் 1.5% குறைந்து $939.82 ஆகவும் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+