Netflix-க்கு குட்பை சொன்ன ரீட் ஹேஸ்டிங்ஸ்..! டிவி, சினிமா தியேட்டர் நிறுவனங்களை அலறவிட்ட OTT அரக்கன்!
உலகளாவில் ஓடிடி (OTT) என்ற புரட்சியை உருவாக்கிய நெட்ஃபிளிக்ஸ் (Netflix) நிறுவனத்தின் இணை நிறுவனரான ரீட் ஹேஸ்டிங்ஸ், அந்நிறுவனத்துடனான தனது 29 ஆண்டுகால நீண்ட நெடிய பயணத்தை மொத்தமாக முடித்துக் கொண்டுள்ளார்.
ஜூன் 4ஆம் தேதி நடைபெற்ற நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பங்குதாரர்கள் கூட்டத்திற்குப் பிறகு, ரீட் ஹேஸ்டிங்ஸ் தான் கடைசியாக வகித்த இயக்குநர் குழுவில் (Board of Directors) இருந்து முழுமையாக விலகியுள்ளார். இதன் மூலம், இனிமேல் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தில் அவர் எவ்விதப் பொறுப்பிலும் நீடிக்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

2023-ல் சிஇஓ பதவி விலகல்
நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருந்த ரீட் ஹேஸ்டிங்ஸ், கடந்த 2023 ஆம் ஆண்டிலேயே தனது தினசரி நிர்வாகப் பொறுப்பான தலைமை நிர்வாக அதிகாரி (Co-CEO) பதவியிலிருந்து விலகினார்.
அப்போது தனது சிஇஓ பொறுப்புகளை டெட் சராண்டோஸ் மற்றும் கிரெக் பீட்டர்ஸ் ஆகிய இருவரிடம் ஒப்படைத்துவிட்டு, நிறுவனத்தின் எக்ஸிகியூட்டிவ் செர்மன் (Executive Chairman) பொறுப்பை மட்டும் கவனித்து வந்தார்.
இத்தகைய சூழலில், கடந்த ஏப்ரல் மாதமே தான் நெட்ஃபிளிக்ஸ் அமைப்பில் இருந்து முற்றிலும் விலகப் போவதாக அவர் அறிவித்திருந்த நிலையில், தற்போது பங்குதாரர்கள் கூட்டத்தின் ஒப்புதலோடு இயக்குநர் குழுவில் இருந்தும் முழுமையாக வெளியேறியுள்ளார்.
தபால் மூலம் DVD டூ உலகளாவிய ஓடிடி அரக்கன்
கடந்த 1997 ஆம் ஆண்டு வெறும் தபால் மூலம் டிவிடி (DVDs-by-mail) வாடகைக்கு வழங்கும் ஒரு சாதாரண சிறு வணிகமாகத் தான் ரீட் ஹேஸ்டிங்ஸ் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். ஆனால், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை முன்கூட்டியே கணித்த அவர், அதனை உலகமே வியக்கும் ஒரு பிரம்மாண்ட கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் சாம்ராஜ்யமாக மாற்றிக் காட்டினார்.
திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் நுகரப்படும் பாரம்பரிய முறையையே முற்றிலும் மாற்றியமைத்த பெருமை இவரையே சேரும். குறிப்பாக, கொரோனா பேரிடர் காலத்தில் ஒட்டுமொத்த உலகமே முடங்கிக் கிடந்தபோது, மற்ற பொழுதுபோக்கு நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்த வேளையில், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தை அசுர வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
புதிய போர்டு சேர்மன் யார்?
ரீட் ஹேஸ்டிங்ஸ் விலகியதைத் தொடர்ந்து, நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் புதிய போர்டு சேர்மனாக (Chairman of the Board) ஜே ஹோக் (Jay Hoag) ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டிசிவி (TCV) என்ற முன்னணி வளர்ச்சி ஈக்விட்டி நிறுவனத்தின் இணை நிறுவனரான ஜே ஹோக், கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் நெட்ஃபிளிக்ஸ் இயக்குநர் குழுவில் ஒரு முக்கிய உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.
மேலும், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்நிறுவனத்தின் முதன்மை சுயாதீன இயக்குநராக (Lead Independent Director) செயல்பட்டு வந்த இவருக்கு, தற்போது பங்குதாரர்களின் 93 சதவீத அதிரடி ஆதரவோடு இந்த மிக முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவர் ஏற்கனவே ஜில்லோ குரூப் (Zillow Group) மற்றும் பெலோட்டான் இன்டராக்டிவ் ஆகிய நிறுவனங்களின் போர்டுகளிலும் முக்கியப் பொறுப்புகளில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரீட் ஹேஸ்டிங்ஸின் அடுத்த பிளான் என்ன?
Netflix தொடர்பான அனைத்து கார்ப்பரேட் பொறுப்புகளிலிருந்தும் விடைபெற்றுள்ள 65 வயதான ரீட் ஹேஸ்டிங்ஸ், தனது அடுத்தகட்ட வாழ்க்கைப் பயணம் குறித்து ஒரு தெளிவான திட்டத்தை வைத்துள்ளார்.
இனிவரும் காலங்களில் சமூகப் பொதுநல விஷயங்கள் (Philanthropy) மற்றும் கல்விச் சேவைகளில் தனது முழு கவனத்தையும் செலுத்தப்போவதாக அவர் அறிவித்துள்ளார். அதுமட்டுமன்றி, தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள் சார்ந்த புதிய முயற்சிகளை மேம்படுத்தவும், உட்டாவில் (Utah) உள்ள தனக்குச் சொந்தமான பனிச்சறுக்கு ரிசார்ட்டை (Ski Resort) நிர்வகிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications