பெட்ரோல் லிட். ரூ. 2.41, டீசல் லிட். ரூ. 2.25 விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்
டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 41 காசும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 25 காசும் குறைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் இது அமலுக்கு வந்துள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 58 காசு குறைந்து 67 ரூபாய் ஒரு காசாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் பெட்ரோல் விலை கடந்த 15ம் தேதி லிட்டருக்கு ஒரு ரூபாய் 21 காசு குறைக்கப்பட்டது.
டீசல் விலையை மத்திய அரசு கடந்த 18ம் தேதி லிட்டருக்கு 3 ரூபாய் 37 காசு குறைத்தது. அதோடு, பெட்ரோலைப் போல டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்களே சர்வதேச சந்தை நிலவரப்படி நிர்ணயித்துக் கொள்ளும் அதிகாரத்தை அளித்தது.
டீசல் விலை நிர்ணய அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களிடம் வந்த பிறகு முதல்முறையாக டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 25 காசு குறைக்கப்பட்டுள்ளது.

6-வது முறையாக குறைப்பு
இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து பெட்ரோல் விலை 6-வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

15 நாட்களில்
தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவதால் பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலையும் குறைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 15 நாட்களில் டீசல் விலை மட்டும் 5 ரூபாய் 62 காசு குறைந்துள்ளது. கடந்த 15ம் தேதிக்கு முன்பு வரை டீசல் விலை மாதந்தோறும் லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டு வந்தது.

வித்தியாசம் எவ்வளவு
விலைக் குறைக்கப்பட்ட பிறகு சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 69 ரூபாய் 59 காசில் இருந்து 2 ரூபாய் 58 காசு குறைந்து 67 ரூபாய் ஒரு காசாக உள்ளது.

டெல்லி, மும்பையில்
டெல்லியில் 64 ரூபாய் 24 காசாகவும், கொல்கத்தாவில் 71 ரூபாய் 68 காசாகவும் இருக்கிறது. மும்பையில் பெட்ரோல் விலை 71 ரூபாய் 91 காசாக குறைந்துள்ள நிலையில், சென்னையில் டீசல் விலை ஒரு லிட்டர் 59 ரூபாய் 27 காசில் இருந்து 2 ரூபாய் 43 காசு குறைந்து 56 ரூபாய் 84 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications