நகைக்கடன் வாங்குவதை விட 'இது' பெஸ்ட் சாய்ஸ்.. யாரெல்லாம் வாங்கலாம்? என்ன பயன்? - முழு விபரம்

Subscribe to Oneindia Tamil

பொதுவாக இந்திய குடும்பங்களில் தங்கத்தை சேமிப்பின் முக்கிய வடிவமாக கருதுகின்றனர். மருத்துவ செலவு, குழந்தைகளின் படிப்பு, திருமணம், சொந்த வீடு வாங்குவது என பலதரப்பட்ட அவசர காலங்களில் உடனடியாக பண புழக்கத்தை உருவாக்க தங்க நகைகளை அடமானமாக வைத்து கடன் பெறுவது இந்திய மக்கள் காலம் காலமாக பின்பற்றி வரும் வழக்கமாக உள்ளது. இதனால் மக்கள் அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர், தங்கம் விலையும் தொடர்ந்து உயர்வதால் இது முக்கிய சொத்தாகவே மிடில் கிளாஸ் மக்கள் மத்தியில் உள்ளது.

பெரும்பாலான மக்கள் தங்க நகை கடனை மட்டுமே சாந்துள்ள நிலையில் இதற்கு மாற்றாக தற்போது வங்கிகள் மற்றும் NBFC நிறுவனங்கள் "கோல்டு ஓவர்ட்ராஃப்ட்" (Gold Overdraft) என்ற கடன் வசதியை அதிகளவில் வழங்கத் தொடங்கியுள்ளன. ஆனால் இதை பலரும் கவனிப்பது இல்லை.

Gold loan banks Gold Overdraft Gold Loan Personal Finance Banking Loan Comparison gold overdraft facility gold loan vs overdraft gold loan interest rates flexible credit against gold gold OD benefits gold backed loan India NBFC gold loan options overdraft vs term loan interest saving loan options gold collateral loan personal finance India short term credit options gold loan eligibility banking loan products India revolving credit gold NBFC

கோல்டு ஓவர்ட்ராஃப்ட் எப்படி செயல்படுகிறது?

கோல்டு ஓவர்ட்ராஃப்ட் என்பது, உங்கள் தங்க நகைகள் அல்லது தங்க சொத்துகளை அடமானமாக வைத்து, ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் (credit limit) பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுக்கக்கூடிய வசதியை அளிக்கும். இது ஒரு கிரெடிட் கார்டு அல்லது வங்கி ஓவர்ட்ராஃப்ட் போன்றே செயல்படுகிறது.

உங்கள் தங்கத்தின் சந்தை மதிப்பை அடிப்படையாகக் கொண்டு, வங்கி ஒரு வரம்பை நிர்ணயிக்கும். பொதுவாக ரூ.5 லட்சத்திற்கு மேல் உள்ள கடன்களுக்கு, தங்கத்தின் மதிப்பில் சுமார் 75% வரை மட்டுமே கடன் வரம்பு வழங்கப்படும்.

தங்க கடன் மற்றும் கோல்டு ஓவர்ட்ராஃப்ட் - வித்தியாசம்

தங்க நகைகடனில், முழு தொகையும் ஒரே முறையில் (lumpsum) வழங்கப்படும். ஆனால் தங்க ஓவர்ட்ராஃப்டில், நீங்கள் தேவையான அளவு பணத்தை மட்டுமே எடுத்து அதற்கான வட்டியை மட்டும் செலுத்தும் வாய்ப்பு உள்ளது.

இதில் மிக முக்கியமான வித்தியாசம் வட்டி கணக்கீட்டில் தான் உள்ளது. தங்க கடனில் முழு கடன் தொகைக்கு ஆரம்பத்திலிருந்தே வட்டி விதிக்கப்படும். ஆனால் கோல்டு ஓவர்ட்ராஃப்டில், நீங்கள் எடுத்த பணத்திற்கும், அதை பயன்படுத்திய காலத்திற்கும் மட்டுமே வட்டி வசூலிக்கப்படும். இதனால் தேவைக்கு ஏற்ப பணம் பயன்படுத்தும் நபர்களுக்கு இது அதிக நன்மையை அளிக்கிறது.

உதாரணமாக, நீங்கள் ஒரு வீடு கட்ட முடிவு செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். வீட்டு கட்ட ஹோம் லோன் கிடைத்துவிட்டு, ஆனால் ஒரு 2-5 லட்சம் ரூபாய் வீட்டின் இன்டிரீயர் பணிக்காக தேவைப்படுகிறது. இன்டிரீயர் பணிகள் முடிக்க 2-3 மாதம் வரை ஆகும், இதேபோலே பணத்தை உடனடியாக கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை, பணிகள் முடிக்க முடிக்க கொடுத்தால் போதும்.

