Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கோல்டு ரன்.." அடுத்த ரவுண்டு சீக்கிரமே ஆரம்பிக்க போகுது.. நிர்மலா சொல்ல போகும் அந்த ஒரு வார்த்தை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தங்கம் விலை இந்தாண்டு தொடக்கம் முதலே வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டு இருந்தது. இப்போது சில நாட்களாக அதன் விலை சரிந்து வரும் நிலையில், இன்னும் எந்தளவுக்கு அது சரியும் என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இதற்கிடையே பட்ஜெட்டில் தங்கம் மீது முக்கியமான சில அறிவிப்புகள் வரலாம் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், நல்வாய்ப்பாக அதுபோல எந்தவொரு கூடுதல் வரி அறிவிப்பும் இல்லை.

கடந்த வாரம் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து இருந்தது. இந்தியாவில் 22 கேரட் தங்கமே கிட்டத்தட்ட ரூ.17,000ஐ தொட்டு இருந்தது. அதன் பிறகே சில காரணங்களால் தங்கம் விலை சரிந்தது. கடந்த 2, 3 நாட்களில் தங்கம் விலை வெகுவாகக் குறைந்துள்ளது. ஆனாலும், கூட இன்னுமே குறைய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Missed Gold Rally Budget 2026 May Give Second Chance Nirmala Sitharaman to have major announcement

தங்கம்

தங்கத்தை விடவும் வெள்ளியில் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கிறது. தங்கம் விலை சர்வதேச சந்தையில் 10% குறைந்திருந்த நிலையில், வெள்ளி விலை 30% வரை குறைந்தது. இப்படி மிகப் பெரியளவில் வெள்ளி விலை சரிய ஆரம்பித்துள்ளதால் அதன் பீக் விலையில் வெள்ளியை வாங்கியவர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். அதேநேரம் இன்னுமே கூட ஜனவரி தொடக்கத்துடன் ஒப்பிடுகையில் விலை அதிகமாகவே இருக்கிறது.

இந்தியா மட்டுமின்றி, சர்வதேச சந்தைகளிலும் இதேபோன்ற போக்கு தான் காணப்படுகிறது. கடந்த 2, 3 நாட்களாகச் சர்வதேச சந்தையில் விலை கணிசமாகச் சரிந்தது. இந்தியா தனது தங்கத் தேவையை முழுக்க முழுக்க இறக்குமதியிலேயே பூர்த்தி செய்கிறது. கிட்டத்தட்ட 80%க்கு மேல் தங்கம் இறக்குமதி தான் செய்யப்படுகிறது. இதனால் சர்வதேச சந்தையில் நடக்கும் மாற்றங்களை நாமும் தீவிரமாகக் கவனிக்க வேண்டி இருக்கிறது.

இறக்குமதி

மேலும், தங்கம் இறக்குமதி செய்யப்படுவதால் இந்தியாவின் அந்நிய செலாவணியும் பாதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கூட அந்நியச் செலாவணியில் பெரும் பங்கு தங்கம் கொள்முதலுக்குச் சென்றது. அதிகரித்து வரும் இறக்குமதிகள் வர்த்தகப் பற்றாக்குறையை அதிகரித்து, இந்த மாதம் ரூபாயை மிக மோசமான நிலைக்குத் தள்ளியது. இதனால் பட்ஜெட்டில் சில முக்கிய மாற்றங்கள் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இறக்குமதி வரி அதிகரிக்கப்படலாம் என்று கடந்த சில வாரங்களாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன. 2012 மற்றும் 2013ல் ரூபாயின் மதிப்பு இதேபோல பலவீனமடைந்தபோது அப்போது இருந்த மத்திய அரசு இதேபோலத் தான் வரிகளைக் கடுமையாக உயர்த்தியது.. இதன் மூலம் ரூபாய் மதிப்பு சரிவில் இருந்து மீண்டது. எனவே, மீண்டும் அதே நடைமுறையை மத்திய அரசு பின்பற்றலாம்.

வரி விவகாரம்

கடந்த 2024ல் தங்கக் கடத்தலைக் கட்டுப்படுத்தவும், சர்வதேச விலைகளுடனான வித்தியாசத்தைக் குறைக்கவும் தங்கம் மற்றும் வெள்ளி வரிகளைச் சுமார் 15 சதவீதத்திலிருந்து சுமார் 6 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. அப்போது தங்கம் விலை கணிசமாகக் குறைய இதுவும் ஒரு காரணமாக இருந்தது. இப்போது விலை உச்சத்தில் இருப்பதால் மேலும் இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் என்பது நகை வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது. இருப்பினும், அதிக இறக்குமதியால் ரூபாயின் மதிப்பு சரிவதால், இறக்குமதி வரியை உயர்த்த வேண்டும் என வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

முக்கியமான அறிவிப்பு

இதனால் நகை வியாபாரிகள், மக்கள் பட்ஜெட்டை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். சுங்க வரியில் சலுகை கிடைத்தால் வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் பயனளிக்கும் என்றும் தங்கம் விலை உச்சத்தில் இருப்பதால் மக்கல் பெரிதும் சிரமப்படுகிறார்கள் என்றும் ஜெய்ப்பூர் நகை வியாபாரிகள் சங்க உறுப்பினர் மணீஷ் குண்டேட்டா தெரிவித்தார்.

இப்போது தங்கத்துக்கான சுங்க வரி சுமார் 6 சதவீதமாகவே உள்ளது. இன்று பட்ஜெட்டில் இது தொடர்பான முக்கியமான அறிவிப்பு இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இறுப்பினும், தங்கத்திற்கான வரியை மத்திய அரசு குறைக்கவும் இல்லை. அதிகரிக்கவும் இல்லை. இதனால் நாளை சர்வதேச சந்தையை பொறுத்தே இந்தியாவிலும் தங்கம் விலை இருக்கும்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+