Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

உலகளவிய இயற்கை எரிவாயு சந்தை தற்போது பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலக அளவில் சுமார் 20 சதவீத எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஷ்யா தெற்கு ஆசிய சந்தையை கைப்பற்றும் வகையில் மிகப்பெரிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

வியாழக்கிழமை வெளியான அறிக்கைகளின்படி, அமெரிக்க அரசு தடை விதித்த ரஷ்ய எரிவாயு தளங்களில் இருந்து திரவ எரிவாயுவை (LNG) சர்வதேச ஸ்பாட் விலையில் இருந்து 40 சதவீத தள்ளுபடியில் விற்க ரஷ்யா தயாராகி வருகிறது. இந்த மிகப்பெரிய முடிவுக்கு பின்னால் உலகின் 4 மிகப்பெரிய வல்லரசு நாடுகள் தொடர்பு கொண்டு உள்ளது.

Russia LNG India China Trump USA Modi xi jinping Russia LNG Discount India Russian Gas Hormuz Strait Crisis BRICS Energy Strategy China Russia LNG Shadow Fleet BRICS Russia 40 percent LNG discount India Russia LNG offer Bangladesh 2026 Hormuz closure global gas crisis Arctic LNG 2 discounted supply Russia sanctioned gas South Asia BRICS masterplan energy China shadow fleet Russian LNG EU ban Russian LNG 2027 India Russian gas sanctions risk Qatar LNG attack impact 40 discount natural gas India Russia South Asia market capture Trump BRICS energy shock Hormuz blockade energy prices Russia China forged documents LNG 40 2 BRICS 40 BRICS

ரஷ்ய கஜானா

அமெரிக்கா மற்றும் இதர மேற்கத்திய நாடுகள் இணைந்து ரஷ்யாவின் கச்சா எண்ணெய், எரிவாயு மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ள வேளையில், ரஷ்யாவின் வருமானம் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் வருவாய் ஈட்டவும், அந்நாட்டின் பொருளாதாரம், நாணய மதிப்பு ஆகியவற்றை மேம்படுத்தவும் அதிபர் புதின் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

சமீபத்தில் ரஷ்யாவில் இருந்து 100 கிராம் தங்கம் மேல் ஒருவர் ஏற்றுமதி செய்ய கூடாது என அறிவித்து மிக முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் வருவாய் ஈட்டும் பொருட்டு ரஷ்யா அடுத்தக்கட்டமாக எடுத்த நடவடிக்கை தான் இந்த திரவ எரிவாயு (LNG) சப்ளை.

இதே பழைய பார்மூலா

எப்படி ரஷ்யா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்து வருகிறதோ, அதேபோல் தற்போது திரவ எரிவாயுவை (LNG) தள்ளுபடியில் விற்க முடிவு செய்துள்ளது. இதுவும் அமெரிக்கா தடை விதிக்கப்பட்ட தளத்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டவை. சும்மா இருக்கும் LNG-ஐ பணமாக்கும் முயற்சி தான்.

ஹார்முஸ் வழித்தடம் பாதிக்கப்பட்டதால் தற்போது ஆசிய நாடுகள் மிகப்பெரிய அளவிலான எரிவாயு தட்டுப்பாட்டில் உள்ளது. இந்த டிமாண்ட்-ஐ பயன்படுத்தி 40 சதவீத தள்ளுபடி விலை என கவர்ச்சிகரமான ஆஃபரை கொடுத்து சப்ளை ஆர்டர்களை பெற தயாராகியுள்ளது.

ரஷ்யாவின் புதிய உத்தி

ஆர்க்டிக் எல்என்ஜி 2 மற்றும் போர்டோவாயா (Portovaya) போன்ற அமெரிக்க தடை விதிக்கப்பட்ட திட்டங்களில் இருந்து வரும் எரிவாயு, சீனா மற்றும் ரஷ்யாவில் உள்ள மறைமுக நிறுவனங்கள் மூலம் தெற்கு ஆசிய நாடுகளுக்கு விற்கப்பட திட்டமிட்டுள்ளது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தலைமையிலான அரசு. இந்த எரிவாயுவின் உண்மையான ரஷ்ய தோற்றத்தை மறைக்க ஆவணங்களை போலியாக உருவாக்கும் சலுகையும் வழங்கப்படுகிறது.

முக்கிய டார்கெட்

இந்தியா மற்றும் வங்காளதேசம் போன்ற நாடுகள் தங்களது உரம் தயாரிப்பு மற்றும் மின் உற்பத்தித் துறைகளுக்கு போதுமான எரிவாயு சப்ளை செய்ய முடியாமல் திணறும் நிலையில், ரஷ்யாவின் இந்த தள்ளுபடி பெரும் பொருளாதார உதவியாகத் இருக்கும். மேலும் தைவான், இந்தோனேஷியா, உட்பட பல தென்கிழக்கு ஆசிய நாடுகளும் ரஷ்யாவின் எரிவாயுவை பெரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஏன் இவ்வளவு பெரிய தள்ளுபடி?

ஈரான் போரில் கத்தார் எல்என்ஜி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் சேதமடைந்து அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டு ஒரு மாதம் மேல் ஆனது, தற்போது ஹார்மூஸ் வழியாக தினமும் 12 கப்பல் செல்ல அனுமதிக்கப்பட்டாலும் இது உலகளாவிய தேவையை பூர்த்தி செய்ய முடியாது. ஹார்முஸ் ஜலசந்தி மூடல் ஆகியவை உலக எரிவாயு விநியோகத்தில் தொடர்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதனால் இந்தியா, வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் ஸ்பாட் சந்தையில் எரிவாயு விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. இந்த சூழலை ரஷ்யா பயன்படுத்தி, தற்காலிக லாபம் தரும் நோக்கில் தள்ளுபடியை வழங்கி, நீண்டகால சந்தைப் பங்கைப் பெற முயற்சிக்கிறது. இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் தற்போதைய தேவையை நிரந்தர வாடிக்கையாளர்களாக மாற்றும் ரஷ்யாவின் திட்டம் இதில் தெளிவாகத் தெரிகிறது.

ஐரோப்பிய ஒன்றிய தடை அச்சுறுத்தல்

ரஷ்யாவின் இந்த தள்ளுபடிக்கு வெறும் சந்தை விரிவாக்கம் மட்டும் காரணம் அல்ல, மற்றொரு முக்கிய காரணமும் உள்ளது. ஆம், ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய எல்என்ஜி இறக்குமதிக்கு ஏப்ரல் 25 முதல் குறுகியகால ஒப்பந்தங்களுக்கு தடை விதிக்க உள்ளது. 2027-ம் ஆண்டுக்குள் முழுமையான தடை அமலுக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது.

இதனால் ரஷ்யா தனது பிரதான ஐரோப்பிய சந்தையை இழக்கும் நிலையில் உள்ளது. இந்த வருவாய் இழப்பை ஈடுகட்ட தெற்கு ஆசியாவை புதிய இலக்க மாற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

தற்போது சீனா மட்டுமே ரஷ்ய எரிவாயுவை 'நிழல் கப்பல்' (Shadow Shipment) மூலம் கொண்டு செல்லும் ஒரே பெரிய நாடு.

சவால் + அச்சம்

இந்தியா மற்றும் வங்காளதேசம் போன்ற நாடுகளுக்கு இந்த சலுகை ஈர்க்கக்கூடியதாக இருந்தாலும், அமெரிக்காவின் இரண்டாம் நிலை தடைகள் பெரும் நெருடலாக உள்ளன. ஆர்க்டிக் எல்என்ஜி 2 போன்ற தடை விதிக்கப்பட்ட திட்டங்களுடன் வர்த்தகம் செய்பவர்கள் மீது அமெரிக்கா கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரித்துள்ளது.

தீர்வு

இத்தகைய பிரச்சனையை தவிர்க்க ரஷ்ய-சீன இடைத்தரகர்கள் ஓமன் அல்லது நைஜீரியா போன்ற நாடுகளில் இருந்து வந்ததாக போலி ஆவணங்களை வழங்க முன்வந்துள்ளனர். இந்தியா ரஷ்ய எண்ணெயை தள்ளுபடியில் வாங்கிய அனுபவம் இருந்தாலும், எரிவாயு விஷயத்தில் இதுவரை எச்சரிக்கையுடன் நடந்துகொண்டுள்ளது.

மேலும் பங்களாதேஷ் நாட்டில் எனர்ஜி நெருக்கடி மிகத் தீவிரமாக உள்ளதால், 40 சதவீத தள்ளுபடி என்பது அந்நாட்டிற்கான ஜாக்பாட்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான் சனிக்கிழமை அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே உயர் மட்ட நேரடி பேச்சுவார்த்தைகளை இஸ்லாமாபாத்தில் நடத்த உள்ளது. மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரிக்காமல் தடுக்கவும், எரிபொருள் சப்ளையில் இருக்கும் நெருக்கடியை தீர்க்கவும் இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படும்.

மாஸ்டர் ஸ்ட்ரோக்

மத்திய கீழக்கு பதற்றம் குறைந்தால் இந்த சலுகைகள் தேவையற்றதாக மாறலாம். ஆனால் பதற்றம் தொடர்ந்தால் தெற்கு ஆசிய நாடுகள் ரஷ்யாவின் இந்த தள்ளுபடி சலுகை ஆபத்பாந்தவனாக மாறும் நிலையை உருவாக்கும். ரஷ்யா இந்த அறிவிப்பை திட்டமிட்டு இஸ்லாமாபாத்தில் நடப்பதற்கு ஒரு நாள் முன்னதாக அறிவித்துள்ளது மாஸ்டர் ஸ்ட்ரோக்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+