For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நம்ம ஊரின் பாரம்பரிய கிராமத்துத் தூவலில் ஆரோக்கியமான உணவாய் மாறும் இட்லியும், தோசையும்

தரமான தமிழக ஊர் பாரம்பரிய பண்டங்களை சுவைக்க விரும்புவோருக்கு நேட்டிவ்ஸ்பெஷல் (www.nativespecial.com) இணையம் மிகச் சிறந்த தேர்வு ஆகும்.

சென்னை: இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால் நாம் இதுவரை கேள்விப்படாத நோய்கள் நம்மைச் சார்ந்தவர்களுக்கு, ஏன் நமக்கும் கூட வரத் துவங்கி இருப்பது கசப்பான உண்மைதான். அப்படி (Osteoporosis) எனும் நோயினால் அவதியுற்ற தனது மகனுக்கு தனது சொந்த கிராமத்து அனுபவத்தில் அறிந்த முருங்கை இலை தூவலை தினசரி அரைத்துக் கொடுத்து குணமாக்கி இருக்கிறார் ஓர் எளிய கிராமத்துத் தாய்.

மிகச் சிறந்த தலைவரான பிடல் காஸ்ட்ரோ அவர்கள் முருங்கையின் அருமை உணர்ந்து "Magic Tree" என்று பெயரிட்டு இதனை கியூபாவில் விளைவித்து மக்களுக்கு வழங்க வழி செய்தார்.

Nativespecial re-shaped the online food market with the traditional value

முருங்கை இலையின் மகத்துவம் உணர்த்தும் இரண்டு தனித் தனி ஆராய்ச்சி முடிவுகள்,

1) 30 பெண்களைக் கொண்டு செய்யப்பட்ட ஒரு ஆராய்ச்சியில். தினசரி 7 கிராம் (ஒரு ஸ்பூன்) முருங்கை இலை பொடி தொடர்ந்து மூன்று மாதம் எடுத்தவர்களுக்கு சராசரியாக 13.5% சக்கரை குறைந்திருந்தது.

2) 6 நபர்களை வைத்து செய்யப்பட்ட மற்றொரு ஆராய்ச்சியில் 50 கிராம் அளவு முருங்கை இலை சேர்த்த பொழுது ஒரே வேளையில் 21% சக்கரை குறைந்தது.

இது மட்டும் இன்றி உடல் கொழுப்பினைக் கரைக்கக் கூடியது, ஆர்சனிக் விஷத்தை நீக்க வல்லது என அடுக்கிக் கொண்டே போகலாம்.

முருங்கைக்கீரையை வாரத்தில் இரண்டு நாட்கள் சமைத்து சாப்பிட்டு வந்தால் வாழ்க்கை முழுக்க ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய அவசியமே வராது. சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவு ஆய்வாளர்கள் இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இத்தகைய சிறப்பு மிகுந்த முருங்கை இலையினை நாம் தினசரி உணவில் எடுத்துக் கொள்ள நம் முன்னோர்கள் பயன்படுத்திய முறைதான் முருங்கை இலை தூவல்.

இன்றும் அரவக்குறிச்சி பகுதியில் முப்பது வருடத்திற்கு மேல் பழமையான மரங்களின் இலைகளை நிழலில் காய வைத்து, ருசிக்காக கடலைப் பருப்பு, வர மிளகாய் சேர்க்கப் பட்டு மிகவும் சுவையாக தயாரிக்கப் படுகிறது இந்த முருங்கை தூவல். நம் பாட்டன்மார்கள் இதனை களி, கேப்பை போன்றவற்றில் தூவி பயன்படுத்தினார்கள் . இன்றைய கால கட்டத்திற்கு இதனை தோசையில் தூவி தினசரி பயன்படுத்தலாம்.

நம்ம ஊர் முருங்கையிலையினை வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்துவிட்டு மீண்டும் அவற்றினை மாத்திரைகளாக பல ஆயிரம் ருபாய் குடுத்து வாங்கி உண்பதற்கு பதிலாக. நம் பாரம்பரிய முருங்கை இலைத் தூவலை நம் வீடுகளில் தொடர்ந்து பயன்படுத்துவது சாலச் சிறந்தது.

நம்ம வீட்டு தோசையினை ஆரோக்கியமானதாக்க தோசை சுடும் பொழுது ஒரு டீ ஸ்பூன் அளவு முருங்கை இலைத் தூவலைத் தூவினால் போதும். சுவையும், சத்தும் நிறைந்த தோசை தயார். தோசையுடன், முருங்கை இலையும் சேர்ந்து தரும் வாசமும், சுவையும் நினைத்தாலே வாயூரும்.

இவ்வளவு சிறப்புடைய முருங்கை இலை பொடியினை தமிழர் பாரம்பரிய பண்டங்களை சந்தைப் படுத்தும் நேட்டிவ்ஸ்பெஷல் இணையத்தில் இப்பொழுது அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

முருங்கை மரத்திற்கு பெயர் போன ஊஞ்சங் காட்டுத் தோட்டங்களில் இருந்து நிழலில் காயவைத்து பாரம்பரிய முறையில் அரைத்த முருங்கை தோசை தூவல் இப்பொழுது நம் கைக்கெட்டும் தூரத்தில். இந்த லிங்கில் ஆர்டர் செய்தால் போதும் ஒரே நாளில் டெலிவரி.

Nativespecial re-shaped the online food market with the traditional value

இது மட்டும் இன்றி நம்ம ஊர் பாரம்பரிய பண்டங்கள் அனைத்தையும் நேட்டிவ்ஸ்பெஷல் இணையத்தில் வாங்கலாம். Cash on delivery வசதியும் உண்டு.

தமிழகம் மற்றும் பெங்களூர் - ஒரு நாள் டெலிவரி
பிற தென் இந்திய பகுதிகள் - 2 நாள் டெலிவரி
வட இந்திய பகுதிகள் - 3 நாள் டெலிவரி
அமெரிக்கா, அமீரகம், பிற உலக நாடுகளுக்கு - 5 ஆம் நாள் டெலிவரி

இது பற்றி நேட்டிவ்ஸ்பெஷல் இணையத்தின் நிறுவனரிடம் கேட்ட பொது.

"நாங்கள் நல்ல சம்பளத்துடன் கூடிய மென்பொருள் வேலையினை விடுத்து நேட்டிவ்ஸ்பெஷல் இணையம் துவங்கியதே இது போன்ற நம்ம ஊர் பாரம்பரிய பண்டங்களை நம் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான். எங்கள் இணையத்தில் உள்ள ஒவ்வொரு பொருளுக்குப் பின்பும் இது போன்ற நிறைவான பாரம்பரியம் கட்டாயம் இருக்கும். நான்கு வருடம் கழித்தும் நாங்கள் வெறும் 80 - 90 பொருட்களை மட்டும்தான் எங்கள் இணையத்தில் லிஸ்ட் செய்திருக்கிறோம் காரணம் எங்கள் இணையத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் நிறைவான பாரம்பரியம் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். " என்று புன்னகையுடன் உறுதியாகக் கூறுகிறார்.

Nativespecial re-shaped the online food market with the traditional value

தரமான நம்ம ஊர் பாரம்பரிய பண்டங்களை சுவைக்க விரும்புவோருக்கு நேட்டிவ்ஸ்பெஷல் இணையம் மிகச் சிறந்த தேர்வு. ஆண்டிபட்டி முதல் அமெரிக்கா வரை அதிவேக டெலிவெரியில் கலக்கும் நேட்டிவ்ஸ்பெஷல் இணையத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X