Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வரலாறு காணாத சரிவு.. துல்லியமான நேரத்தில் Rich Dad Poor Dad ஆசிரியர் எடுத்த முடிவு! பல கோடி லாபமாம்

Subscribe to Oneindia Tamil

ஹவாய்: பிரபல முதலீட்டாளரும் Rich Dad Poor Dad புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி தனது பிட்காயின் முதலீடுகளை விற்றுள்ளார். பிட்காயின் மதிப்பு கடந்த 10 நாட்களில் மிக பெரியளவில் சரிந்துள்ள நிலையில், அதை ராபர்ட் கியோசாகி விற்றுள்ளார். பிட்காயினை தான் விற்றுவிட்ட போதிலும், அதன் மீது தனக்கு இன்னுமே நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் இளைஞர்கள் உட்பட பலரும் கடந்த சில ஆண்டுகளாகவே பிட்காயினில் தொடர்ச்சியாக முதலீடு செய்து வந்தனர். கிரிப்டோ சந்தையில் முக்கியமானதாக இருக்கும் பிட்காயின் விலையும் அதற்கேற்ப தொடர்ந்து எகிறி உச்சம் தொட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு பிட்காயின் மதிப்பு கூட ரூ.1.10 கோடி வரை போனது.

Robert Kiyosaki Sells 2M Bitcoin Holdings Amid 25 Crash Shifts to Real Estate for Tax-Free Cash

சரியும் பிட்காயின்

ஆனால், கடந்த சில நாட்களாக நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பிட்காயின் விலை தொடர்ச்சியாகச் சரிந்து வருகிறது. மளமளவெனச் சரிந்த பிட்காயின் மதிப்பு ரூ.77 லட்சம் (88,000 டாலர்) வரை கூட போனது. அதன் பிறகு மெல்லச் சீராகி இப்போது ரூ.91 லட்சம் (91,000 டாலருக்கு) வர்த்தகமாகி வருகிறது. பிட்காயினின் இந்த திடீர் சரிவால் பலரும் மிகப் பெரிய நஷ்டத்தை எதிர்கொண்டனர்.

இதற்கிடையே Rich Dad Poor Dad புத்தகத்தின் ஆசிரியரும் வல்லுநருமான ராபர்ட் கியோசாகி, சமீபத்தில் தன்னிடம் இருந்த $2.25 மில்லியன் மதிப்புள்ள பிட்காயின்களை தலா $90,000க்கு விற்றதாகத் தெரிவித்துள்ளார். நல்ல லாபத்தில் இருந்தால் ஒரு முதலீட்டை விற்றுவிட்டு பணத்தை எடுக்கலாம் என் தனது பாலிசியை பின்பற்றியே இதைச் செய்ததாக அவர் குறிப்பிடுகிறார்.

நல்ல லாபம்

கிரிப்டோ சந்தை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வரும் நிலையில், ஓவன் குண்டன் என்ற பிட்காயின் கோடீஸ்வரர் தனது $1.3 பில்லியன் பிட்காயின் இருப்பு முழுவதையும் விற்றுவிட்டதாகச் செய்திகள் வெளியான நிலையில், கியோசாகி இந்த தகவலைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "நான் $2.25 மில்லியன் பிட்காயினை சுமார் $90,000க்கு விற்றேன். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிட்காயினை $6,000க்கு வாங்கியிருந்தேன்" என பதிவிட்டிருந்தார்.

அடுத்து என்ன

மேலும், பிட்காயின் விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை எப்படிப் பயன்படுத்தப் போகிறார் என்பதையும் அவர் விளக்கினார். இது தொடர்பாக அவர், "பிட்காயின் விற்றதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு இரண்டு அறுவை சிகிச்சை மையங்களை வாங்குகிறேன். மேலும் ஒரு பில்போர்ட் விளம்பர பிஸ்னஸிலும் முதலீடு செய்கிறேன். எனது இந்த $2.25 மில்லியன் முதலீட்டின் மூலம் அடுத்த பிப்ரவரிக்குள் ஒவ்வொரு மாதமும் சுமார் $27,500 லாபம் கிடைக்கும். ஏற்கனவே எனது ரியல் எஸ்டேட் முதலீடு மூலம் கணிசமாக வருமானம் கிடைக்கும் நிலையில், அதில் முக்கியமானதாக இந்த முதலீடுகள் இருக்கும்.

நம்பிக்கை இருக்கு

நான் எனது பிட்காயின்களை விற்றாலும் கூட அதன் நீண்டகால எதிர்காலம் குறித்து இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இந்த புதிய வருமானத்தை வைத்து நிச்சயம் எதிர்காலத்தில் பிட்காயினை வாங்குவேன். நான் பிட்காயினை விற்றதால் அதை நிராகரித்துவிட்டேன் என அர்த்தம் இல்லை.. மாறாக அதில் கிடைத்த லாபத்தை விற்று வேறு ஒன்றில் முதலீடு செய்திருக்கிறேன். இதுவே எப்போதும் என முதலீட்டு பாலிசியாக இருந்து வந்துள்ளது.

65 ஆண்டுகளாக நான் பணக்காரராகப் பின்பற்றும் பாலிசி இது தான்! பொதுவாகப் பாதுகாப்பு காரணங்களால் எனது முதலீடுகளை விற்கும்போது அதைப் பொதுவெளியில் தெரிவிக்க வேண்டாம் என எனக்கு அட்வைஸ் செய்தார்கள். இருப்பினும், நான் வெளிப்படையாக இருக்கிறேன். எனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு கற்று கொடுக்கவே இதைப் பகிர்ந்து கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+