1-2 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை உயரும்.. மோடியின் சீரியஸ் டோன் சொல்வது என்ன? ரவுண்ட் கட்டிய நெட்டிசன்கள்!

Subscribe to Oneindia Tamil

பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஹைடெக் சிட்டியான ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு முக்கிய கூட்டத்தில் பொதுமக்களுக்கு உணர்ச்சிகரமான வேண்டுகோள் விடுத்தார். "மக்கள் தங்கள் தனிப்பட்ட வசதியை விட நாட்டின் நலனை முதன்மைப்படுத்த வேண்டும்" என்று மோடி பேசியுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது சமுக வலைத்தளத்திலும் எதிரொலித்துள்ளது.

மத்திய கிழக்கு நெருக்கடி மற்றும் உலக அளவில் எரிபொருள் விலைகள் உயர்ந்து வரும் சூழலில் இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டது. இந்தியாவின் அன்னிய செலாவணியை சேமித்து, இறக்குமதி சார்பைக் குறைக்க வேண்டும் என்ற அடிப்படைியில் 7 முக்கிய விஷயங்களை நாட்டு மக்களுக்கு தெரிவித்தார் மோடி.

Modi petrol diesel Gold pm modi petrol diesel price hike modi fuel saving appeal modi postpone gold purchase social media reaction modi speech modi hyderabad speech work from home modi appeal carpooling india modi ev adoption modi postpone foreign travel modi india foreign exchange crisis netizens predict diesel price rise petrol price increase 1-2 days modi serious tone citizens west asia crisis india economy modi nation first appeal 1-2

பிரதமரின் 7 முக்கிய அறிவுரை

1. இந்தியாவில் இருக்கும் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை மீண்டும் கொண்டு வருமாறு அவர் கோரினார். இதன் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடு கணிசமாகக் குறையும் என்று அவர் விளக்கினார்.

2. அதேபோல், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு ஆகியவற்றைத் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தாமல் இருக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

3. பர்சனல் வாகனங்களுக்குப் பதிலாக பேருந்து, மெட்ரோ போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும், கார் பூலிங் என்று அழைக்கப்படும் வாகனங்களை பகிர்ந்து பயணிக்கும் முறையை ஊக்குவிக்குமாறும் அவர் கூறினார். இந்த நடவடிக்கை மூலம் எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படும் டாலர் இருப்பை சேமிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

4. மேலும், சரக்கு மற்றும் பார்சல் போக்குவரத்தை சாலை வழியிலிருந்து ரயில்வேக்கு மாற்றுமாறு வணிக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தினார்.

5. எலக்ட்ரிக் வாகனங்களை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள் இறக்குமதியைக் குறைக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

6. வெளிநாட்டுப் பயணங்களைப் பொறுத்தவரை, அத்தியாவசியமற்ற வெளிநாட்டு விடுமுறைகள் மற்றும் பயணங்களை குறைந்தபட்சம் ஒரு ஆண்டு காலம் தள்ளிப் போடுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார். இதன் மூலம் வெளிநாட்டு நாணய செலவுகளை மிச்சப்படுத்த முடியும் என்று அவர் விளக்கினார்.

7. அதேபோல், தங்கம் வாங்குவதைப் பொறுத்தவரை, திருமணங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற நோக்கங்களுக்காக தங்க நகைகளை வாங்குவதை ஒரு ஆண்டு காலம் தவிர்க்குமாறு இந்திய குடும்பங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் அதிரடி

பிரதமரின் இந்த அறிவுறுத்தல்கள் சமூக ஊடகங்களில் உடனடியாக பெரும் எதிர்பு அலை வீசியது.

ஒரு பயனர், "மூலதன ஆதாய வரியை குறைத்தால் டாலர்கள் தானாக வரும். கடினமான காலங்களில் புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் தேவை" என்று கருத்து தெரிவித்தார்.

மேலும் ஒரு பயனர், "எரிபொருள் சிக்கலில் உருவான குமிழி வெடிக்கப் போகிறது. பல வாரங்களாக மறைக்கப்பட்ட கடுமையான உண்மை விரைவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்" என்று எச்சரித்தார்.

இன்னொரு பயனர், "இது உணர்ச்சிகரமான வேண்டுகோள் அல்ல. இது திட்டமிட்ட நடவடிக்கை. டீசல், பெட்ரோல் விலைகள் கூர்மையாக உயரப் போகிறது. ஒன்றிரண்டு நாட்களில் பாருங்கள்" என்று கூறினார்.

மற்றொரு பயனர், "மக்களைத் தியாகம் செய்யச் சொல்கிறார்கள், ஆனால் அரசின் பொறுப்பு எங்கே? பணவீக்கம், EMI, எரிபொருள் விலை, வேலைவாய்ப்பு நிச்சயமின்மை ஆகியவற்றுக்கு மத்தியில் நாட்டை கட்டமைப்பது என்பது பொதுமக்கள் மட்டும் சரிசெய்வதா?" என்று கேள்வி எழுப்பினார்.

மற்றொரு பயனர், "@narendramodi அவர்களே ஒரு ஆண்டுக்கு தங்க நகை வாங்க வேண்டாம் என்று கூறினீர்கள். ஆனால் தங்க நகைத் துறையில் நான்கு மில்லியன் பேர் வேலை செய்கிறார்கள், அவர்களின் நிலை என்ன?" என்று கேள்வி எழுப்பினார்.

இன்னும் ஒரு பயனர், "இந்த அறிவுறுத்தல்கள் எப்போது அரசின் உண்மையான திறனின்மையாக வெளிப்படும்? சில விஷயங்களில் நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் அது மக்களின் தேர்வாக இருக்க வேண்டும், கட்டாயமாக இருக்க கூடாது.

இந்தப் பதிவுகள் அனைத்தும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+