Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கத்தை மொத்தமாக கட்டவிழ்க்கும் புதின்? பாதாளத்தில் விழும் கோல்ட்.. ரூ.10,000 வரை கூட போகுமாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகக் கொஞ்சம் சரிந்தாலும் பெரியளவில் சரியவில்லை. அப்படியிருக்கும்போது தங்கம் ஒரேயடியாகச் சரிந்து ஒரு சவரன் ஒரு லட்ச ரூபாய்க்குக் கீழ் வரலாம் என்கிறார்கள். ஒரே நேரத்தில் இந்தளவுக்குத் தங்கம் விலை சரியுமா.. ஏன் திடீரெனத் தங்கம் விலை பெரியளவில் சரிய வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் சொல்கிறார்கள் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் எப்போதுமே ஆகாது என்பது அனைவருக்கும் தெரியும். இரு நாடுகளுக்கும் மோதல் போக்கு இருந்தாலும் கூட அமெரிக்க டாலரை தான் சர்வதேச வர்த்தகத்திற்கு ரஷ்யா பயன்படுத்தி வந்தது. சர்வதேச வர்த்தகத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாணயமாக டாலர் இருந்ததே இதற்குக் காரணமாகும்.

Gold personal finance world

முக்கியமான உத்தரவு

இந்தச் சூழலில் தான் 2014ல் உக்ரைனின் கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டபோது, அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்கத் தொடங்கியது. இது ரஷ்யாவின் டாலர் பரிவர்த்தனைகளைப் பெரிதும் பாதித்தது. 2022ல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய போது யாருமே எதிர்பார்க்காத ஒரு உத்தரவை அப்போதைய அமெரிக்க அதிபர் பைடன் பிறப்பித்தார்.

அதாவது ரஷ்யா வசம் இருந்த $300 பில்லியன் மதிப்புள்ள அந்நியச் செலாவணி இருப்புக்களை முடக்கியது. இது இந்திய மதிப்பில் சுமார் ₹27 லட்சம் கோடிக்குச் சமமாகும். எப்போதும் சர்வதேச வர்த்தகத்திற்காக உலக நாடுகள் அமெரிக்கப் பத்திரங்களை (US Treasuries) டாலர்களில் வைத்திருப்பது வழக்கம். இந்த அமெரிக்கக் கடன் பத்திரங்களைத் தான் முடக்கியது. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யாவுக்கு பிரஷர் போடவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எச்சரிக்கை

இருப்பினும், இது சர்வதேச நாடுகளுக்கும் ஒரு எச்சரிக்கையாகப் போனது. அதாவது இன்று ரஷ்யாவுக்கு நடந்தது நாளை நமக்கும் கூட நடக்கலாம் என உலக நாடுகள் கருதினர். இதேபோல தங்கள் வசம் இருக்கும் டாலர் அல்லது அமெரிக்கப் பத்திரங்களை அமெரிக்கா முடக்கிவிட்டால் என்ன செய்வது என உலக நாடுகள் யோசிக்கத் தொடங்கின.

அன்று முதல் ஒரு பக்கம் ரஷ்யா தங்கள் டாலர் இருப்புக்களைக் குறைத்து, தங்கம் இருப்புகளை அதிகரித்துள்ளன. இந்தியா, சீனா, துருக்கி எனப் பல உலக நாடுகள் டாலர் கையிருப்பைக் குறைத்துக் கொண்டன. 2008 பொருளாதார மந்த நிலை சமயத்திலேயே டாலரை மட்டும் நம்பி இருப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்த உலக நாடுகள் பிரிட்டிஷ் பவுண்ட், யூரோ, ரஷ்ய ரூபிள் மற்றும் சீன யுவான் போன்ற முக்கிய நாடுகளின் நாணயங்களையும் கைவசம் சேர்க்கத் தொடங்கி இருந்தது. இந்த நேரத்தில் அமெரிக்கா எடுத்த தடாலடி நடவடிக்கை உலக நாடுகளை மேலும் டாலரை விட்டு விலக்கியது.

