டாடா குழுமத்தில் வெடித்த பிரச்சனை.. சந்திரசேகரனுக்கு வேட்டு வைக்கும் நோயல் டாடா!

Subscribe to Oneindia Tamil

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யமான டாடா குழுமத்தின் தலைமைப் பொறுப்பில் ஒரு புதிய பிரச்சனை வெடித்துள்ளது. டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிர்வாகத்தில், நோயல் டாடா தலைமையிலான டாடா டிரஸ்ட்ஸ், தற்போதைய சேர்மன் என்.சந்திரசேகரனின் மூன்றாவது பதவிக்கால நீட்டிப்புக்கு மீண்டும் முட்டுக்கட்டை போட்டு உள்ளார். டாடா குழுமத்தில் பல முக்கிய விவகாரங்கள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், இந்தப் பதவி நீட்டிப்பு தொடர்பான விவாதம் இப்போது வேண்டாம் என நோயல் டாடா தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி நடைபெற்ற டாடா சன்ஸ் போர்டு கூட்டத்திலேயே என்.சந்திரசேகரனின் மூன்றாவது பதவிக்கால நீட்டிப்பு குறித்த பரிசீலனைகள் தள்ளிவைக்கப்பட்டிருந்தன. அப்போது நோல் டாடா எழுப்பிய பல்வேறு முக்கியக் பிரச்சனைகளுக்கு விரிவான விளக்கங்களை அளிப்பதற்காக, டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் மே மாதம் 26ஆம் தேதி ஒரு பிரத்யேக சிறப்பு போர்டு மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற டாடா சன்ஸ் நிறுவனத்தின் உயர்மட்டக் குழு கூட்டத்திற்குப் பிறகு, சில இயக்குநர்கள் அடுத்த கூட்டத்தில் சந்திரசேகரனின் மறுநியமனம் தொடர்பான விஷயத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாமா என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த நோல் டாடா, இன்னும் பல கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட வேண்டியுள்ளதாலும், பல முக்கிய விவகாரங்கள் தீர்க்கப்படாமல் நீடிப்பதாலும் தற்போதைக்கு இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். டாடா சன்ஸ் ஹோல்டிங் நிறுவனத்தில் டாடா டிரஸ்ட்ஸ் அமைப்பு 66 சதவீதப் பெரும் பங்குகளைக் கொண்டு அதனைக் கட்டுப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

noel tata TATA N Chandrasekaran noel tata blocks chandrasekaran tata sons chairman reappointment n chandrasekaran third term tata sons leadership crisis noel tata vs chandrasekaran tata group strategic roadmap shapoorji pallonji exit plan tata sons listing debate air india bigbasket performance tata sons board meeting june 2026

3 முக்கியப் பிரச்சனைகள் என்ன?

டாடா குழுமத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மூன்று மிக முக்கியமான விவகாரங்களில் தலைவர் சந்திரசேகரனிடம் இருந்து கூடுதல் தெளிவை நோல் டாடா மிகவும் உறுதியாக எதிர்பார்ப்பதாக இந்த விவகாரத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முதலாவதாக, டாடா குழுமத்தின் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டம் (Five-year strategic roadmap) என்ன என்பது குறித்த முழுமையான தெளிவைக் கோரியுள்ளார்.

இரண்டாவதாக, டாடா சன்ஸ் நிறுவனத்தில் 18 சதவீதப் பங்குகளை வைத்துள்ள ஷாபூர்ஜி பல்லோன்ஜி (SP Group) குழுமம் தங்களின் கடன்களை அடைப்பதற்காக டாடா பங்குகளை விற்க விரும்புகிறது. அவ்வாறு எஸ்பி குழுமத்திற்கு வெளியேறும் வாய்ப்பை (Exit option) வழங்கும் போது, அதற்காக டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பொதுப் பங்குச் சந்தையில் பட்டியலிடாமல் (Without going public) எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள் என்ற கட்டமைப்பு குறித்த தெளிவை நோல் டாடா கேட்கிறார்.

மூன்றாவதாக, டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவது (Listing) குறித்து நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வரும் விவகாரத்தில் சந்திரசேகரனின் அதிகாரப்பூர்வமான இறுதி நிலைப்பாடு மற்றும் திட்டம் என்ன என்பதைத் தெளிவுபடுத்துமாறு அவர் கோரியுள்ளார்.

இந்த விவகாரங்கள் தீர்க்கப்படாமல் சந்திரசேகரனின் பதவி நீட்டிப்பு பற்றி விவாதிப்பது சரியல்ல என்று நோயல் டாடா கருதுகிறார்.

ஏர் இந்தியா, பிக்பேஸ்கட்

இந்த முக்கிய பிரச்சனை மத்தியில் டாடா குழுமத்தின் கீழ் இயங்கி வரும் ஏர் இந்தியா (Air India) விமான நிறுவனம் மற்றும் ஆன்லைன் மளிகைப் பொருட்கள் வர்த்தக நிறுவனமான பிக்பேஸ்கட் (BigBasket) ஆகியவற்றின் நிதிச் செயல்பாடுகள் மற்றும் தற்போதைய செயல்திறன் குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. டாடா குழுமத்தில் புதிதாக துவங்கப்பட்ட அனைத்து டிஜிட்டல் வர்த்தகமும் பெரும் இழப்பை எதிர்கொண்டு வருகிறது. இதை எப்படி சமாளிக்கலாம் என கேள்வி பிப்ரவரி கூட்டத்தில் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய இக்கட்டான சூழலில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த அதிகாரப்பூர்வ போர்டு கூட்டம் வரவிருக்கும் ஜூன் மாதம் 12ஆம் தேதி (June 12) நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் குழுமத்தின் வருடாந்திர கணக்கு வழக்குகளைப் (Annual accounts) பற்றி விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்மட்ட மோதல்

நோயல் டாடாவின் இந்த நிலைப்பாடு, சந்திரசேகரனுடன் மோதலை ஏற்படுத்தும் என்று உள்ளார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சந்திரசேகரனுக்கு இந்த பதவி நீட்டிப்பு அளிக்கப்படாவிட்டால் டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு புதிய தலைமை நியமிக்க வேண்டியிருக்கும். சந்திரசேகரன் தலைமையில் டாடா குழுமம் பல ஆண்டுகளுக்கு பின்பு புதிய வர்த்தகத்தில் களமிறங்கி பெரிய அளவிலான வருமானத்தையும் வளர்ச்சியை பார்த்து வருகிறது. ஆனால் இந்த புதிய வர்த்தகங்கள் இன்னும் லாப நிலைக்கு திரும்பாமல் இருப்பது நோயல் டாடாவின் முக்கிய பிரச்சனையாக உள்ளது.

டாடா சன்ஸ் தலைவராக முதல் முறை சந்திரசேகரன் நியமிக்கப்படும் போது இப்போட்டியில் நோயல் டாடா இருந்தார், ஆனால் ரத்தன் டாடா மற்றும் டாடா நிர்வாக அதிகாரிகள் சந்திரசேகரனை தேர்வு செய்தனர். இதேவேளையில் ரத்தன் டாடா மறைந்த பின்பு மொத்த நிர்வாக அதிகாரமும் நோயல் டாடா மற்றும் அவரது குடும்பத்திற்கு வந்த நிலையில், உயர்மட்ட நிர்வாகத்தில் தொடர்ந்து பிரச்சனைகள் உருவாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு டாடா டிரஸ்ட் அமைப்புகளில் இயக்குநர்களை நியமிப்பதில் பிரச்சனை உருவானது, தற்போது டாடா சன்ஸ் தலைமை பொறுப்பில் இருக்கும் சந்திரசேகரனின் பதவி நீட்டிப்பில் பிரச்சனை உருவாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+