Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓஹோ.. ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷினை நெட்ப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார் மாதிரி இனி சப்ஸ்கிரிப்ஷனில் வச்சிக்கலாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுவாக நாம் நெட்ஃபிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களை மாதம் மாதம் பணம் கட்டி சப்ஸ்கிரைப் செய்கிறோம் அல்லவா? அதுபோல, இப்போது எல்ஜி (LG) மற்றும் சாம்சங் (Samsung) போன்ற பெரிய நிறுவனங்கள் ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபகரணங்களையும் சப்ஸ்கிரிப்ஷனில் கொடுக்க முயற்சி செய்கின்றன.

இதன் ஐடியா சிம்பிள் தான். மாதம் ஒரு சிறிய தொகையைக் கட்டுங்கள். உங்களுக்கு லேட்டஸ்ட் மாடல் ஃபிரிட்ஜ் அல்லது வாஷிங் மெஷின் கிடைக்கும். உங்களுக்குப் போர் அடித்தாலோ அல்லது வேறு புது மாடல் வேண்டுமென்றாலோ, பழையதைத் திருப்பிக் கொடுத்துவிட்டுப் புதியதை எடுத்துக்கொள்ளலாம். ஒரே நேரத்தில் பெரிய பணம் போடத் தேவையில்லை. நீண்ட காலக் கமிட்மெண்ட்டும் இல்லை.

comerce business

இந்தியாவில் என்ன நிலை?

தென்கொரியாவில் எல்ஜி நிறுவனத்துக்கு இந்த சப்ஸ்கிரிப்ஷன் பிசினஸ் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 12,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 75% அதிகம்! ஆனால், இது எல்ஜியின் மொத்த வருமானத்தில் வெறும் 4% தான். அதனால் இன்னும் நிறைய தூரம் போக வேண்டும். இதனால்தான் எல்ஜி இப்போது மலேசியா, தைவான் போன்ற நாடுகளுடன் இந்தியாவிலும் இந்த சேவையைத் தொடங்கியுள்ளது. சாம்சங்கும் களத்தில் குதித்துள்ளது.

ஏன் சாத்தியம் என்று நினைக்கிறார்கள்?

இந்தியாவில் மக்கள் நெட்ஃபிக்ஸ் பார்ப்பது போல, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷினுக்கும் மாதம் மாதம் பணம் கட்டுவார்களா என்ற கேள்வி எழுகிறது.

ஆனால் எல்ஜி நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் இதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. அவர்கள் சில மாதங்களுக்கு முன் தாக்கல் செய்த ஒரு முக்கிய ஆவணத்தில் இதைப் பற்றிப் பேசியுள்ளனர்.

  • பெரிய மார்க்கெட்: இந்தியாவில் உபகரணங்களை வாடகைக்கு விடும்/சப்ஸ்கிரைப் செய்யும் சந்தை 2023-ல் சுமார் 8,300 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இது 2028-க்குள் சுமார் 29,000 கோடி ரூபாயாக உயர வாய்ப்புள்ளது என்கிறார்கள். அதாவது வருடத்துக்கு 28% வளர்ச்சி!
  • நகர வாழ்க்கை முறை: நகரங்களில் வாழும் இளைய தலைமுறையினர் அடிக்கடி வேலை காரணமாக இடம் மாறுகிறார்கள். அவர்களுக்குப் பெரிய ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷினை வாங்கி, பிறகு தூக்கிச் செல்வது அல்லது விற்பது பெரிய தலைவலி. சப்ஸ்கிரிப்ஷன் என்றால் இந்த கவலை இல்லை.
  • பணப் பிரச்சனை இல்லை: வீட்டு உபகரணங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. ஒரே நேரத்தில் பெரிய தொகையைச் செலவு செய்வதைத் தவிர்க்க சப்ஸ்கிரிப்ஷன் உதவுகிறது. ரிப்பேர் வந்தாலும் கவலைப்படத் தேவையில்லை.
  • பிரீமியம் ஆசை: மக்களின் வருமானம் அதிகமாகும்போது, நல்ல, விலை உயர்ந்த உபகரணங்களை வாங்க ஆசைப்படுகிறார்கள். பட்ஜெட்டை மீறாமல் இதுபோன்ற பொருட்களைப் பயன்படுத்த சப்ஸ்கிரிப்ஷன் ஒரு வழி.

ரெண்டோமோஜோ (Rentomojo), சிட்டிஃபர்னிஷ் (Cityfurnish) போன்ற இந்திய நிறுவனங்கள் வாடகைக்கு உபகரணங்கள் கொடுத்து ஓரளவு வெற்றியடைந்து லாபம் பார்ப்பதும் இந்த துறைக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்கிறது.

என்னென்ன தடைகள் உள்ளன?

ஒரு பக்கம் வாய்ப்புகள் இருந்தாலும், மறுபக்கம் பெரிய சவால்களும் உள்ளன.

  • இந்தியர்களின் மனநிலை: நாம் பொதுவாகப் பண விஷயத்தில் கவனமாக இருப்போம். ஒரு பொருளைப் பயன்படுத்தும் போது மட்டும் பணம் கட்டத் தயார். ஆனால், உபகரணங்கள் போல எப்போதும் பயன்படுத்தாத (உதாரணமாக சில மாதங்கள் ஊருக்குப் போனால்) பொருட்களுக்குத் தொடர்ந்து சப்ஸ்கிரைப் செய்து பணம் கட்ட மக்கள் யோசிக்கலாம்.
  • சிரமமான போக்குவரத்து: ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்றவை கனமான பொருட்கள். வாடிக்கையாளர்கள் திருப்பிக் கொடுப்பதும், புதியவர்களுக்கு அனுப்புவதும் மிகவும் கடினமான வேலை. டெலிவரி, பிக்கப், திரும்ப வரும் பொருட்களைச் சரி செய்வது, சுத்தம் செய்வது என இதில் நிறைய சிக்கல்கள் வரும். பொருட்கள் உடைந்து வரலாம் அல்லது ரிப்பேராக இருக்கலாம். இது வாடிக்கையாளர் அனுபவத்தைப் பாதிக்கும்.
  • பொருட்களைப் பராமரிப்பது: வாடகைக்கு எடுத்த பொருட்களை மக்கள் சொந்தப் பொருட்கள் போலக் கவனமாகப் பராமரிக்காமல் போகலாம். சிகரெட் சூடு தழும்புகள், உணவு கொட்டுதல் போன்றவை நிகழலாம். இது நிறுவனங்களுக்குப் பெரிய செலவை ஏற்படுத்தும். ஏனெனில் எல்ஜி சக்சஸ் செய்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் சிவிக் அறிவு குறைவாக உள்ளது.
  • போட்டி: பெரிய நகரங்களில் கோ-லிவிங் (Co-living) எனப்படும் பொதுவான குடியிருப்பு விடுதிகள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. இங்கு ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற அனைத்து வசதிகளுடனும் அறைகள் கிடைக்கின்றன. தனியாக வீடு எடுத்து, உபகரணங்களை வாங்குவது/வாடகைக்கு எடுப்பதை விட இது பலருக்கு எளிதாகவும் மலிவாகவும் இருக்கிறது. இது இந்த சப்ஸ்கிரிப்ஷன் மார்க்கெட்டுக்கு ஒரு போட்டி.
  • சந்தை சிறியது: இந்த சப்ஸ்கிரிப்ஷன் பெரும்பாலும் வேலைக்காக இடம் மாறும் பெருநகர மக்களுக்கே பொருந்தும். சிறிய நகரங்களில் இது அவ்வளவாக எடுபடாது. மேலும், இப்போது மாதத் தவணை (EMI) வசதி, தள்ளுபடிகள் போன்றவற்றால் புதிய உபகரணங்களை வாங்குவதே முன்பை விட எளிதாகிவிட்டது.
  • வாடகைப் பிரச்சனைகள்: இப்போது இருக்கும் வாடகை சேவை நிறுவனங்களிலும் சில பிரச்சனைகள் உள்ளன. பொருட்களைத் திரும்ப எடுப்பதில் தாமதம், சீக்கிரம் திருப்பிக் கொடுத்தால் அபராதம் எனப் புகார்கள் உள்ளன. அப்படியானால் சொந்தமாக வாங்கி விடுவதே மேல் என்று மக்கள் நினைக்க வாய்ப்புள்ளது.

எல்ஜிக்கு வாய்ப்பு உள்ளதா?

இந்த சவால்கள் இருந்தாலும், எல்ஜி நிறுவனத்துக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் ஏற்கெனவே அவர்களுக்குப் பெரிய மார்க்கெட் உள்ளது. பல உபகரணப் பிரிவுகளில் 25% மேல் பங்கு வைத்துள்ளனர். மேலும், அவர்கள் ஐபிஓ மூலம் பெரிய முதலீட்டைப் பெற வாய்ப்புள்ளது. இந்த பணத்தைப் பயன்படுத்தி போக்குவரத்து, வாடிக்கையாளர் சேவை போன்றவற்றைச் சரி செய்து, சப்ஸ்கிரிப்ஷனை மிகவும் எளிதாக்கினால், பெருநகரங்களில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அவர்கள் பிடிக்கலாம்.

ஆனால், இது சாத்தியமாகுமா இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்போதைக்கு, உபகரண சப்ஸ்கிரிப்ஷன் என்பது மேம்போக்காக ஒரு நல்ல ஐடியாவாகவே இருக்கிறது.

Take a Poll

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+