Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கம் விலை 5 மடங்கு உயர போகுது.. Rich Dad Poor Dad கொடுத்த மிக பெரிய எச்சரிக்கை.. அம்மாடியோவ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. இந்த விலையே பொதுமக்களுக்குத் தலையைச் சுற்றுவதாக இருக்கிறது. ஆனாலும் கூட இது தொடக்கம் தான் என்றும் தங்கம் விலை இங்கிருந்து 5 மடங்கு வரை கூட உயர வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக Rich Dad Poor Dad எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி கணித்துள்ளார்.

தங்கம் இப்போது விற்கும் விலைக்கு அனைவராலும் தங்கத்தை வாங்கிவிட முடியாது. இன்று ஜனவரி 27ம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ. 1,19,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு கிராம் தங்கம் ரூ.15,000க்கு சற்று குறைவாக ரூ 14,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் தங்கம் விலை உயர்வு இத்தோடு நிற்காது என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

Gold to Hit 27 000 After 5 000 Breakout big alert from Rich dad Poor dad author Robert Kiyosaki

ரிச் டாட் பூர் டாட் எழுத்தாளர்

இப்போது சவரன் ரூ.1.2 லட்சத்திற்கு விற்கப்படும் நிலையல் சீக்கிரமே அது 2 லட்சம் ரூபாயைத் தொட்டுவிடும் என வல்லுநர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால், அந்தக் கணிப்புகளை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில், புதிய கணிப்பு வந்துள்ளது. அதில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.6.5 லட்சத்தைத் தொடும் என்கிறார்கள். இந்தக் கணிப்பைச் செய்தது வேறு யாரும் இல்லை.. ரிச் டாட் பூர் டாட் எழுத்தாளரான ராபர்ட் கியோசாகி தான்!

உச்சத்தில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை புதிய உச்சங்களை அடைந்து வருகிறது. திங்கட்கிழமை வர்த்தகத்தில், ஒரு அவுன்ஸ் தங்கம் 5,000 டாலர்களைக் கடந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இன்று செவ்வாயன்று காலை 10 மணியளவில் சுமார் 5073 டாலருக்கு தங்கம் வர்த்தகமாகி வருகிறது. புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஆகியவையே இந்த திடீர் உயர்வுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு அவுன்ஸ் தங்கம் 6,000 டாலர்களை எட்டலாம் என்றும் சந்தை வல்லுநர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த ஆண்டு ஆரம்பித்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், இப்போதே தங்கம் விலை 17% உயர்ந்துவிட்டது. கடந்தாண்டு சர்வதேச சந்தையில் தங்கம் விலை 64% உயர்ந்திருந்த நிலையில், இந்தாண்டு அதை மிஞ்சுமா என்பதே பேசுபொருளாக இருக்கிறது. லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேஷன் இந்தாண்டில் தங்கம் விலை 7,150 டாலர்கள் வரை உயரக்கூடும் என்று வல்லுநர்கள் கணிக்கின்றனர். அதாவது தங்கம் விலை சவரனுக்கு ரூ.1.8 லட்சம் டாலர் வரை போகலாம் என்று கூறியிருக்கிறது.

5 மடங்கு உயரும்

இப்படித் திரும்பிய பக்கமெல்லாம் தங்கத்திற்கு பாசிட்டிவ் நியூஸாகவே இருக்கிறது. இந்தச் சூழலில் தான் பிரபல பைனாஸ் புத்தகமான Rich Dad Poor Dad எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி தங்கம் பற்றிக் கூறியுள்ள கருத்துகள் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது. அவர் தனது ட்விட்டரில், "தங்கம் விலை அவுன்ஸுக்கு 5000 டாலரை தாண்டிவிட்டது. எதிர்காலத்தில் அது 27,000 டாலரை தொடும்" எனப் பதிவிட்டு இருக்கிறார்.

அதாவது தங்கம் விலை இங்கிருந்து சுமார் 5.4 மடங்கு வரை உயரும் என்றே அவர் பதிவிட்டுள்ளார். அதேநேரம் எவ்வளவு நேரத்தில் தங்கம் விலை அந்த நிலையை அடையும்.. இடையில் எப்போதாவது தங்கம் விலை சரியுமா என்பது குறித்த தகவல்களை அவர் பதிவிடவில்லை. இருப்பினும், 5 மடங்குக்கு மேல் உயர்வது மிகப் பெரிய விஷயம் என்பதால் இது பேசுபொருள் ஆகியுள்ளது.

தங்கம் விலை உயர காரணங்கள்

புவிசார் அரசியல் பதற்றங்களே தங்கம் விலை உயர முக்கிய காரணமாக இருந்து வருகிறது. கிரீன்லாந்து விவகாரம் தொடர்பாக அமெரிக்காவிற்கும் நேட்டோவிற்கும் இடையேயான தொடர் மோதல்கள் உலகச் சந்தைகளை நிலைகுலையச் செய்துள்ளன. மறுபுறம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி மீது டிரம்ப் போடும் பிரஷரும், முதலீட்டாளர்களைப் பாதுகாப்புப் புகலிடமான தங்கத்தை நோக்கி ஈர்க்கின்றன.

உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்குவதும் விலை உயர முக்கிய காரணம். பல சர்வதேச நாடுகள் தங்கள் டாலர் கையிருப்பைக் குறைத்துக் கொண்டு தங்கத்தை வாங்கி வருகிறது. மத்திய வங்கிகள் மாதத்திற்குச் சராசரியாக 60 மெட்ரிக் டன் தங்கம் வாங்குவதாக கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது. சீனாவின் மத்திய வங்கி தொடர்ந்து 14 மாதங்களாகத் தங்கம் வாங்கிக் கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+