இந்த நிலையில் நீங்கள் வீட்டில் இருக்கும் நகைகளை வைத்து நகைக்கடன் பெறுகிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள் மொத்த தொகையும் அதாவது 5 லட்சம் முதல் நாளே உங்கள் கைக்கு வந்துவிடும். நீங்கள் 5 லட்சத்தை உடனே செலவு செய்தாலும் சரி செலவு செய்யாவிட்டாலும் சரி முதல் நாளில் இருந்து வட்டி செலுத்தியாக வேண்டும்.

ஆனால் கோல்டு ஓவர்ட்ராஃப்ட்-ல் இதே 5 லட்சத்திற்கான கடன் லிமிட்டை நீங்கள் உங்களுடைய நகைக்கு பெற முடியும். முதல் மாதத்தில் 1 லட்சம், 2வது மாதத்தில் 2 லட்சம், 3 மாதத்தில் 2 லட்சம் என பிரித்து வாங்க முடியும். வட்டி கணக்கீடும் தொகை வாங்கப்பட்ட நாளில் இருந்து தான் கணக்கிடப்படும். இதனால் வட்டி தொகையில் பெரும் தொகையை உங்களால் இந்த கோல்டு ஓவர்ட்ராஃப்ட் திட்டத்தில் சேமிக்க முடியும்.

யாருக்கு கோல்டு ஓவர்ட்ராஃப்ட் சிறந்த தேர்வு?

ஒரே தவணையில் பெரிய தொகை தேவையில்லாமல், அவ்வப்போது பணம் தேவைப்படும் நபர்களுக்கு கோல்டு ஓவர்ட்ராஃப்ட் மிகவும் பொருத்தமானது. ஒரே தவணையில் மொத்த தொகையும் வேண்டும் என நினைப்பவர்களுக்கு தங்க கடன் தான் சரியான தேர்வு.

வட்டி விகிதங்கள் மற்றும் செலவுகள்

தற்போது வங்கிகளில் தங்க கடனின் வட்டி விகிதம் சுமார் 8.75% முதல் 9.30% வரை உள்ளது. கோல்டு ஓவர்ட்ராஃப்ட் வசதிக்கும் கிட்டத்தட்ட இதே போன்ற வட்டி விகிதங்கள் இருந்தாலும், சில சமயங்களில் processing charges போன்ற ஆரம்ப செலவுகள் அதிகமாக இருக்கலாம். இதை கவனித்து அதன்பின்பு வாங்கவும்.

கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

கோல்டு ஓவர்ட்ராஃப்ட் வசதிகள் பொதுவாக குறுகிய காலத்திற்கு வழங்கப்படுகின்றன. அவை காலாவதியான பின்பு புதுப்பிக்கப்பட வேண்டும். இதற்காக திரும்ப செலுத்தும் தேதி, வட்டி விகிதம், மற்றும் தாமதமானால் விதிக்கப்படும் அபராதங்கள் போன்ற நிபந்தனைகளை கவனமாக பின்பற்ற வேண்டும்.

கடன் திருப்பிச் செலுத்தப்படாத நிலையில், அடமானமாக வைத்துள்ள தங்கத்தை ஏலத்தில் விடும் விதிமுறைகளும் இருக்கும் என்பதால், சரியான தேதிக்குள் தங்க நகை கடனை செலுத்தி நிதி ஒழுங்கை கடைப்பிடிப்பது அவசியம்.

தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள்

இந்த வசதியை பெற, நீங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் அடையாள சான்று, முகவரி சான்று மற்றும் விண்ணப்ப படிவம் போன்ற அடிப்படை ஆவணங்கள் தேவையாகும். ஒவ்வொரு வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் விதிமுறைகள் சிறிய அளவில் மாறுபடலாம்.

கோல்டு ஓவர்ட்ராஃப்ட் என்பது நெகிழ்வான மற்றும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தக்கூடிய கடன் வசதியாக உள்ளது. பணம் அவ்வப்போது தேவைப்படும் குடும்பங்களுக்கு இது செலவு குறைவான மற்றும் சுலபமான தேர்வாக இருக்கும். ஆனால் சரியான திட்டமிடலுடன் பயன்படுத்தினால் மட்டுமே அதன் முழு பயனை பெற முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+