தங்கம் இருக்கட்டும்.. அதை விட அதிக லாபத்தை அள்ளி கொடுப்பது எது தெரியுமா.. நீங்க எதிர்பார்க்காத பதில்
டெல்லி: இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலும் தங்கமே பிரதான முதலீடாக இருந்துள்ளது. ஆனால், உண்மையில் நீண்ட கால நோக்கில் தங்கம் நல்ல லாபத்தைத் தருமா.. இல்லை ஈக்விட்டி, அதாவது பங்குச்சந்தை சார்ந்த பங்குகள் நல்ல லாபத்தைத் தருமா என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. இது குறித்து வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நாம் பார்க்கலாம்.
முதலீடு என வரும் போது பலருக்கும் எதில் முதலீடு செய்யலாம் என்ற சந்தேகம் வரவே செய்யும். இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் தங்கத்தில் தான் முதலீடு செய்வார்கள். ஆனால், உண்மையில் தங்கம் எப்போதும் மிகச் சிறந்த லாபம் தருமா என்ற கேள்வி சிலருக்கு வந்திருக்கும். அதற்கான பதிலை நாம் இப்போது பார்க்கலாம்.

தங்கம்
தங்கம் பெரும்பாலும் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. பங்குச்சந்தை கடுமையாகச் சரியும்போது அல்லது பணவீக்கம் அதிகரிக்கும்போது, பல முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் திரும்புகிறார்கள். ஏனென்றால் மற்ற சொத்துகள் அல்லது முதலீடுகள் சரியும்போதும் தங்கம் அதன் மதிப்பைத் தக்க வைத்துக் கொள்ளும்.
இது தொடர்பாகப் பொருளாதார வல்லுநர்கள் கூறுகையில், "பாரம்பரியமாகப் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம்.. பணவீக்கம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை இருக்கும்போது தங்கம் நல்ல பாதுகாப்பைத் தரும். தங்க இடிஎஃப், தங்க நகை, தங்கக் காயின் என முதலீடு செய்ய நமக்கு பல்வேறு ஆப்ஷன்கள் உள்ளன" என்கிறார்கள்.
தங்கம் விலை
அமெரிக்கா சீனா வர்த்தக போர், உலகெங்கும் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாகத் தங்கம் விலை தொடர்ந்து விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சமீபத்தில் தான் 24 காரட் தங்கம் விலை ரூ.10 ஆயிரத்தைத் தாண்டி இருந்தது. இப்போது தான் அதன் விலை கொஞ்சம் குறைந்துள்ளது. ரெசிப்ரோக்கல் வரி, டாலர் பலவீனமடைதல் மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை ஆகியவையே தங்கத்தை ஒரு கவர்ச்சிகரமான முதலீடாக மாற்றியுள்ளது.
பணம் இருக்காது
அதேநேரம் இங்கு நாம் மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அதாவது தங்கம் என்பது நமக்கு எந்தவொரு டிவிடெண்ட் அல்லது வட்டியைத் தராது. அதன் மதிப்பு மட்டுமே உயரும்.. விலை உயரும்போது மட்டுமே நாம் சம்பாதிப்போம்.. அந்த லாபத்தில் விற்கிறோம்.. அதேநேரம் இதில் இருந்து free flow எனப்படும் வரவு எதுவும் இருக்காது. மேலும், குறுகிய காலத்தில் தங்கத்தின் விலைகள் கணிக்க முடியாதவை. ஏற்ற இறக்கங்கள் இருக்கும். இதன் காரணமாகவே நீண்ட கால முதலீடாகப் பார்க்கும்போது தங்கம் பெரும்பாலும் பங்குச்சந்தை வருமானத்தை விடக் குறைவாகவே கொடுக்கும்.
ஈக்விட்டி ஃபண்டுகள்
சரி, அடுத்து மியூச்சுவல் ஃபண்டுகளை, குறிப்பாக ஈக்விட்டி ஃபண்டுகள் குறித்துப் பார்ப்போம். இந்த மியூச்சுவல் ஃபண்டுகளை பங்குச் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளன. சந்தை நன்றாக இருக்கும்போது, உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு தங்கத்தை விட வேகமாக வளரக்கூடும். நீண்ட கால நோக்கில் பார்க்கும்போது ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் நல்ல லாபத்தை அளித்துள்ளன. பணவீக்கத்தைத் தாண்டி நமக்கு வருமானத்தைக் கொடுத்துள்ளது.
வல்லுநர்கள் சொல்வது என்ன
இது தொடர்பாக வல்லுநர் ருச்சிகா பகத் கூறுகையில், "மியூச்சுவல் ஃபண்டுகள், குறிப்பாக ஈக்விட்டி சார்ந்து இருக்கும் ஃபண்டுகளை வல்லுநர்கள் தான் நிர்வகிப்பார்கள். இதன் மூலம் உங்கள் போர்ட்ஃபோலியோ பன்முகப்படுத்தப்படும். எனவே, அதன்படி பார்த்தால் நீண்ட கால நோக்கில் அது நல்ல லாபத்தைக் கொடுக்கும். இதனால் செல்வத்தை உருவாக்குவதில் தங்கத்தை விட இது சிறப்பாகச் செயல்படுகின்றன. மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதம் குறிப்பிட்ட தொகை என சிப் முறையில் நாம் முதலீடு செய்தால் நீண்ட கால நோக்கில் தங்கத்தை விடவே நல்ல லாபம் பார்க்கலாம்" என்றார்.
தங்கம் vs மியூச்சுவல் ஃபண்டுகள்
தற்போது சர்வதேச பதற்றம், பணவீக்கம், போர்கள் காரணமாகத் தங்கம் நல்ல லாபத்தைத் தருகிறது. ஆனால், வட்டி விகிதம் குறைக்கப்பட்டு, சர்வதேச அளவில் அமைதி திரும்பினால் மியூச்சுவல் ஃபண்டுகள், குறிப்பாக ஈக்விட்டி ஃபண்டுகள் தங்கத்தை விட நல்ல லாபத்தைத் தரும். அப்போ பணத்தை எல்லாம் ஈக்விட்டி ஃபண்டுகளில் போட்டுவிடலாமா என்று உங்களுக்குத் தோன்றும்.. ஆனால், முதலீட்டைப் பொறுத்தவரை ரிஸ்க்கை குறைப்பதே பிரதானம். எனவே, எந்தவொரு விஷயத்திலும் மொத்தமாகப் பணத்தைப் போட்டுவிடக்கூடாது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இப்போது தங்கம் விலை உயர்ந்தாலும் கூட, நீண்ட கால நோக்கில்.. அதாவது 30, 40 ஆண்டுகள் என பார்க்கும் போது தங்கம் லாபத்தைக் கொடுத்தாலும் அதையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு ஈக்விட்டி லாபம் இருக்கும்.!
-
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Rate Today: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்வு! மாலையில் அதிர்ச்சி! -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே.. மீண்டும் திருப்பி வைக்க முடியாது.. தங்கம் விலை சரிவால் ட்விஸ்ட் -
கன்னியாகுமரியில் 45 சவரன் தங்கம்.. கப்பல் என்ஜினியர் வீட்டில் திருடன் கொடுத்த ஒற்றை க்ளூ -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications