இன்போசிஸ்: ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.. லாபம் + ஈவுத்தொகை.. பட் முதலீட்டாளர் சோகம்!
இந்திய தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் இன்போசிஸ், மார்ச் 31, 2026-ஆம் தேதியுடன் முடிவடைந்த நான்காம் காலாண்டுக்கான (Q4FY26) வலுவான நிதியியல் முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் நிறுவனம் நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது, இதோடு ஈவுத்தொகை கொடுத்தும் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை வரவில்லை.
மார்ச் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் வருடாந்திர அடிப்படையில் 21 சதவீதம் அதிகரித்து ரூ.8,501 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ.7,033 கோடியாக இருந்தது.

மேலும் இக்காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் 13.4 சதவீதம் உயர்ந்து ரூ.46,402 கோடியைத் தொட்டது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.40,925 கோடியாக இருந்தது.
காலாண்டு அடிப்படையில் (QoQ) லாபம் 28 சதவீதம் உயர்ந்துள்ளது. மூன்றாம் காலாண்டில் ரூ.6,654 கோடியாக இருந்த லாபம் இப்போது அதிகரித்துள்ளது. வருவாயும் காலாண்டு அடிப்படையில் 2 சதவீதம் உயர்ந்துள்ளது.
மேலும் வரும் நிதியாண்டில் அதாவது 2027ஆம் நிதியாண்டில் இன்போசிஸ் மிகவும் எச்சரிக்கையான கணிப்பை வெளியிட்டுள்ளது. நிலையான நாணய மதிப்பில் வருவாய் வளர்ச்சி 1.5 சதவீதம் முதல் 3.5 சதவீதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதேவேளையில் ஆப்பரேட்டிங் மார்ஜின் 20 சதவீதம் முதல் 22 சதவீதம் வரை இருக்கும் என கணித்துள்ளது.
மேலும் மார்ச் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் மார்ஜின் என்பது 21 சதவீதமாக இருந்தது, இது கடந்த வருடத்திற்கு சமமாக இருக்கிறது. டிசம்பர் காலாண்டை விட 2.60 சதவீதம் உயர்ந்துள்ளது.
டாலர் அடிப்படையில் இக்காலாண்டில் வருவாய் 5,040 மில்லியன் டாலராக இருந்தது. இது முந்தைய காலாண்டை விட 6.6 சதவீதம் உயர்ந்தது, ஆனால் வருடாந்திர அடிப்படையில் 1.2 சதவீதம் குறைந்துள்ளது.
இறுதி டிவிடெண்ட் அறிவிப்பு
இன்போசிஸ் நிறுவனம் முதலீட்டாளர்களை கவரும் வகையில் 2025-26 நிதியாண்டுக்கான இறுதி டிவிடெண்டாக ஒரு பங்குக்கு ரூ.25 அறிவித்துள்ளது. இந்த
டிவிடெண்ட் தொகை அளிப்பதற்காக ரெக்கார்ட் தேதியான ஜூன் 10, 2026-ஐ நிர்ணயித்துள்ளது. டிவிடெண்ட் ஜூன் 25, 2026 அன்று வழங்கப்படும்.
பங்கு விலை வீழ்ச்சி
இன்போசிஸ் ஒப்பிட்டளவில் நல்ல காலாண்டு முடிவுகள் வெளியிட்ட போதிலும், சந்தை எதிர்பார்ப்புக்கு ஏற்ப வருவாய் வளர்ச்சி இல்லாததால் பங்கு விலை பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு உள்ளது. நியூயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அதன் ADRகள் ப்ரீ-மார்க்கெட் வர்த்தகத்தில் 5 சதவீதம் வீழ்ச்சியடைந்து சுமார் 12.81 டாலரில் வர்த்தகமானது.
மும்பை பங்குச்சந்தையிலும் இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ் பங்குகள் 2.04 சதவீதம் சரிந்து 1242.60 ரூபாய் அளவில் உள்ளது.
இன்போசிஸ் தனது 45-வது ஆண்டு பொதுக்கூட்டத்தை ஜூன் 23, 2026 அன்று நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும். இதில் முக்கியமாக இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ தேர்வு செய்வது குறித்த முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
இன்போசிஸின் இந்த முடிவுகள், தற்போதைய காலாண்டில் வலுவான செயல்திறனை வெளிப்படுத்தினாலும், வரும் காலத்தில் ஐடி துறையின் நிச்சயமின்மையை பிரதிபலிக்கிறது. இதற்கு காரணம் ஏஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கம்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications