இன்சுரன்ஸ் பாலிசிகளை டீமேட் வடிவில் அளிக்கும் இந்தியாபர்ஸ்ட் லைஃப்

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் தாங்கள் வழங்கும் பாலிசிகளை தாள்களில் தான் இத்தனை நாட்களாக நமக்கு அளித்து வந்தன. இந்நிலையில் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை ஆன்லைனில் டீமேட் வடிவில் அளிக்கும் திட்டத்தை தனியார் நிறுவனமான இந்தியாபர்ஸ்ட் லைஃப் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. ஆயுள் காப்பீட்டு களஞ்சியம் நேற்று தான் ஆன்லைனில் மக்களுக்கு சேவையை வழங்கத் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தின்படி பாலிசிதாரர்கள் தங்களின் பாலிசிகளை டீமேட் வடிவில் பெறலாம். அதில் எந்த திருத்தமும் செய்ய வேண்டும் என்றாலும் அதை ஆன்லைனிலேயே செய்யலாம். ஏற்கனவே இந்தியாபர்ஸ்ட் லைஃப் நிறுவனத்தில் பாலிசி எடுத்தவர்கள் அதை டீமேட் வடிவில் மாற்றிக் கொள்ளும் வசதியை அந்நிறுவனம் அளித்துள்ளது.
இது குறித்து இந்தியாப்ர்ஸ்ட் லைஃப் நிறுவன எம்.டி.யும், சிஇஓவுமான பி. நந்தகோபால் கூறுகையில்,
இந்தியாபர்ஸ்ட் நிறுவனத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அளிக்க முயற்சி செய்து வருகிறோம். அதன்படி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டம் வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் சவுகரியமாக இருக்கும் என்றார்.
இ-காப்பீட்டுத் திட்ட கணக்கிற்கான படிவத்தை இந்தியாபர்ஸ்ட் இணையதளத்தில் www.indiafirstlife.com இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications