EMI vs பெர்சனல் லோன்.. இரண்டில் எது பெஸ்ட்? நமக்கு எதில் லாபம்! "இந்த" ஒரு விஷயத்தை மறக்காதீங்க
சென்னை: இந்தக் காலத்தில் இளைஞர்கள் செலவுகளைச் சமாளிக்க கிரெடிட் கார்டு ஈஎம்ஐ அல்லது பெர்சனல் லோன் இரண்டில் ஒன்றை நம்பியே இருக்க வேண்டியுள்ளது. உண்மையில் இந்த இரண்டில் நமக்கு எதில் லாபம்.. எதை எடுத்தால் சரியாக இருக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தக் காலத்தில் வருமானத்தை விடவும் பலருக்கும் செலவுகள் அதிகமாக இருக்கிறது. இதனால் அதைச் சமாளிக்கப் பெரும்பாலான மக்கள் பெர்சனல் லோன் மற்றும் கிரெடிட் கார்டு EMIகளை தான் நம்பி இருக்கிறார்கள். இந்த டிஜிட்டல் உலகில் இது பலருக்கும் தேவைப்படுகின்றன. பொதுவாக, பெர்சனல் லோனை விட கிரெடிட் கார்டு EMIக்கான வட்டி விகிதம் குறைவாக இருக்கும் என்று பலர் நினைக்கின்றனர். இது உண்மை தானா என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.!

பெர்சனல் லோன்
பெரிய செலவுகள் உள்ளன என்றால் பெர்சனல் லோன் சரியாக இருக்கும். 2 முதல் 5 ஆண்டுகள் வரை தவணை கட்ட வேண்டும். ஏனெனில், ஒப்பீட்டளவில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் குறைவாக இருக்கும். மேலும், ஒவ்வொரு மாதமும் நாம் கட்ட வேண்டிய ஈஎம்ஐ கூட நிலையாகவே இருக்கும்.. மறுபுறம் சின்ன தொகை அல்லது சீக்கிரம் (3 முதல் 12 மாதங்கள்) செலுத்தும் செலவுகள் என்றால் கிரெடிட் கார்டு EMIகள் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கலாம். அதேநேரம் கிரெடிட் கார்ட்டில் நீங்கள் திரும்பச் செலுத்தும் காலம் அதிகரிக்கும்போது அது காஸ்ட்லியாக மாறும்!
உங்களுக்கு எது சரி என்பதைத் தேர்வு செய்வதற்கு முன் பல விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். வெறும் வட்டி விகிதத்தை மட்டும் பார்க்காமல் பிராசஸிங் கட்டணம், GST, இன்சூரன்ஸ் ஆகியவற்றையும் சேர்த்துப் பாருங்கள். மேலும், முன்கூட்டியே செலுத்தும்போது சில நேரங்களில் அபராதம் விதிக்கப்படலாம். எனவே, அதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்!
கிரெடிட் கார்டு
கிரெடிட் கார்டில் EMI போடும்போது உங்கள் மொத்த லிமிட்டில் இருந்து அந்தத் தொகை குறையும் என்பதை நினைவில் கொள்ளவும். அதாவது உங்கள் கிரெடிட் கார்டு லிமிட் 60 ஆயிரம் என வைத்துக் கொள்வோம். 36 ஆயிரத்திற்கு நீங்கள் ஒரு பொருளை வாங்குகிறார்கள். அதை 6 தவணையாகக் கட்டுகிறீர்கள் என்றால்.. மாதம் ரூ.6000 கட்ட வேண்டும். இருப்பினும், உங்கள் கார்டு லிமிட் மொத்த ரூ.36 ஆயிரத்திற்கு பிளாக் ஆகும். நீங்கள் ஒவ்வொரு மாதத் தவணை கட்டும்போதும் அந்த ரூ.6000 மட்டும் லிமிட்டில் இருந்து குறையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
குறைந்த காலத்திற்குள் செலுத்தக்கூடிய ஒரு சிறிய, திட்டமிட்ட செலவிற்கு, கிரெடிட் கார்டு ஈ.எம்.ஐ. சரியாக இருக்கும். குறிப்பாக இப்போது பல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள், நீங்கள் கிரெடிட் கார்டு ஈஎம்ஐ-ல் பொருளை வாங்கினால் சலுகைகளை அள்ளி தருகிறார்கள். எனவே, அதுபோன்ற நேரத்தில் இதைப் பயன்படுத்தலாம்.
எதற்கு எது சரியாக இருக்கும்
மேலும், முன்கூட்டியே முழுப் பணத்தைச் செலுத்தும் வகையில் கார்ட்டை யூஸ் செய்துவிட்டும் கூட அதை ஈ.எம்.ஐ.யாக மாற்றலாம். இதன் மூலம் ஒரே நேரத்தில் அதிகப் பணம் முடங்காமல் இருக்கும். அதேநேரம் நீங்கள் இதுபோல செய்யும்போது லிமிட் பாதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும், இதுபோல செய்யும்போது பெரிய தொகையைக் கட்டுவது போல இருக்காது. எனவே, தேவையில்லாத பொருட்களை வாங்கி கடன் வலையில் சிக்கும் ஆபத்தும் இருக்கிறது.
பெரிய தொகைகள், நீண்ட கால தவணைகள் என்றால் அதற்கு பெர்சனல் லோன் சரியாக இருக்கும். கார்டு லிமிட் எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது என நினைத்தாலும் நீங்கள் இதையே தேர்வு செய்யலாம். இதன் மூலம் கிரெடிட் கார்டு அவசரத் தேவைகளுக்கு எப்போதும் இருக்கும். அதேநேரம் இதில் Hidde charges அதிகம்.. எனவே, அதிலும் ஒரு கண் இருக்கட்டும்.
எளிய விளக்கம்
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் வாங்கும் கடன் தொகை பெரியதாக இருந்து.. அதைத் திருப்பிச் செலுத்தப் பல ஆண்டுகள் ஆகும் என்றால் பெர்சனல் லோன் சரியாக இருக்கும். அதேநேரம் கடன் வாங்கும் தொகை சிறியதாக இருந்து.. ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் பொருட்களை வாங்க என்றால் இது சரியாக இருக்கும்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications