தங்கம் விலை இன்னும் எவ்வளவு குறையும்? நகை இப்போ வாங்குவது சரியாக இருக்குமா? நிபுணர்கள் அட்வைஸ்
சென்னை: தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை தற்போது ஒரு சிறிய இடைவேளை விட்டு நகை பிரியர்களை கொஞ்சம் ஆறுதல் அடைய வைத்து இருக்கிறது. இடையிடையே கூடினாலும் விலை மளமளவென கடந்த வாரத்தில் சரிந்து உள்ளது. இந்த விலை வீழ்ச்சி இப்படியே போகுமா? 90 ஆயிரத்திற்கும் கீழ் தங்கம் விலை செல்லுமா என்பது தங்க நகை வியாபாரிகள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.
தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்ட நிலையில், கடந்த சில நாட்களாக விலை மளமளவென சரிந்து வருகிறது. இடையிடையே விலை உயர்வை சந்தித்தாலும் தங்கம் விலை சட்டென்று குறையத் தொடங்கியது நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்து வருகிறது.

கிராமுக்கு ரூ.800 சரிவு
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிராமுக்கு ரூ.800-ம், சவரனுக்கு ரூ.6,400-ம் குறைந்து இருந்தது. நேற்று முன் தினம் மட்டும் 1,120 ரூபாய் குறைந்திருந்த நிலையில், நேற்று (அக்டோபர் 25) காலையில் ஒரு சவரனுக்கு 800 ரூபாய் ஏறியுள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் 92,000க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் தங்கம் 100 ரூபாய் உயர்ந்து 11,500க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த 17 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.97,600 உயர்ந்ததே இதுவரை தங்கம் வரலாற்றில் மிகப்பெரிய உச்சம் ஆகும். தங்கம் விலை ஒரு லட்ச ரூபாயை ஓரிரு நாளில் எட்டி விடும் என்று கணிக்கப்பட்ட நிலையில், விலை சரிந்து இருப்பது கொஞ்சம் ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது.
தொடர்ந்து தங்கம் விலை குறையுமா?
இந்த நிலையில் மீண்டும் தங்கம் விலை உயருமா? அல்லது ஏற்ற-இறக்க நிகழ்வு தொடருமா?, விலை குறையும் இந்த நேரத்தில் தங்கத்தின் மீது முதலீடு மேற்கொள்வது சரியாக இருக்குமா? என்ற கேள்வி நகை பிரியர்கள் மத்தியில் எழுவதை பார்க்க முடிகிறது. இது தொடர்பாக மெட்ராஸ் வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறியதாவது:-
தங்கம் விலை உயரும் போது ஒரு கட்டத்தில் மிதமான நிலைக்கு செல்லும். அப்படியான ஒரு பிரேக்க்தான் இந்த விலை குறைவு. எனினும், இது மீண்டும் வேகம் எடுக்கும். தற்போதைய நிலவரப்படி சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் அதாவது 31.1 கிராம் தங்கம் 4,100 டாலராக உள்ளது.
தங்கம் விலை மேலும் உயரும்
இது விரைவில் 4,500 டாலர் முதல் 4,800 டாலர் வரை செல்ல வாய்ப்பு உள்ளது. எனினும் இந்த விலை உயர்வை எட்ட இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகும். எனவே, தங்கம் விலை கண்டிப்பாக உயரும். ஒரு சவரன் தங்கம் விலை ரூ.90,000க்கு கீழ் குறைய வாய்ப்பு இல்லை.
சர்வதேச பொருளாதார சூழல், பிரிக்ஸ் நாடுகளின் நடவடிக்கைகள், டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகள், கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம், டாலர் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை இதற்கு காரணமாக உள்ளது. அமெரிக்க மைய வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் அடுத்த மாதம் குறையும் பட்சத்தில் முதலீட்டாளர்கள் பணத்தை எடுத்து தங்கத்தில் இன்வெஸ்ட்மெண்ட் செய்வார்கள்.
விலை வீழ்ச்சி தற்காலிகமானது
இதன்படி பார்க்கும் போதும் தங்கத்தின் தேவையானது வரும் காலங்களில் அதிகரிக்கவே செய்யும்" என்றார். இவரது கருத்துப்படி பார்த்தோம் என்றால் தங்கம் விலை வீழ்ச்சி என்பது தற்காலிகமானது என்றே தெரிகிறது. வரும் நாட்களில் மீண்டும் விலையேற்றத்தை சந்திக்கவே வாய்ப்பு உள்ளது.
எனவே தங்க நகை வாங்க திட்டமிட்டு இருப்பவர்கள் உடனடியாக யோசித்து செயல்படுவது நல்லது. தங்களுக்கு தெரிந்த நிதி ஆலோசகர்கள், தங்க சந்தை நிபுணர்களிடம் ஆலோசனையும் பெற்றுக்கொண்டு முடிவு செய்யலாம்.
-
Gold Rate: சென்னையில் தங்கம் விலை ஷாக்! தம்மாதுண்டு குண்டுமணிக்கு கூட நினைத்து பார்க்க முடியாது போல! -
Gold Rate: தங்கம் விலை சரிவு! ஆனாலும் 1 லட்சத்திற்கு கீழே இறங்காது போலயே! -
சட்டுபுட்டுனு அள்ளிப் போடுங்க! தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கிகள்.. குறுக்கே வந்த மலேசியா! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்!












Click it and Unblock the Notifications