ரிலையன்ஸ் வசம் போன மன்னா ஃபுட்ஸ்.. ரூ.156 கோடிக்கு தமிழக நிறுவனத்திடம் டீலை முடித்த அம்பானி!
சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த சௌத்தர்ன் ஹெல்த் புட்ஸ் நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இதன் மூலம் தென்னிந்தியாவில் புகழ்பெற்ற Manna தயாரிப்புகள் இனி ரிலையன்ஸ் வசமாகிறது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் சமீப காலமாகப் பல்வேறு நிறுவனங்களை வாங்கி வரும் நிலையில், சவுத் ஹெல்த் புட்ஸை இப்போது வாங்கியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
கச்சா எண்ணெய்யை வாங்கி பெட்ரோலாக அதை சுத்திகரித்து விற்பனை செய்வதும் ஏற்றுமதி செய்வதும் தான் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிரதான வேலை. ஆனால், கச்சா எண்ணெய் டிமாண்ட் தொடர்ந்து குறைந்து வருவதால், ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே வேறு பல துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறது.

ரிலையன்ஸ்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் ஜியோவை ஆரம்பித்தது. அதன் பிறகு வரிசையாகப் பல்வேறு துறைகளிலும் ஜியோ மெல்ல நுழைந்து வருகிறது. சமீபத்தில் கூட அது கேம்பாகோலாவை லான்ச் செய்து விற்று வருகிறது. இப்படி கன்சியூமர் ப்ராடக்ட்ஸ் பிரிவில் ஜியோ தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது
இதற்கிடையே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் கன்சியூமர் ப்ராடக்ட்ஸ் பிரிவு இப்போது தமிழ்நாட்டின் புகழ்பெற்ற மன்னா பிராண்டின் தாய் நிறுவனமான சௌத்தர்ன் ஹெல்த் ஃபுட்ஸை வாங்கியுள்ளது. ரூ.156 கோடி ரூபாய் கொடுத்து ரிலையன்ஸ் இந்த டீலை முடித்துள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் கன்சியூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட், தனது உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பிரிவைப் பலப்படுத்தியுள்ளது.
சௌத்தர்ன் ஹெல்த் புட்ஸ்
ரிலையன்ஸ் நிறுவனம் வரிசையாகப் பல்வேறு நிறுவனங்களை வாங்கி வரும் நிலையில், அந்த வரிசையில் சௌத்தர்ன் ஹெல்த் புட்ஸ் இணைந்துள்ளது. சமீபத்தில் தான் ரிலையன்ஸ் நிறுவனம் உதயம், இன்டிபென்டன்ஸ், சில் உள்ளிட்ட பிராண்டுகளை வாங்கியிருந்தது. இதன் மூலம் சிறுதானியம் மற்றும் ஹெல்த் உணவுப் பிரிவில் ரிலையன்ஸ் கவனம் செலுத்தப் போவது தெளிவாகத் தெரிகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மன்னா பிராண்டு, தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக இருக்கிறது.. இந்தியர்கள் இப்போது ஆரோக்கியமான, சத்தான உணவுகளை நாடுவதால் சமீபத்திய ஆண்டுகளில் இந்தப் பிரிவுகள் பெரும் வளர்ச்சியடைந்துள்ளன.
திட்டம் என்ன
குறைந்த விலையில் ஆரோக்கியமான உணவுப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்தத் தொடர் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த பொருட்களை நாடு முழுக்க சந்தைப்படுத்துவதன் மூலம் இந்த மார்கெட்டில் வலுவான இருப்பை உருவாக்குவதே ரிலையன்ஸின் திட்டம்
இது குறித்து ரிலையன்ஸ் கன்சியூமர் இயக்குநர் டி. கிருஷ்ணகுமார் கூறுகையில், "தமிழகத்தில் மன்னா, மிகவும் நம்பகமான ஆரோக்கிய பிராண்ட். சிறுதானிய உணவுகள், பானங்கள், குழந்தை உணவுகள் என அதன் தயாரிப்புகள் பிரபலமானவை. மன்னாவை வாங்கியதன் மூலம் எங்கள் பேக்கேஜ் உணவுப் பிரிவு வலுவடையும்" என்று அவர் தெரிவித்தார்.
மன்னா
சௌத்தர்ன் ஹெல்த் ஃபுட்ஸ் நிறுவனம் சிறுதானியங்கள், ஓட்ஸ், தானியம், ஹெல்த் மிக்ஸ், காலை உணவு மற்றும் உலர் பழங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுப் பொருட்களை விற்பனை செய்கிறது. அதன் மன்னா பிராண்ட், சிறுதானிய மாவு, குழந்தை உணவு உள்ளிட்ட மிக்ஸ்களில் கவனம் செலுத்துகிறது. மன்னாவுக்கு எனத் தனி வாடிக்கையாளர்களே உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications