3 வருடமாக மக்கள் பணத்தில் குளிர்காய்ந்த அரசு நிறுவனம், இப்போ மட்டும் ஏன்? தீபக் கேள்வியால் அரசு ஷாக்

Subscribe to Oneindia Tamil

மும்பை: கடந்த மூன்று ஆண்டுகளாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தபோதும், இந்திய மக்கள் அதன் பலனை அனுபவிக்கவில்லை என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்ட துவங்கியுள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக அப்படியே நிலையாக வைக்கப்பட்டதால், அரசும், எண்ணெய் நிறுவனங்களும் பெரும் லாபத்தை ஈட்டியுள்ளன. இப்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், இந்த லாபத்தை பயன்படுத்தி இழப்பை ஈடுகட்ட வேண்டும்.

Petrol diesel Modi oil psus 82000 crore profit when crude cheap petrol diesel prices not reduced low crude indian oil companies massive profit fy24 deepak shenoy oil companies criticism psu oil marketing companies absorb losses modi government oil profit public burden iran war petrol diesel price hike india crude oil low price benefit not passed indian oil retail profit 82000 crore government should not hike fuel prices now psu oil companies take hit now india oil companies profit capitalism socialism debate tasmac scam watch not relevant here wait no deepak shenoy on oil psu profits india energy companies profit when crude low 82000 PSU 82000 PSU PSU

பொதுமக்கள் பலனடையவில்லை

கடந்த மூன்று ஆண்டுகளில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாறாமல் இருந்தது. இதனால் சாதாரண குடும்பங்கள் எரிபொருள் செலவில் எந்த சேமிப்பையும் பெறவில்லை. மாறாக, அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் இந்த காலகட்டத்தில் பெரும் வருமானத்தை ஈட்டியுள்ளன. இந்த நிலை பொதுமக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரும் லாபம்

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை ரீடைல் எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் 2024ஆம் நிதியாண்டு முதல் இதுவரை ரூ.82,000 கோடிக்கு மேல் லாபம் ஈட்டியுள்ளது. இது ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் லாபம் மட்டுமே, இந்தியாவில் மொத்தம் மூன்று முக்கிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உள்ளது.

இந்த லாபம் முக்கியமாக சுத்திகரிப்புக்குப் பிறகான விற்பனை (மார்க்கெட்டிங்) மூலம் கிடைத்தது. சுத்திகரிப்பு (ரிஃபைனிங்) பகுதியில் லாப விளிம்பு மிகக் குறைவாகவே இருந்தது. எனவே, கச்சா எண்ணெயை பெட்ரோலாக மாற்றி விற்பனை செய்வதன் மூலம் கிடைத்த லாபம் பெருமளவு இருந்தது.

இப்போது இழப்பை நிறுவனங்களே ஏற்க வேண்டும்

தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில் பொதுமக்களுக்கு விலை குறைவாக கொடுக்கப்படாத லாபத்தை இப்போது இழப்பை ஈடுகட்ட பயன்படுத்த வேண்டும் என்று முதலீட்டு நிபுணர்கள் கேப்பிடல் மைண்ட் தீபக் ஷெனாய் வலியுறுத்தினார்.

இந்த நிறுவனங்கள் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள் (PSU) என்பதால், மக்களின் பணத்தைப் பயன்படுத்தி லாபம் ஈட்டிய நிறுவனங்கள் இப்போது இழப்பை ஏற்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

இதனால் ஈரான் போர் காரணம் காட்டி எரிபொருள் விலையை உயர்த்த கூடாது என்பது மக்களின் கருத்தாக உள்ளது. இதேவேளையில் மத்திய அரசு தரப்பிலும் எரிபொருள் விலை உயர்வு இல்லை என அறிவித்தாலும், தொடர்ந்து வெளியாகும் எண்ணெய் நிறுவனங்களின் தினசரி இழப்பு அளவீடு, 60 நாட்களுக்கு மட்டுமே இருக்கும் எரிபொருள் இருப்பு, மோடியின் சிக்கன பேச்சு ஆகியவை எப்போது வேண்டுமானாலும் எரிபொருள் விலையை மத்திய அரசு உயர்த்தலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது.

இதைவிட முக்கியமாக தேர்தல் முடிந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+