நாளை எழுந்தவுடன் கடைக்கு போங்க.. சர்வதேச மார்க்கெட்டில் பட்டென எகிறிய தங்கம் விலை! மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கடந்த இரண்டு வாரங்களாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், அது இந்தியச் சந்தையிலும் எதிரொலித்தது. இதற்கிடையே இப்போது அமெரிக்கச் சந்தையில் தங்கம் விலை சட்டென எகிறியுள்ளது. இன்று ஒரே நாளில் 2% வரை தங்கம் விலை சர்வதேச மார்க்கெட்டில் அதிகரித்துள்ளது.

அதிபர் டிரம்ப் வந்தது முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சம் தொட்டு வந்தது. இதற்கு டிரம்ப் அறிவித்த வரிக் கொள்கைகளே முக்கியமான காரணமாக இருந்தது. ஆனால், சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு வாரமாகத் தங்கம் விலை சற்று குறைந்து வந்தது.

Gold Prices Rise Over 2 on Weaker Dollar Tariff Fears Before Fed Meeting

வர்த்தகப் போர்

சீனா அமெரிக்கா இடையேயான வர்த்தகப் போர் கடந்த இரு வாரங்களாகச் சீராகி வந்ததே தங்கம் விலை குறையப் பிரதானக் காரணமாக இருந்தது. ஆனால், டிரம்ப் திடீரென மீண்டும் வர்த்தகப் பதற்றத்தை அதிகரித்துள்ளார். வெளிநாட்டில் எடுக்கப்படும் ஹாலிவுட் படங்களுக்கு டிரம்ப் வரியை அறிவித்துள்ளார்.

அதிகரிக்கும் தங்கம் விலை

இதனால் தங்கம் விலை தடாலடியாக உயரத் தொடங்கியுள்ளது. மேலும், டாலர் மதிப்பும் பலவீனமடையத் தொடங்கிய நிலையில், இன்று ஒரே நாளில் தங்கம் விலை 2% மேல் உயர்ந்துள்ளது. மாலை 5 மணியளவில் ஸ்பாட் தங்கம் 2.3% உயர்ந்து ஒரு அவுன்ஸ் $3,313.21ஆக இருக்கிறது. அதாவது 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,972 என்ற ரேஞ்சில் இருக்கிறது.

அதேபோல கோல்ட் ப்யூச்சர்ஸ் 2.4% உயர்ந்து $3,322ஆக வர்த்தகமாகிறது. அதாவது 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,994 என்ற ரேஞ்சில் வர்த்தகமாகிறது. டாலர் மதிப்பும் இன்று ஒரே நாளில் 0.4% குறைந்துள்ளது. அமெரிக்காவில் தங்கம் விலை அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது.

காரணம் டிரம்ப்

அதேநேரம் அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரியை டிரம்ப் அறிவித்ததே தங்கம் விலை அதிகரிக்கப் பிரதானக் காரணமாக இருக்கிறது. டிரம்ப்பின் இந்த நடவடிக்கையால் பாதுகாப்பான முதலீட்டை நோக்கி முதலீட்டாளர்கள் திரும்பியுள்ளனர். இதன் காரணமாகவே தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

வல்லுநர்கள் சொல்வது என்ன

இது தொடர்பாக சுவிஸ் கோட்டின் வல்லுநர் கார்லோ ஆல்பர்டோ டி காசா கூறுகையில், "அமெரிக்க டாலர் மதிப்பு குறைந்து வருகிறது. இது தங்கத்திற்குச் சாதகமானது.. கடந்த வாரம் அமெரிக்கா ஜிடிபி எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறைந்தது. அதேபோல கச்சா எண்ணெய் விலையும் சரிந்துள்ளது. இதனால் அமெரிக்க பெடரல் வங்கி இந்த வாரம் நடக்கும் கூட்டத்தில் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்று முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள். இதுவே தங்கம் விலை அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது" என்றார்.

அதேநேரம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவலின் கடந்த காலப் பேச்சுக்களைக் கவனித்தால் வட்டி குறைப்பு இப்போது சாத்தியமில்லை என்றே தெரிகிறது. தற்போது இருக்கும் வட்டியைத் தொடரும் முடிவையே ஜெரோம் பவுல் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இந்தாண்டு வரும் காலங்களில் எத்தனை சதவிகிதம் வட்டியைக் குறைப்பார் என்பது குறித்தும் ஜெரோம் பவல் முக்கிய கருத்துகளைப் பகிர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்ப் உடன் மோதல்

மறுபுறம் வட்டியைக் குறைக்க மாட்டேன் என ஜெரோம் பவுல் சொன்னதால் முன்பு டிரம்ப்பிற்கும் அவருக்கும் மோதல் எழுந்தது. ஜெரோம் பவல் பதவிக்காலம் மே 2026 வரை இருக்கும் நிலையில், அதற்கு முன்பே அவரை நீக்கப் போகிறேன் என டிரம்ப் முதலில் கூறியிருந்தார். அமெரிக்கச் சட்டத்தில் அதற்கு இடமில்லை என்பதால் முடிந்தால் நீக்கிக் கொள்ளுங்கள் என்ற ரேஞ்சில் ஜெரோம் பவல் சவால் விடுத்திருந்தார். இதுவும் அங்கு பேசுபொருள் ஆனது. ஆனால், இப்போது திடீரென யூடர்ன் போட்ட டிரம்ப் ஜெரோம் பவுலை பதவிநீக்கம் செய்ய மாட்டேன் எனக் கூறியிருக்கிறார்.

அடுத்து என்ன நடக்கும்?

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் மே 6, 7 தேதிகளில் அமெரிக்க பெடரல் வங்கி கூட்டம் நடக்கிறது. அது முடிந்த பிறகு ஜெரோம் பவுல் என்ன செய்கிறார் என்பதைப் பொறுத்தே தங்கம் விலை இருக்கும். வட்டியைக் குறைத்தால் தங்கம் விலை எகிறும். இந்தாண்டு வட்டியைக் குறைப்பது கடினம் என்பது போலச் சொன்னால் தங்கம் விலை குறையும்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+