எகிறிய தங்கம்

2016ல் உலகளாவிய அந்நியச் செலாவணி இருப்புகளில் 65% அமெரிக்க டாலர்களில் இருந்தது. இது 2025க்குள் 58% ஆகக் குறைந்தது. 2005ல் இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்புகளில் தங்கம் வெறும் 4.3% மட்டுமே இருந்தது. இது 2025க்குள் 15% ஆக அதிகரித்தது. 2000 முதல் 2025 வரை, சீனா தனது தங்க இருப்புகளை 483% அதிகரித்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரேசில் மத்திய வங்கி ஒரு துளி தங்கத்தை கூட வாங்காத நிலையில், 2025-ல் 16 டன் தங்கத்தை வாங்கியது.

இந்தச் சூழலில் கடந்தாண்டு அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டிரம்ப், இஷ்டத்திற்கு வரிகளை விதித்தார். நட்பு நாடுகள் மீதே தடைகளை அறிவித்தார். இதனால் அமெரிக்காவை நம்பி இருக்க முடியாது என மேலும் மேலும் உலக நாடுகளை டாலரை விட்டு விலகி, தங்கத்தை வாங்கி குவித்தன. உலக நாடுகள் பொதுவாகவே டன் கணக்கில் தான் தங்கம் வாங்கும். இதனால் தங்கத்தின் தேவை அதிகரிக்கவே, விலை விண்ணை முட்டும் அளவுக்குப் போனது.

முக்கிய டீல்

இந்தச் சூழலில் தான் அமெரிக்காவும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தையில் ஒரு டீலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் விரைவில் வர்த்தகத்திற்காக அமெரிக்க டாலரை ரஷ்யா பயன்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. ப்ளூம்பெர்க் இது தொடர்பாக விரிவான ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது. அதில் ரஷ்யா-உக்ரைன் போர் முடிவடைந்த பின்னர், அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்யும் முன்மொழிவை ரஷ்யா தயாரித்துள்ளது. அதில் இரு நாடுகள் ஒப்புக்கொள்ளும் வகையில் ஏழு பாயிண்டுகள் உள்ளன.

அதில் ஒன்று தான் டாலரை மீண்டும் ஏற்பது. அதுபோல டாலரை ரஷ்யா மீண்டும் ஏற்று வர்த்தகம் செய்ய ஆரம்பித்தால் தனது கைவசம் இருக்கும் தங்கத்தில் கணிசமான பங்கை ரஷ்யா விற்கலாம். சர்வதேச வர்த்தகம் மீண்டும் நார்மலாகும் போது மேலும் பல நாடுகளும் கூட இதே நிலைப்பாட்டை எடுக்கலாம். இதன் காரணமாகவே தங்கம் விலை குறையலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்.!

தங்கம் சரியலாம்

இது தொடர்பாக HDFC செக்யூரிட்டிஸின் கமாடிட்டி மற்றும் கரன்சி பிரிவின் தலைவர் அனுஜ் குப்தா ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்குவதைக் குறைக்கலாம். இது தங்கத்தின் விலையில் ஒரு பெரிய சரிவுக்கு வழிவகுக்கும். ரஷ்யா டாலருக்கு திரும்பினால், தங்கத்திற்கான தேவையைக் குறைத்து, டாலரில் முதலீட்டை அதிகரிக்கும். இதனால் தங்கம் விலை சரியலாம்" என்கிறார்கள்.

இந்தியாவில் தங்கம் ஏற்கனவே அதன் உச்சபட்ச விலையிலிருந்து 15% சரிந்துள்ளது. மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் நடந்தால் தங்கம் விலை மேலும் குறையக்கூடும். சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் தங்கம் $3,000 வரை கூடப் போகலாம் என்கிறார்கள். அப்படிப் போனால் இந்தியாவில், 10 கிராம் தங்கம் ₹1 லட்சத்திற்குக் கீழ் சரியக்கூடும். அதாவது ஒரு கிராம் தங்கம் ரூ.10,000க்கு கீழ் வரும் என்கிறார்கள்.

இருப்பினும், இதற்கு பல விஷயங்கள் எதிர்பார்த்தபடி நடக்க வேண்டும். மேலும், இந்தியாவில் ரூபாய் மதிப்பும் சரிந்து வருவதால் சர்வதேச சந்தையில் மிக பெரியளவில் தங்கம் விலை சரிந்தாலும் கூட இந்தியாவிலும் அதே அளவுக்குச் சரியும் எனச் சொல்ல முடியாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+