தங்கம் விலை 26% சரிவு.. மொத்தமும் போச்சு! அமெரிக்கா எடுக்கும் ஒற்றை முடிவு.. எல்லாத்தையும் மாத்தும்!

Subscribe to Oneindia Tamil

தங்கம்.. சாமானிய மக்களின் முக்கியமான முதலீட்டு சொத்து. ஆனால் கடந்த சில மாதங்களில் தங்கம் விலையில் ஏற்பட்ட தடுமாற்றம் முதலீட்டாளர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை, தற்போது கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் இனி வரும் காலத்தில் உயருமா அல்லது தொடர்ந்து குறைந்து பழைய விலைக்கே திரும்புமா என்பது தான் தற்போதைய முக்கியமான கேள்வியாக உள்ளது.

Gold silver Gold price crash 2026 MCX gold price fall Gold price correction reasons US Fed rate hike gold impact Gold price outlook September 2026 Why gold prices are falling Dollar strength gold price Gold vs AI stocks Gold seven month low Gold investment advice 2026 2026 MCX outlook 2026 vs AI 7 2026

இந்த நிலையில் இந்திய கமாடிட்டி சந்தையான MCX சந்தையில் தங்கத்தின் விலை, அதன் வரலாற்று உச்சத்திலிருந்து 26%க்கும் அதிகமாக குறைந்துள்ளது தான் தற்போது பெரும் பேசுபொருளாக உள்ளது.

காரணம், தங்கம் விலை ஒவ்வொரு முறையும் உச்சத்தை தொட்ட பின்பு சிறு காலத்தில் சரியும், அது இயல்பு தான். அப்படி சரியும் போது 20-25 சதவீதம் சரியும், இந்த சரிவுக்கு பின்பு மீண்டும் உயர துவங்கும். இதேபோல இந்த முறையும் நடக்குமா அல்லது தொடர்ந்து சரிவு பாதையிலேயே இருக்குமா என்பது அமெரிக்கா எடுக்கும் அந்த ஒற்றை முடிவில் தான் உள்ளது.

தங்க விலை எவ்வளவு சரிந்துள்ளது?

இந்திய ரீடைல் சந்தையில் தங்கம் பல்வேறு காரணிகள் அடிப்படையில் விலை மாறுப்படும் வேளையில், இதை கணக்கில் கொள்ள முடியாது. இதனால் MCX சந்தை தரவுகளின் படி தங்கத்தின் விலை, அதன் வரலாற்று உச்சமான 1,92,991 ரூபாயில் இருந்து தற்போது ரூ.1,41,977 அளவுக்கு குறைந்துள்ளது.

கிட்டதட்ட இது 26.433 சதவீத சரிவாகும். கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. வெள்ளியின் விலையும் கடுமையான விற்பனை அழுத்தத்தை சந்தித்து வருகிறது.

உலக அளவில் தங்கத்தின் விலை, கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தலாம் என்ற எதிர்பார்ப்பும், அமெரிக்க டாலரின் வலிமை மற்றும் பங்குச் சந்தைக்கு முதலீட்டாளர்கள் திரும்பியது ஆகியவை தங்க விலை சரிவுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

அமெரிக்கா கையில் குடுமி!

தங்க விலை சரிவுக்கு முக்கிய காரணம், அமெரிக்க வட்டி விகிதம் குறித்து நிலவி வரும் மாற்றுப்பட்ட பார்வை தான். சந்தை நிலவரப்படி, செப்டம்பர் மாதத்தில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த 66% வாய்ப்பு இருப்பதாக CME FedWatch தரவுகள் தெரிவிக்கின்றன.

பொதுவாக வட்டி விகிதம் உயரும் போது, தங்கம் போன்ற வருமானம் தராத சொத்துக்கள் அதாவது வட்டி வருமானம் தராத சொத்துக்களுக்கு எதிராக அமையும். அதாவது தங்கம் விலை வட்டி உயரும் போது குறையும். ஏனெனில், வட்டி தரும் முதலீடுகளில் அதிக வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்திலிருந்து வெளியேறுவார்கள்.

இதனால் செப்டம்பர் கூட்டத்தில் வட்டி உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இகு்ககும் காரணத்தால் தங்கம் தேவையில்லாத சொத்தாக மாறியுள்ளது. இது தான் தங்கம் விலை சரிவுக்கு அடிப்படை காரணமாக அமைந்துள்ளது, ஆனால் இந்த சரிவுக்கு வலு சேர்க்க பல துணை காரணங்கும் அடங்கும்.

டாலரின் வலிமை

அமெரிக்க டாலரின் மதிப்பு கடுமையாக உயர்ந்துள்ளது. டாலர் இண்டெக்ஸ் 101-ஐ தாண்டி, 2025 மே மாதத்திற்குப் பிறகு இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை டாலரில் கணக்கிடப்படுவதால், டாலரின் வலிமை தங்க விலையை கீழே இழுக்கிறது.

கடந்த வாரம் நடந்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் கூட்டத்திற்குப் பிறகு, தங்கத்தின் விலை 6%க்கும் அதிகமாக சரிந்துள்ளது. இதன் மூலம் தங்கத்தின் விலை 4000 டாலர் அளவுக்கு கீழே இறங்கியது, இது 2025 நவம்பர் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக நிகழ்ந்துள்ளது.

இந்த சரிவு, தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு குறுகிய காலத்தில் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நீண்டகாலத்தில் தங்கம் இன்னும் பாதுகாப்பான சொத்தாக பார்க்கப்படும் நிலையில், தற்போதைய விலை சரிவு முதலீட்டாளர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் அமையலாம். எனவே சரியாக திட்டமிட்டு உங்களுடைய ரிஸ்க் எடுக்கும் திறன் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+