பெட்ரோல் லிட்டருக்கு விலை ரூ3.18, டீசல் ரூ3.09 அதிரடியாக உயர்வு!
டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ3.18க்கு அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் டீசல் விலையும் லிட்டருக்கு ரூ3.09 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் மாதத்துக்கு இருமுறை பெட்ரோல், டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன.

கடந்த 15-ந் தேதி பெட்ரோல் விலை 82 காசுகளும், டீசல் விலை 61 காசுகளும் உயர்த்தப்பட்டன. இந்நிலையில் இன்று அதிரடியாக பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ3.18, டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ3.09 என்கிற அளவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி அறிவித்துள்ளன.
இதனால் சென்னையில் ரூ.59.85-க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வரிகள் உட்பட ரூ63.92க்கு இனி விற்பனை செய்யப்படும். அதேபோல் ஒரு லிட்டர் டீசல் இனி ரூ53.53 காசுகளுக்கு விற்பனை செய்யப்படும்.
நடாளுமன்றத்தில் மத்திய பொதுபட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்றுதான் தாக்கல் செய்திருந்தார். ஏழைகள், விவசாயிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கான பட்ஜெட்டாக இது அமைந்திருந்தது என்ற பொது கருத்து வெளியாகி உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications