உயிர் போய் உயிர் வருது.. மெஸ்ஸியவே உரசிட்டாங்க.. 14 நிமிடங்களில் எகிப்து வெற்றியை பறித்த அர்ஜெண்டினா
அட்லாண்டா: எகிப்து அணிக்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் அர்ஜெண்டினா அணி 3-2 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. 78 நிமிடங்கள் வரை எகிப்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், அடுத்த 14 நிமிடங்களில் அர்ஜெண்டினா அணி 3 கோல்களை அடுத்தடுத்து அடித்தது. இந்தப் போட்டி உலகக்கோப்பை தொடரின் மிகச்சிறந்த த்ரில்லராக அமைந்தது.
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் அர்ஜெண்டினா அணிக்கும், மெஸ்ஸி ரசிகர்களுக்கும் மறக்க முடியாத சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் எகிப்து அணிக்கு எதிரான போட்டியில், அர்ஜெண்டினா அணியின் தோல்வி உறுதி என்று ரசிகர்கள் கண்ணீருடன் நின்றிருந்த சூழலில், 14 நிமிடங்களில் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் அந்த அணி வீரர்கள் மாற்றிவிட்டனர்.

வழக்கமாக மெஸ்ஸிக்கு எதிராகதான் இப்படியான சம்பவங்கள் நடைபெறும். முதல் பாதியில் கோல் அடித்து அர்ஜெண்டினா முன்னிலை பெற்றால் மட்டுமே, அந்தப் போட்டியில் வெற்றி பெற்றும். இப்படி பின் தங்கிய நிலையில் இருந்து, மரண மாஸ் கம்பேக் கொடுத்தது இந்தப் போட்டியாக மட்டுமே இருக்கும். இதன் காரணமாகவே அர்ஜெண்டினா ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போட்டியில் 15வது நிமிடத்திலேயே எகிப்து அணியின் யாசர் இப்ராஹிம் கோல் அடித்து முன்னிலை பெற்றார். இதன்பின் 17வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மெஸ்ஸி அதனை தவறவிட்டார். இதனால் அர்ஜெண்டினா அணி பதற்றம் அடைந்தது. எத்தனை வாய்ப்புகளை உருவாக்கினாலும், அர்ஜெண்டினா அணியால் எகிப்து கோல்கீப்பர் மோஸ்தஃபாவை கடக்க முடியவில்லை.
தொடர்ந்து 2வது பாதியில் மீண்டும் எகிப்து அணி ஸிகோ 67வது நிமிடத்தில் 2வது கோல் அடிக்க, அர்ஜெண்டினா அணி ரசிகர்கள் கண்ணீர்விட்டனர். அதுமட்டுமல்லாமல் அர்ஜெண்டினா அணி பந்தை பாக்ஸிற்குள் கொண்டு வந்தாலே, 8 வீரர்கள் ஒன்றாக வந்து டிஃபென்ஸ் ஆடினார்கள். இந்த டெட்லாக்கை திறக்க முடியாமல் மெஸ்ஸி ஒரு கட்டத்தில் திணறி போனார் என்றே சொல்லலாம்.
ஆனால் 79வது நிமிடத்தில் கிறிஸ்டியன் ரொமேரோ அர்ஜெண்டினா அணிக்காக முதல் கோலை அடிக்க, தொடர்ந்து 83வது நிமிடத்தில் மெஸ்ஸி தரமான கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தார். தொடர்ந்து கூடுதல் கிடைத்தில் என்சோ ஃபெர்னாண்டஸ் அடித்த ஹெட்டர் அர்ஜெண்டினா அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தது.
முதல் 75 நிமிடங்கள் எகிப்து அணி ஆதிக்கம் செலுத்தினாலும், 14 நிமிடங்களில் ஒட்டுமொத்த ஆட்டத்தை அர்ஜெண்டினா மாற்றிவிட்டது. இந்த வெற்றியின் மூலமாக அர்ஜெண்டினா அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இதனால் அர்ஜெண்டினா ரசிகர்கள் நெகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications