மொத்தமாக கவிழ்ந்த தங்கம் விலை.. சர்வதேச மார்கெட்டில் பூகம்பம்.. நாளை எழுந்தவுடன் கடைக்கு ஓடுங்க
சென்னை: சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை இன்று தாறுமாறாகச் சரிந்துள்ளது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை 3%க்கு மேல் சரிந்துள்ள நிலையில், இரவு முழுக்க இதே நிலை நீடித்தால் இந்தியாவிலும் நாளைய தினம் தங்கம் விலை பயங்கரமாகச் சரியும். இது தங்கம் வாங்க நினைப்போருக்கு அற்புதமான ஒரு வாய்ப்பைத் தரும் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்த மாதம் மீண்டும் ஜெட் வேகத்தில் உயரத் தொடங்கிய தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டது. இந்தச் சூழலில் தான் இன்றைய தினம் தங்கம் விலை சென்னையில் கணிசமாகக் குறைந்தது. இன்று ஒரு நாளில் சவரன் தங்கம் ரூ.640 குறைந்து ரூ.1,04,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல ஒரு கிராம் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.13,020-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் சரியும்
அதேபோல சென்னையில் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.281-க்கு விற்பனை செய்யப்படுகிறது இதற்கிடையே நாளைய தினமும் இந்தச் சரிவு தொடரும் என்றே தெரிகிறது. ஏனென்றால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை இப்போது கணிசமாகக் குறைந்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தங்கத்தில் அதிக லாபம் கிடைத்துவிட்ட நிலையில், முதலீட்டாளர்கள் ஒரு பங்கை விற்று வருகிறார்கள். மேலும், புவிசார் அரசியல் பதற்றமும் குறைந்துவிட்டதால் பாதுகாப்பான புகலிடமாகத் தங்கத்தில் செய்த முதலீட்டைக் குறைக்கலாம் என முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள். இதன் காரணமாகத் தங்கம் மற்றும் வெள்ளி விலை இப்போது சர்வதேச சந்தையில் கணிசமாகக் குறைந்துள்ளது.
சர்வதேச மார்கெட்
இந்திய நேரப்படி இரவு 8.45 மணியளவில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 4,343 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இன்றைய தினம் மட்டும், 4.1 சதவிகிதம், அதாவது 190 டாலர் சரிந்துள்ளது. அதேபோல பிப்ரவரிக்கான கோல்ட் பியூச்சர்ஸும் ஒரு அவுன்ஸ் 4.2%, அதாவது 193 டாலர் சரிந்து, 4359 டாலராக இருக்கிறது. தங்கம் விலையைப் போலவே வெள்ளி விலையும் கூட பயங்கரமாகச் சரிந்துள்ளது. ஸ்பாட் வெள்ளி ஒரே நாளில் 8.6% சரிந்து, ஒரு அவுன்ஸ் வெள்ளி 72.3 டாலராக வர்த்தகமாகி வருகிறது. அதேபோல பிளாட்டினம் 6.9 சதவிகிதமும் பல்லேடியம் 11.9% சதவிகிதமும் இன்று சரிந்துள்ளது.
வல்லுநர்கள்
இது தொடர்பாக ஆக்டிவ் டிரேட்ஸ் ஆய்வாளர் ரிகார்டோ எவாஞ்சலிஸ்டா கூறுகையில், "தங்கம் விலை உச்சத்தைத் தொட்டு மீண்டும் சரிய ஆரம்பித்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் தங்கள் லாபத்தை எடுக்க வேண்டும் என ஒரு பங்கு முதலீட்டாளர்கள் கருதியதே இதற்கு முக்கிய காரணமாகும். மேலும், உக்ரைன்- ரஷ்யா சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதுவும் கூட தங்கம் விலை சரியக் காரணமாக இருக்கிறது" என்றார். உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவரப் போவது உறுதி என்றும் போர் நிறுத்தத்திற்கு மிக அருகே தாங்கள் வந்துவிட்டதாகவும் டிரம்ப் கூறியிருந்தார்.
இந்தாண்டு தொடக்கம் முதல் தங்கம் விலை சுமார் 72% வரை உயர்ந்துள்ளது. அமெரிக்க பணவியல் கொள்கை, டாலர் பலவீனம், புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் மத்திய வங்கிகள் தொடர்ச்சியா தங்கத்தை வாங்கி குவித்தது ஆகியவை இதற்குக் காரணமாகும். தங்கத்தை மிஞ்சும் அளவுக்கு வெள்ளி விலையும் இந்தாண்டு உயர்ந்தது. வெள்ளி விலை இந்தாண்டு சுமார் 181% உயர்ந்துள்ளது.. அத்தியாவசியக் கனிமமாக அமெரிக்கா வெள்ளியை அங்கீகரித்தது, வெள்ளி பற்றாக்குறை, சீனாவின் கட்டுப்பாடுகள் காரணமாகவே வெள்ளி விலை இந்தளவுக்கு உயர்த்திருந்தது.
அடுத்தாண்டு
அடுத்தாண்டு அமெரிக்க மத்திய வங்கி மொத்தமே ஒன்று அல்லது இரண்டு வட்டி குறைப்புகளை மட்டுமே மேற்கொள்ளும் எனத் தெரிகிறது. பொதுவாக வட்டி குறைப்பு இல்லை என்றால் தங்கம் விலை சற்று சரியும். இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், "தங்கத்தின் விலைகள் இப்போது அதிக பிரீமியத்தில் வர்த்தகமாகின்றன. அமெரிக்க பெடரல் வங்கி கடுமையான நிலைப்பாட்டை எடுத்தால் தங்கம் பெரியளவில் சரியலாம்" என்கிறார்கள்.
இந்தச் சூழலில் தான் இப்போது சர்வதேச மார்கெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி விலை பயங்கரமாகச் சரிந்துள்ளது. இதே அளவு சரிவு நாளை காலை வரை நீட்டித்தால் இந்தியாவிலும் தங்கம் விலை பயங்கரமாகச் சரியும்.. தங்கம் மற்றும் வெள்ளியை வாங்க இது ஒரு நல்ல வாய்ப்பாகவும் இருக்கும்.!
-
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
சட்டுபுட்டுனு அள்ளிப் போடுங்க! தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கிகள்.. குறுக்கே வந்த மலேசியா! -
தங்கத்தின் மீது நம்பிக்கையே போச்சு.. வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை.. புலம்பும் முதலீட்டாளர்கள் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications