வெளிநாடு வாழ் இந்தியர்கள் 2017 ஜூன் 30 வரை பழைய நோட்டுக்களை மாற்றலாம் - ரிசர்வ் வங்கி

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களின் பழைய ரூபாய் நோட்டுக்களை 2017 ஜூன் 30 வரை மாற்றிக்கொள்ளலாம். நேபாளம், பூடான், பாகிஸ்தான், வங்கதேசத்தில் உள்ள இந்திய குடிமகன்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த முடியாது என்ற

Subscribe to Oneindia Tamil

மும்பை: செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்றுவதற்கு கடந்த டிசம்பர் 30ம் தேதியுடன் கெடு முடிந்து விட்டது. இதில் மாற்ற இயலாதவர்கள் தகுந்த காரணங்களுடன் மார்ச் 31ம் தேதி வரை ரிசர்வ் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம்.

நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் டிசம்பர் 15ம் தேதி வரை மாற்றலாம், டிசம்பர் 30ம் தேதி வரை டெபாசிட் செய்யலாம் என அறிவித்தார் மோடி.

RBI announce NRIs exchange old notes till June 30

50 நாட்களுக்கும் மேலாக வங்கிகளில் வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் டிசம்பர் 30ஆம் தேதி வரையில் வங்கிகளில் செல்லாத ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்தனர்.

இதனையடுத்து மார்ச் மாதம் இறுதி வரையில் ரிசர்வ்வங்கியின் கிளை அலுவலகத்தில் உரிய விளக்கம் அளித்து மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்ற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வசிப்பவர்கள், நவம்பர் 9 முதல் 2016 டிசம்பர் 30ஆம் தேதி வரையில் வெளிநாட்டிற்கு சென்று இருந்தால் அவர்கள் 2017 ஜூன் 30ஆம் தேதி வரையில் தங்களிடம் உள்ள செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.

இவர்களுக்கு எந்த ஒரு பண வரம்பும் கிடையாது. ஆனால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (FEMA)அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் நெறிமுறைகளின்படி மாற்றிக் கொள்ளலாம். இப்போது அமலில் உள்ள வழிமுறைகளானது வெளிநாடு வாழ் இந்தியர்கள் ரூ.25 ஆயிரம் எடுத்துச் செல்ல அனுமதிக்கிறது.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஜூன் 30 வரை இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், நேபாளம், பூடான், பாகிஸ்தான், வங்கதேசத்தில் உள்ள இந்திய குடிமகன்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளது.

ரூபாய் நோட்டை மாற்ற வருபவர்கள், நவம்பர் 9ந்தேதி முதல் டிசம்பர் 30-ந்தேதிவரை இந்தியாவில் இல்லை வெளிநாட்டில் தங்கி இருந்தேன் என்பதற்கான ஆவணங்கள், அடையாள அட்டை, பாஸ்போர்ட், உள்ளிட்டவற்றை ரிசர்வ் வங்கி அதிகாரியிடம் அளிக்க வேண்டும். இந்த வசதி மும்பை,டெல்லி, சென்னை,கொல்கத்தா மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கி கிளைகளுக்கு மட்டும் பொருந்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+