Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்வதேச தங்க மார்கெட்டில் பூகம்பம்.. 25 ஆண்டுகளில் முதல்முறையாக தங்கத்தை விற்று தள்ளும் ரஷ்யா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புவிசார் அரசியல் மொத்தமாக மாறி வரும் சூழலில், ரஷ்யா கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல்முறையாகத் தங்கத்தை விற்க ஆரம்பித்துள்ளது. பட்ஜெட் அழுத்தங்களைச் சரி செய்யவே ரஷ்யா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. சர்வதேச மார்கெட்டில் இதனால் அதிக தங்கம் இறங்கும் சூழலில், இதனால் தங்கம் விலை மேலும் கூட சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை கடந்த சில வாரங்களாகவே வரலாறு காணாத வேகத்தில் சரிந்து வருகிறது. சர்வதேச சந்தையில் ஒரு கட்டத்தில் 5500 டாலர் வரை போன தங்கம் விலை இப்போது 4500க்கு சரிந்துள்ளது. தங்கம் விலை இவ்வளவு குறுகிய காலத்தில் இந்தளவுக்கு விழ வளைகுடா போர் தான் பிரதான காரணமாக இருந்தது. இதற்கிடையே தங்கத்தில் ரஷ்யா ஆடும் கேம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

Russia Sells Gold Reserves for First Time in 25 Years to Plug Budget Gap Will yellow metal plunge

தங்கத்தை விற்கும் ரஷ்யா

இதற்கிடையே சர்வதேச தங்க மார்கெட்டில் மிகப் பெரிய மாற்றம் நடக்க ஆரம்பித்துள்ளது. ரஷ்ய மத்திய வங்கி தனது தங்கக் கையிருப்புகளை விற்க ஆரம்பித்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதன்முறையாக நேரடியாகத் தங்கத்தை விற்கத் தொடங்கியுள்ளது. ராணுவச் செலவினங்களால் ஏற்படும் அதிகரித்து வரும் பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைக்கும் முயற்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என bne Intellinews அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரஷ்யாவின் நிதி நிலைமையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.

பல டன் தங்கம்

2022 முதல் 2025 வரை, ரஷ்யாவின் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சி விற்பனை 15 டிரில்லியன் ரூபிளுக்கு ($150 பில்லியன்) அதிகமாக இருந்தது. இது 2026ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 3.5 டிரில்லியன் ரூபிள் ($35 பில்லியன்) ஆக வேகமடைந்துள்ளதாக bne Intellinews தெரிவித்துள்ளது. குறிப்பாகத் தங்க விற்பனை இதுவரை இல்லாத அளவுக்கு வேகமாக அதிகரித்துள்ளது. ரஷ்ய மத்திய வங்கி 2026 ஜனவரியில் 300,000 அவுன்ஸ் தங்கத்தையும், பிப்ரவரியில் மேலும் 200,000 அவுன்ஸ் தங்கத்தையும் விற்பனை செய்துள்ளது. அதாவது மொத்தம் சுமார் 14 டன் எடை கொண்ட தங்கத்தை ரஷ்யா விற்றுள்ளது..

இதில் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். அதாவது இதற்கு முன்பு நடந்த ரஷ்யாவின் தங்க விற்பனைகள் பெயரளவே இருந்தன. அதாவது ரஷ்ய சென்ட்ரல் வங்கி விற்கும் அதை ரஷ்ய நிதியமைச்சகம் வாங்கும். இதுபோல உள்நாட்டு இடமாற்றங்கள் மட்டுமே நடந்தன. இதனால் தங்கம் மார்கெட்டிற்கு வரவில்லை. ஆனால், சமீபத்திய மாதங்களில், மத்திய வங்கி நேரடியாகச் சந்தையில் தங்கத்தை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது.

விற்பனை

இந்த நேரடி விற்பனையின் விளைவாக, ரஷ்யாவின் தங்க இருப்புக்கள் 74.3 மில்லியன் அவுன்ஸ்களாகக் குறைந்துள்ளன. இது கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத குறைந்த அளவாகும். முன்பே குறிப்பிட்டது போலக் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும் 14 டன் தங்கம் விற்கப்பட்டுள்ளது. ரஷ்யா ஒரே நேரத்தில் இந்தளவுக்குத் தங்கத்தை விற்பது கடந்த 2002க்கு பிறகு இதுவே முதல்முறையாகும்.

உக்ரைன் போர் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிக காலத்திற்குத் தொடர்ந்து வருகிறது. அங்கு அதிகரிக்கும் ராணுவச் செலவினங்களால் நிதி நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ளன. 2025ஆம் ஆண்டை ரஷ்யா 0.5% பட்ஜெட் பற்றாக்குறையுடன் நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அது 2.6% GDP ஆக அதிகரித்தது. சிலர் இது 3.4% வரை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார்கள். இதன் காரணமாகவே வேறு வழியில்லாமல் ரஷ்யா தங்கத்தை விற்க ஆரம்பித்துள்ளதாம். சர்வதேச மார்கெட்டில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கூட ஒரு அவுன்ஸ் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு $5,000 டாலரை தாண்டி இருந்தது. அதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ரஷ்யா தங்கத்தை விற்றுள்ளது.

விலை குறைவு

அதேநேரம் இப்போதும் ரஷ்யா வசம் 2,000 டன்களுக்கும் அதிகமான தங்கம் இருப்பதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.. இதன் மூலம் உலகின் ஐந்தாவது பெரிய தங்கக் கையிருப்பைக் கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது. தங்கத்தை விற்பது ஒரு பக்கம் இருக்கும் அதேநேரம் ரஷ்யா தனது வெளிநாட்டுக் கடனை குறைத்து வருகிறது. இப்போது ரஷ்யாவின் GDPஇல் சுமார் 14% மட்டுமே கடனாக உள்ளது. சர்வதேச அளவில் பார்த்தால் இது மிகக் குறைந்த அளவாகும்.

அதாவது வெளிநாட்டுக் கடன்கள், பட்ஜெட் அழுத்தங்களைக் குறைக்க ரஷ்யா இதுபோல தனது கையிருப்பில் இருக்கும் தங்கத்தை விற்க ஆரம்பித்து இருக்கலாம். இதுவே நீடித்தால் சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை மேலும் குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+