அடுத்த தீபாவளிக்குள் பணக்காரன் ஆகணுமா.. சேமிப்பை தாண்டி சில விஷயம் முக்கியம்! நோட் பண்ணுங்க
சென்னை: இன்று நாம் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுகிறோம். அடுத்த தீபாவளிக்குள் கணிசமான தொகையைச் சேமிக்க வேண்டும் என்ற நினைக்கிறீர்கள்.. ஆனால், அதை எங்கிருந்து தொடங்க வேண்டும் எனத் தெரியாமல் இருக்கிறீர்களா.. அப்போது இந்த ஏழு விஷயங்களை மறக்காமல் பின்பற்றுங்கள். ரொம்பவே ஈஸியாக நீங்கள் பணத்தைச் சேமிக்கலாம்.
பணக்காரன் ஆக வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் இருக்கும்.. ஆனால், பணக்காரன் ஆகச் சேமிப்பும் முதலீடும் முக்கியம். அதை நம்மில் பெரும்பாலானோர் செய்ய மாட்டோம். பலருக்கு எங்கிருந்து தொடங்குவது என்றே தெரியாது.

அப்படித் தெரியாமல் புரியாமல் இருக்கிறீர்கள் என்றால் கவலை வேண்டாம்.. இந்த ஏழு விஷயங்களை மட்டும் செய்யுங்கள் போதும். ரொம்பவே ஈஸியாக பணத்தைச் சேமிக்கலாம். இது குறித்து நாம் பார்க்கலாம்.
முதலில் கடன் கூடாது: சேமிப்பைத் தொடங்குவதற்கு முன்பு கடனை எல்லாம் அடையுங்கள். ஏனென்றால் கடன் இருந்தால் மாதாமாதம் அதற்கே கணிசமான தொகையை வட்டியாகக் கட்ட வேண்டி இருக்கும். எனவே, முதலில் இருக்கும் கடனை அடையுங்கள். கடன் ஒரு பக்கம் இருக்கட்டும். ஒரு சிலர் பணத்தைச் சேமிக்கும் போது அதில் வரும் லாபத்தை வைத்து கடனை அடைக்கலாம் என்பார்கள். ஆனால், அதெல்லாம் வேலைக்கு ஆகாது. சேமிப்பிற்கு வரும் லாபத்தை விட வட்டி விகிதம் அதிகமாகவே இருக்கும். எனவே, முதலில் கடனை அடையுங்கள்.
அடுத்து ஓராண்டில் எத்தன ரூபாய் சேர்க்கப் போகிறேன் என்பதில் இலக்கு வையுங்கள். ஓராண்டில் ரூ.50 ஆயிரம் அல்லது ஒரு லட்ச ரூபாய் என உங்களால் முடிந்த தொகையை இலக்காக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் நாம் எதை நோக்கிச் செல்கிறோம். இலக்கிற்கு எவ்வளவு அருகே நெருங்குகிறோம் என்பது நமக்குத் தெரியும்.
பட்ஜெட்: மூன்றாவது பட்ஜெட் போடுங்கள். சும்மா எந்தவொரு திட்டமும் இல்லாமல் செலவு செய்தால் காசு எங்கே போகிறது என்றே தெரியாது. எனவே, சரியாகத் திட்டமிட்டு செலவு செய்யுங்கள். மாத தொடக்கத்தில் உங்கள் பார்டனருடன் சேர்ந்த பட்ஜெட் போடுங்கள். மளிகை செலவுகளுக்கு இவ்வளவு, மருத்துவச் செலவு இவ்வளவு, வண்டிக்கு பெட்ரோல் இவ்வளவு என பட்ஜெட் போடுங்கள். அதைத் தவறாமல் பின்பற்றுங்கள். அப்போது தான் எவ்வளவு செலவாகிறது என்பதும் தெரியும். தேவையற்ற செலவுகளையும் குறைக்க முடியும்.
அடுத்து முக்கியமாகச் சேமிப்பையும் செலவாகக் கொண்டு வாருங்கள். அதாவது எல்லா செலவுகளும் போக மீத தொகையைச் சேமிப்பேன் என்ற மனநிலை வேண்டாம். அந்த மனநிலை நமக்கு இருந்தால் பல மாதங்கள் நம்மால் சேமிக்க முடியாமல் கூடப் போகலாம். எனவே, மாதம் பிறந்த உடன் எப்படி ஒவ்வொரு செலவுக்கும் பட்ஜெட் போடுகிறோமோ.. அதேபோல சேமிப்பிற்கும் ஒரு பட்ஜெட் போட்டு முதல் வாரமே அதைச் செய்துவிடுங்கள். இது முக்கியமானது.
இதை விடுங்கள்: மேலும், உங்களுக்கு சிகரெட், மது என எதாவது பழக்கம் இருந்தால் அதைக் கைவிடுங்கள். ஏனென்றால் நமது கண்ணுக்கே தெரியாமல் பெரிய தொகை இதற்கெல்லாம் நாம் செலவு செய்துவிடுவோம். ஒரு சிகரெட் தானே என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அதுவே மாதத்திற்கு எனக் கணக்குப் போட்டால் உங்களுக்கு எவ்வளவு தூரம் செலவாகிறது என்பது புரியும்.
செலவைக் குறைக்க சூப்பர் வழி: ஆறாவதாக மாதம் ஒரு வாரம் no spend week என்பதைக் கடைப்பிடிக்கலாம். அதாவது அந்த ஏழு நாட்கள் அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். வெளியே சென்று சாப்பிடக் கூடாது. உணவு ஆர்டர் செய்யக்கூடாது. டிரஸ், சினிமா என்று தேவையில்லாத எல்லா செலவுகளையும் கட் செய்யுங்கள். அந்த ஒரு வாரம் அத்தியாவசிய செலவுகளை மட்டும் செய்யுங்கள். அதிலேயே கணிசமான தொகையை மிச்சம் பிடிக்கலாம்.
அடுத்து இதுதான் ரொம்பவே முக்கியமானது. அதாவது மாதம் தவறாமல் ஒழுக்கமாக முதலீடு செய்ய வேண்டும். ஏதோ ஆர்வத்தில் தொடக்கத்தில் ஓரிரு மாதங்கள் மட்டும் சேமித்து வைத்துக் கொண்டு, அப்படியே விடக்கூடாது. தொடங்கும் போது இருக்கும் ஆர்வமும் ஒழுக்கமும் கடைசி வரை இருக்க வேண்டும். மேலும், ஒரு விஷயத்தில் பணத்தை முதலீடு செய்யாமல் பல விஷயங்களில் பிரித்து முதலீடு செய்யலாம். இது நமது ரிஸ்க்கை குறைக்கும். இந்த ஏழு விஷயங்களை மட்டும் தவறாமல் கடைப்பிடித்தால் போதும் ஓராண்டிற்குள் தேவையான பணத்தைச் சேமித்துவிடலாம்.












Click it and Unblock the Notifications