Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"800 மடங்கு லாபம்.." 1990ல் வாங்கிய பங்குகள்.. இப்போ அதன் மதிப்பு ரூ.80 கோடி.! அடிச்சது பாருங்க லக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த காலத்தில் பலரும் சிறு லாபத்திற்கு ஆசைப்பட்டு டிரேட் செய்து நஷ்டத்தைச் சந்தித்து வருகிறார்கள். இதற்கிடையே நீண்ட கால முதலீட்டின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் வகையிலான ஒரு சம்பவம் நடந்துள்ளது. வெறும் 30 ஆண்டுகளில் ஒரே பங்கில் 800 மடங்கு லாபத்தை ஒருவர் சம்பாதித்து இருக்கிறார். பொறுமை இருந்தால் அது எப்படி லாபமாக மாறும் என்பதையே இது காட்டுவதாக உள்ளது.

பொதுவாக ஒருவருக்கு எப்படி எப்போது அதிர்ஷ்டம் கிடைக்கும் என்றே தெரியாது. எதிர்பாராத நேரத்தில் தான் அதிர்ஷ்டம் அடிக்கும். அப்படி தான் இங்கு ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அதுவும் கூரையைப் பிய்த்து கொண்டு கொட்டி இருக்கிறது என்றே சொல்லலாம். அதாவது 1990களில் அவரது தந்தை வெறும் ஒரு லட்சம் ரூபாய்க்கு JSW ஸ்டீல் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியிருந்தார். அதன் மதிப்பு இப்போது பல கோடி ரூபாயாக மாறியுள்ளது.

Man s 1 Lakh Shares from 1990s Now Worth 80 Crore A Wealth Legacy

நீண்ட கால முதலீடு

இந்த குறிப்பிட்ட பங்கு என்று இல்லை.. எந்தவொரு நல்ல பங்காக இருந்தாலும் அதை நீண்ட காலம் ஹோல்ட் செய்து வைத்திருந்தால் அது பல மடங்கு லாபத்தைத் தரும். பல வெற்றிகரமான முதலீட்டாளர்களும் இந்த வழிமுறையே பரிந்துரைக்கிறார்கள். அப்படி தான் இந்த நபருக்குக் கூரையைப் பிய்த்து கொண்டு அதிர்ஷ்டம் கொட்டியுள்ளது. 30 ஆண்டுகள் இந்த பங்குகளை அப்படியே வைத்திருந்ததால், இப்போது அது மிகப் பெரிய சொத்தாக மாறியுள்ளது.

800 மடங்கு லாபம்

சௌரவ் தத்தா என்ற நபர் ரெட்டிட் தளத்தில் படித்த ஒன்றைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது அந்த ரெட்டிட் யூசரின் தந்தை 1996ல் JSW ஸ்டீல் பங்குகளை வாங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 1996ல் வெறும் ஒரு லட்ச ரூபாய்க்கு அந்த பங்குகளை அவர் வாங்கிய நிலையில், இப்போது அது சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக மாறியுள்ளது. அதாவது 30 ஆண்டுகளில் 800 மடங்கு லாபம் பார்த்துள்ளார்.

80 கோடி ரூபாய்

சௌரவ் தத்தா மேலும் கூறுகையில், "ரெட்டிட் யூசர் ஒருவர் தந்தை 1990களில் ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கிய JSW பங்குகளின் பத்திரங்களைச் சமீபத்தில் கண்டுபிடித்தார். அதன் இப்போதைய மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய். சரியான பங்குகளை வாங்கி, 30 வருடங்கள் காத்திருப்பதால் கிடைக்கும் மகத்துவம் இது" என்று பதிவிட்டுள்ளார்.

ரிஸ்க்

அவரது இந்த பதிவு இணையத்தில் டிரெண்டானது. இப்போது பலரும் டிரேட் செய்கிறேன் என்ற பெயரில் பங்குகளை உடனே உடனே வாங்கி வாங்கி விற்று வருகிறார்கள். ஆனால், இதுபோல டிரேட் செய்வது ரொம்பவே ரிஸ்க் ஆனது. 10ல் 9 பேர் டிரேட் செய்து நஷ்டத்தையே அடைவார்கள். ஆனாலும், குறுகிய காலத்தில் 5, 10 ரூபாய் லாபம் பார்க்க இதைச் செய்வார்கள். ஆனால், உண்மையில் பங்குச்சந்தையில் நீண்ட கால முதலீட்டின் மூலமாகவே பணத்தைப் பல மடங்கு சம்பாதிக்க முடியும் என்பதையே இது காட்டுவதாக உள்ளது.

நெட்டிசன்கள்

இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர், "இப்போது அவர் ஓய்வு பெற்று நிம்மதியாக வாழலாம். ஒரு நல்ல பிஸ்னஸை கூட தொடங்கலாம், அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டிருந்தார். மற்றொருவர், "பங்கு ஸ்லிட் ஆவது, போனஸ்கள் மற்றும் டிவிடெண்டுகள் காலப்போக்கில் எந்தளவுக்கு அதிகரிக்கும் என்பதை மக்கள் உணருவதில்லை. இது ஒரு மேஜிக்" எனப் பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர் நபர், "நல்ல நிறுவனப் பங்குகளை விற்க அவசரம் காட்டக் கூடாது.. ஒரு நிறுவனத்தின் பேசிக் விஷயங்கள் எல்லாம் சரியாக இருந்தால்.. காலப்போக்கில் நல்ல பலன் கிடைக்கும். இது வெறும் முதலீடு மட்டுமல்ல, தலைமுறை தலைமுறையாக உருவாக்கப்படும் சொத்து" என்றார்.

JSW ஸ்டீல் லிமிடெட் இந்தியாவின் முன்னணி ஸ்டீல் உற்பத்தி நிறுவனமாகும். இந்தியா முழுக்க இவர்களுக்கு வலுவான மார்கெட் இருக்கிறது. இப்போது இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை சுமார் ரூ.1004.90 ஆகவும், மார்கெட் ரூ.2.37 டிரில்லியனாகவும் உள்ளது.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+