பெட்ரோல்... டீசல் மீதான கலால் வரி திடீர் உயர்வு - டீசலில் 40 பைசா; பெட்ரோலில் ரூ.1.60 அதிகரிப்பு
டெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு நேற்றிரவு திடீரென்று உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய உத்தரவின்படி, வர்த்தக அடையாளம் இல்லாத சாதாரண பெட்ரோல் மீது முன்னர் விதிக்கப்பட்டிருந்த கலால் வரி லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 5.46லிருந்து தற்போது ரூபாய் 7.06 ஆக உயர்ந்துள்ளது.
இதன் அடிப்படையில் வர்த்தக அடையாளம் இல்லாத சாதாரண பெட்ரோல் பயன்படுத்துவோர் லிட்டர் ஒன்றுக்கு கூடுதலாக ரூபாய் 1.60 செலவிட வேண்டியிருக்கும். இதேபோல் வர்த்தக அடையாளம் இல்லாத சாதாரண டீசல் மீதான கலால் வரியும் லிட்டர் ஒன்றுக்கு 40 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. வர்த்தக அடையாளம் இல்லாத சாதாரண டீசல் மீது முன்னர் விதிக்கப்பட்டிருந்த கலால் வரி லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 4.26லிருந்து தற்போது ரூபாய் 4.66 ஆக இருக்கும்.

வர்த்தக அடையாளம் கொண்ட பெட்ரோல் மீது முன்னர் விதிக்கப்பட்டிருந்த கலால் வரி லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 6.64லிருந்து ரூபாய் 8.24 உயர்த்தப்பட்டுள்ளது. வர்த்தக அடையாளம் கொண்ட டீசல் மீது முன்னர் விதிக்கப்பட்டிருந்த கலால் வரி லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 6.62லிருந்து ரூபாய் 7.02 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஜனவரி மாதம்வரை மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியினை நான்கு முறை உயர்த்தியுள்ளது. இவ்வகையில் மத்திய அரசுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை மூலம் ரூபாய் 7.75 மற்றும் ஒரு லிட்டர் டீசல் விற்பனை மூலம் ரூபாய் 6.50 கலால் வரியாக கிடைத்து வருகிறது. இவ்வகையில் மட்டும் அரசுக்கு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருமானமாக கிடைத்துள்ளது. இந்த தொகையின் மூலம் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ஈடு செய்யப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications