இதுவே கடைசி வாய்ப்பு.. இதை விட்டால் தங்கத்தை பிடிக்கவே முடியாது.. ஷாக் கொடுத்த ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை இப்போது புதிய உச்சத்தைத் தொட்டு 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8000ஐ நெருங்கி வருகிறது. இந்த நேரத்தில் தங்கத்தை வாங்கலாமா.. இல்லை விலை சற்று குறையுமா என்பது குறித்து பலரும் குழம்பி இருக்கிறார்கள். இதற்கான பதிலை ஆனந்த் சீனிவாசன் கொடுத்துள்ளார். இது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. குறிப்பாகக் கடந்த ஒரு வாரத்தில் ஒரு ரூபாய் கூட தங்கம் விலை குறையவில்லை. ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை ரூ. 200க்கு மேல் உயர்ந்துள்ளது.

தங்கம் விலை: நேற்றைய தினம் சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7300க்கு விற்கப்பட்டது. அதேபோல 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7964க்கு விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்துவிட்டது. 22 கேரட் தங்கம் ரூ.40 உயர்ந்து ரூ.7340க்கும் 24 கேரட் தங்கம் ரூ.43 உயர்ந்து ரூ.8007க்கும் விற்கப்படுகிறது. தங்கம் விலை இந்தளவுக்கு உயரும் நிலையில், இப்போதே உடனடியாக தங்கத்தை வாங்கலாமா.. இல்லை கொஞ்ச நாள்கள் காத்திருக்கலாமா என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் வீடியோவில், "அமெரிக்காவில் தங்கம் விலை இப்போது ஒரு அவுன்ஸ் 2748 டாலர் வரை சென்றுவிட்டது. அதாவது அமெரிக்காவில் தங்கம் விலை அதிகரித்துள்ளது. ஆனால், இந்தியாவில் இதுவரை அந்தளவுக்கு உயரவில்லை.. ஆனால், சில நாட்களில் இதன் எதிரொலியாக இந்தியாவிலும் நிச்சயம் தங்கம் விலை அதிகரிக்கும். ராக்கெட்டில் ஏறிய தங்கம் இப்போது சூப்பராக போய் கொண்டு இருக்கிறது.
உச்சம்: அதேபோல 24 கேரட் தங்கம் நேற்று ஒரு கிராம் ரூ.7965க்கு விற்கப்பட்டது. இது மிக விரைவில் ரூ.8000ஐ தாண்டிவிடும். இத்துடன் நாம் ஜிஎஸ்டி வேறு கொடுத்துத் தங்கத்தை வாங்க வேண்டும்.
இந்தியாவில் இப்போது பண்டிகை சீசன் மற்றும் கல்யாண சீசன் வருகிறது. எனவே, இந்தளவுக்குத் தங்கம் விலை உயர்ந்தாலும் அதை மக்கள் வாங்கவே செய்வார்கள். தங்கம் அடுத்த 2 ஆண்டுகளுக்குத் தேவை.. இரண்டு ஆண்டுகளில் வீட்டில் எதாவது திருமணம் இருக்கிறது என்றால் உடனடியாக இப்போதே தங்கத்தை வாங்கிப் போடுங்கள்.
இனியும் உயரும்: தங்கம் விலை அதிகரிப்பதால் பல நகைக் கடை நிறுவனங்களின் வருமானமும் அதிகரித்துள்ளது. சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள் இன்னும் தங்கத்தை வாங்குவதாகவும் அதுவே தங்கம் விலை அதிகரிக்கக் காரணம் என்றும் சிலர் சொல்கிறார்கள். எது எப்படியாக இருந்தாலும் தங்கம் விலை உயரவே போகிறது" என்றார்.
அதேபோல அவர் தனது மற்றொரு முந்தைய வீடியோவில், "தங்கம் விலை தீபாவளி ராக்கெட் போல சர்னு பறக்குது. இந்த முறை தீபாவளிக்கு ராக்கெட் இல்லை தங்கம் தான். 22 கேரட் தங்கம் இப்போதே ரூ. 7300ஐ தாண்டிவிட்டது. இத்துடன் ஜிஎஸ்டி, செய்கூலி எல்லாம் சேர்த்தால் ரூ.8000ஐ நெருங்கிவிட்டது.
ரூ.8000: 24 கேரட் தங்கம் ஜிஎஸ்டியை சேர்த்தால் இப்போதே ரூ. 8000ஐ தாண்டிவிட்டது. இதுவே இன்றைய தலைப்பு செய்தி.. தங்கம் விலை ரூ.8000ஐ தாண்டிவிட்டது. இன்னும் கூட தங்கம் விலை கொஞ்சம் ராக்கெட்டில் ஏறும் என்றே நினைக்கிறேன். 24 கேரட்டும் சரி, 22 கேரட் தங்கமும் சரி இன்னும் ரூ.1000 வரை உயர வாய்ப்பு இருக்கிறது. எனவே, யாராவது தங்கம் வாங்க வேண்டும் என்று நினைத்தால் இதுவே சரியான நேரம். இனிமேல் தங்கம் ரூ.8000க்கு கீழ் கிடைக்காது" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications