தாறுமாறாக குறையுது தங்கம் விலை.. இன்னும் எவ்வளவு விழும்? ஹேப்பியாக ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர்
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து குறைந்து வருகிறது. அதன் விலை மேலும் குறையுமா இல்லை.. மீண்டும் உயர ஆரம்பித்துவிடுமா என்பதே இப்போது பொதுமக்களின் கேள்வியாக இருக்கிறது. இதற்கிடையே பிரபலப் பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் தங்கம் விலை வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பது குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்தாண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை அதிகரிக்க ஆரம்பித்தது. குறிப்பாக டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற உடனேயே தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டது. மேலும், சில வாரங்களில் அவர் ரெசிப்ரோக்கல் வரி என்ற குண்டைப் போட அது மேலும். அதிகரித்தது. அதன் பிறகு மத்தியக் கிழக்கு பதற்றம் எனப் புவிசார் அரசியல் குழப்பங்களும் சேரவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தது.

30% உயர்ந்துவிட்டது
இந்தாண்டு தொடக்கம் முதல் இதுவரை தங்கம் விலை ஏற்கனவே 30% உயர்ந்துவிட்டது. இந்த மாதம் இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், இந்தாண்டும் இதே ஏற்றத்துடன் முடிவு செய்தால்.. கடந்த 23 ஆண்டுகளில் 6 மாதங்கள் தொடர்ச்சியாகத் தங்கம் விலை உயர்ந்தது இதுவே முதல்முறை என்ற சாதனையைப் படைக்கும். அதேநேரம் தங்கம் விலை ஏற்கனவே உச்சத்திற்குப் போய் விட்டதால் அது சரிய வாய்ப்பிருப்பதாகவே வல்லுநர்கள் குறிப்பிட்டனர்.
அதற்கேற்பவே தங்கம் விலை கடந்த சில நாட்களாகச் சரிந்து வந்தது. குறிப்பாக இஸ்ரேல் ஈரான் இடையே நேரடியாகப் போர் வெடித்த போதும் கூட தங்கம் விலை எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை. மேலும், ஈரான் மீது நேரடியாக அமெரிக்கா குண்டு போட்ட போதும் ஏறவில்லை. அதேநேரம் போர் முடிவுக்கு வந்த மறுநாளில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை
கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை 3 நாட்கள் மட்டுமே உயர்ந்துள்ளது. இரண்டு நாட்கள் விலை எதுவும் உயராத நிலையில், 5 நாட்களில் தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த ஜூன் 18ம் தேதி சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 9,250ஆக இருந்தது.. நேற்று ஜூன் 27ம் தேதி அது ரூ.8985ஆக குறைந்துவிட்டது. இவ்வளவு பதற்றத்திற்கு மத்தியிலும் தங்கம் விலை சரிந்தது பொதுமக்களுக்கு ஆச்சரியத்தையே கொடுத்தது.
இதேபோல தங்கம் விலை தொடர்ந்து சரிய வேண்டும் என்றே பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே பிரபலப் பொருளாதார வல்லுநர் தங்கம் விலை மேலும் குறையச் சற்று வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதேநேரம் தங்கம் விலை பெரியளவில் குறையாதாம். ரஷ்யாவும் சீனாவும் தங்கத்தை வாங்கிவிடும் என்பதால் தங்கம் விலை பெரியளவில் குறையாது எனக் கூறியிருக்கிறார்.
தங்கம் விலை குறையலாம்
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "தங்கம் விலை குறைந்துள்ளது. அது இன்னுமே கூட கொஞ்சம் குறைய வாய்ப்புள்ளது. ஏனென்றால் மோதல் முடிவுக்கு வந்திருக்கிறது. இன்னொரு பக்கம் ஜெரம் பவுலும் இப்போதைக்கு (அமெரிக்க மத்திய வங்கியின்) வட்டியைக் குறைக்கப்போவது இல்லை எனச் சொல்லிவிட்டார். இதனால் தங்கம் விலை இதே நிலையில் இருக்கும். அல்லது இன்னும் சரியவும் வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் ஒரு ட்விஸ்ட்
அதேநேரம் தங்கம் விலை ரொம்ப குறையாமல் ரஷ்யாவும் சீனாவும் பார்த்துக் கொள்ளும். ஏனென்றால் அவர்கள் (கையிருப்பில்) டாலரில் இருந்து வெளியே போக விரும்புகிறார்கள். ஒருவேளை தங்கம் விலை இன்னும் குறைந்தால் அவர்கள் டாலரை விற்று இன்னும் தங்கத்தை வாங்குவார்கள். அதுதான் நடக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
Gold Rate today: 3 நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. சென்னையில் இன்றைய ரேட் என்ன? -
தங்கம் இப்போ வாங்கலாமா? 2 மாத சரிவில் தத்தளிக்கும் கோல்டு ரேட்.. மக்கள் என்ன செய்ய வேண்டும்? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications