சிறகடிக்க ஆசை: திடீரென மாயமான மீனா... கதையே மாறிப்போச்சே? இனி முத்து நிலைமை? அதிர்ச்சியில் விஜயா
சென்னை: விஜய் டிவியின் பிரபலமான சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தி வருகின்றன. இன்றைய (Siragadikka Aasai serial june 20th episode) ஜூன் இருபதாம் தேதிக்கான எபிசோடில் ரோகிணியின் விவாகரத்து விவகாரம் ஒரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு பக்கம் மீனா திடீரென காணாமல் போன சம்பவம் கதையை புதிய கோணத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
ரோகிணி சொன்ன விஷயம்
மனோஜ் மற்றும் விஜயா, ரோகிணியுடன் நடைபெற்று வரும் விவாகரத்து விவகாரம் தொடர்பாக வக்கீலை சந்திக்கின்றனர். அப்போது ரோகிணி, ஒரே செட்டில்மெண்டாக 5 லட்சம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே விவாகரத்து பேப்பரில் கையெழுத்திடுவேன் என கூறியிருப்பதை விஜயா சொல்கிறார். இதைக் கேட்ட வக்கீல், இதில் ஏதோ பிளான் இருப்பதாக சந்தேகப்படுகிறார்
உடனே ரோகிணியிடம் நேரடியாக கால் பண்ணி உண்மையை உறுதிப்படுத்தும் வக்கீல், 5 லட்சம் கிடைத்தால் விவாகரத்துக்கு சம்மதமா என கேட்கிறார். வெளிப்படையாக சம்மதம் தெரிவித்தாலும், மனோஜால் அந்த தொகையை ஏற்பாடு செய்ய முடியாமல் போக வேண்டும் என்பதே ரோகிணியின் உள்ளார்ந்த எண்ணமாக இருப்பது தெரிகிறது.

மனோஜ் அதிர்ச்சி
அப்போது மனோஜ் பணத்தை ரெடி பண்ண முடியாது என்பது போல சொல்லிக் கொண்டிருக்க உடனே வக்கீல் உன்னோட , தம்பி முத்து ஒரே நேரத்தில் 38 லட்சம் ரூபாய் ஏற்பாடு செய்து வீட்டையே மீட்டார், நீ ஒரு பெரிய தொழிலதிபர் என்று சொல்லிக்கொள்கிறாய், 5 லட்சம் கூட ஏற்பாடு செய்ய முடியாதா என கேட்டு அவரை சிக்கலில் தள்ளுகிறார்.
இதற்கிடையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறுகிறது. மீனாவின் அம்மா சந்திரா, யாரோ இரண்டு பேர் தன்னை தொடர்ந்து கண்காணித்து வருவதாக பயந்தபடியே சொல்கிறார். இதனால் பதற்றமடைந்த மீனா, அம்மாவை பாதுகாப்பாக பார்வதி வீட்டில் தங்க வைக்க முடிவு செய்கிறார்.
காணாமல் போன மீனா
அடுத்த நாள் காலையிலேயே பார்வதியை சந்திக்கும் மீனா, தயக்கத்துடன் விஷயத்தை சொல்கிறார். ஆனால் பார்வதி, ரேகா மற்றும் சத்யாவின் திருமணம் முடியும் வரை சந்திரா தன்னுடைய வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கலாம் என கூறி மீனாவுக்கு நம்பிக்கை அளிக்கிறார். இதனால் நிம்மதியடைந்த மீனா, அம்மா அழைத்து வர கிளம்பிச் செல்கிறார்.
ஆனால் அதன்பிறகு நடந்ததே அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. நீண்ட நேரமாகியும் மீனா திரும்பாததால் முத்து அவருக்கு போன் செய்கிறார். ஆனால் லைன் கிடைக்கவில்லை. அண்ணாமலையும் முயற்சி செய்கிறார். அதேபோல் சந்திரா மற்றும் பார்வதியிடமும் விசாரித்தும் மீனா எங்கே போனார் என்ற தகவல் கிடைக்கவில்லை.
அடுத்த வாரம் எபிசோடு
இதனால் பதற்றமடைந்த முத்து, பூ மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளிடம் நேரில் சென்று விசாரிக்கிறார். ஆனால் மீனாவைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. திடீரென காணாமல் போன மீனாவுக்கு என்ன ஆனது? சந்திராவை கண்காணித்த மர்ம நபர்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கிறதா? சிந்தாமணி அல்லது ரோகிணியின் திட்டமா இதற்கு பின்னால் உள்ளது? என்ற கேள்விகளுடன் அடுத்த எபிசோடிற்கான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.














Click it and Unblock the Notifications