வருஷத்திற்கு ₹3,600 பேங்க் ஓடிபி பெற மட்டுமே செலவு செய்கிறோம்.. இது அப்பட்டமான ஒடிபி வரி

Subscribe to Oneindia Tamil

சென்னை:"வருஷத்திற்கு ₹3,600 வெறும் பேங்க் ஓடிபி பெறுவதற்காக மட்டுமே செலவிடுகிறோம்.. இது உண்மையிலேயே செல்போன் சேவையா அல்லது ஒடிபி வரியா"? என்று நெட்டிசன் ஒருவர் எழுப்பிய கேள்வி பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்களிடம் ஏற்கனவே வீட்டில் வைஃபை இருக்கும்போது, உள்வரும் அழைப்புகள் மற்றும் ஓடிபி அல்லது குறுஞ்செய்தி போன்ற அத்தியாவசியச் சேவைகளை மட்டும் வழங்கும் வகையில் ஆண்டுக்கு ₹500 கட்டணத்தில் பேசிக் பிளான் ஏன் இருக்கக்கூடாது? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இன்றைக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மோனோபோலி மோசமாக உள்ளது. ஜியோ, ஏர்டெல் வைத்தது தான் சட்டம் என்பதாக தொலைத்தொடர்பு சேவைகள் உள்ளன. மக்கள் உண்மையில் பாவம்.. ஏனெனில் வெறும் இன்கம்மிங் வைத்துக் கொண்டு அவ்வ்ப்போது ஓடிபி பெறுவதற்காகவே மாதம் 300 ரூபாய் செலவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய அநியாயம் என்கிற போதிலும், டிராய் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை மட்டுமே பார்ப்பதாக குற்றச்சாட்டு வலுத்து வருகிறது. இணைய வசதியே தேவையில்லாதவர்களை கூட கட்டாயப்படுத்தி விற்பதும் நடக்கிறது.

Paying 3 600 a year just to receive a bank OTP this is an outright OTP tax

மக்களுக்கு தொலைத்தொடர்பு வசதிகள் அத்தியாவசியமான ஒன்று.. ஆனால் சாமானியர்களுக்கு அந்த சேவையை பெற மிகப்பெரிய அளவில் பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது. அவர்களுக்காகவே மிக குறைந்த விலையில் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று டிராய் கேட்கவில்லை. அதேபோல் மாதம் என்பது 30 நாளை கொண்டது. ஆனால் 28 நாட்களாக மாற்றி, கூடுதலாக ஒரு மாதம் என 13 மாதங்களுக்கு கட்டணத்தை வசூலிக்கின்றன ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள். மோனோபோலி என்பது முற்றுரிமை.. சந்தையில் இவர்களை தாண்டி யாருமே இல்லாத நிலை.. இவர்களிடம் தான் சேவை பெற வேண்டிய நிலை உள்ளது.எனவே அரசு தொலைத்தொடர்பு சேவையில் இஷ்டத்திற்கு கட்டணத்தை உயர்த்துவதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.

பூஜா என்பவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "ஆண்டுக்கு ₹3,600 வெறும் பேங்க் ஓடிபி பெறுவதற்காக மட்டுமே செலவிடுகிறோம்.. இது உண்மையிலேயே செல்போன் சேவையா அல்லது ஒடிபி வரியா"? இன்றைய சூழலில், முக்கியமான அனைத்துக் காரியங்களுக்கும் செல்போன் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது:

வங்கிச் சேவைகள்

யுபிஐ

கேஒய்சி

கடன் அட்டைகள்

காப்பீடு

அரசுச் சேவைகள்

இருகட்ட பாதுகாப்பு

உங்கள் சிம் கார்டு செயலிழந்து போனால், பல அத்தியாவசிய நிதி மற்றும் டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துவது கடினமாகிவிடும்.

ஆனால், ஒருவருக்கு மொபைல் டேட்டா தேவையில்லை, ஏற்கனவே வீட்டில் வைஃபை வசதி உள்ளது, மேலும் இந்தச் சிம் கார்டை, குறுஞ்செய்தி மற்றும் உள்வரும் அழைப்புகளுக்குப் பெற மட்டுமே பயன்படுத்துகிறார் என்றால்... அவர்கள் ஏன் இன்னும் அதிக விலையுள்ள ரீசார்ஜ் திட்டங்களுக்குத் தொடர்ந்து பணம் செலுத்த வேண்டும்?

6 பேர் கொண்ட ஒரு குடும்பத்தைக் கற்பனை செய்து பாருங்கள்:

₹3,600 × 6 = ஆண்டுக்கு ₹21,600.

வெறும் செல்போன் எண்களைச் செயல்பாட்டில் (Active) வைத்திருப்பதற்கு மட்டுமே இந்தச் செலவு!

மக்களிடம் ஏற்கனவே வீட்டில் வைஃபை இருக்கும்போது, உள்வரும் அழைப்புகள் மற்றும் ஓடிபி அல்லது குறுஞ்செய்தி போன்ற அத்தியாவசியச் சேவைகளை மட்டும் வழங்கும் வகையில் ஆண்டுக்கு ₹500 கட்டணத்தில் பேசிக் பிளான் ஏன் இருக்கக்கூடாது?

டேட்டாவை விற்பனை செய்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதில் முழு உரிமையும் உள்ளது - அது நியாயமானதுதான்.
ஆனால், இங்கே எழும் பெரிய கேள்வி இதுதான்:

டிஜிட்டல் இந்தியாவில், வங்கிச் சேவைகள், KYC மற்றும் 2FA போன்ற அத்தியாவசியச் சேவைகளுக்கான அணுகலைத் தக்கவைத்துக் கொள்ள மட்டுமே மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ரூபாயைச் செலவழிக்க வேண்டுமா?

செல்போன் எண் என்பது நமது டிஜிட்டல் அடையாளத்தின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது என்றால், சிம் கார்டைச் செயல்பாட்டில் வைத்திருக்க மட்டும் ஒரு மலிவான அடிப்படைத் திட்டம் இருக்க வேண்டும் அல்லவா? இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இது குறித்து தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டிய நேரம் இதுவாகக் கூட இருக்கலாம்!" இவ்வாறு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+