PF பணத்தை எடுத்து தங்கம் வாங்கலாமா? சீக்ரெட் சொல்லும் ஆனந்த் சீனிவாசன்! ஆஹா ரொம்ப முக்கியம் கவனிங்க
சென்னை: தங்கம் விலை விண்ணைத் தொட்டு வரும் வேளையில், சாதாரண நடுத்தர வர்க்க மக்கள் தங்கத்தில் முதலீடு செய்யத் துடிக்கிறார்கள். ஆனால், அதற்குக் கையில் போதிய பணம் இல்லை என்பதால் மாத சம்பளம் வாங்குவோர் தங்கள் பி.எஃப் (PF) பணத்தை எடுத்துத் தங்கத்தில் போடலாமா என யோசிக்கிறார்கள். இருப்பினும், இதில் ஒரு மிகப் பெரிய பிரச்சனை இருப்பதாக ஆனந்த் சீனிவாசன் எச்சரிக்கிறார். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இன்று ஒரு பவுன் தங்கம் விற்கும் விலையைப் பார்த்தால், "இப்போதே வாங்கிவிட வேண்டும், இல்லையென்றால் இன்னும் ஏறிவிடும்" என்ற பயம் பலரிடம் இருக்கிறது. இப்படிச் சொல்பவர்கள் எல்லாம் 2022 காலகட்டத்தில் தங்கம் விலை என்னவாக இருந்தது.. இப்போது என்னவாக இருக்கிறது என்பதையே எடுத்துக்காட்டாகக் காட்டுகிறார்கள்.

ஆனந்த் சீனிவாசன்
இருப்பினும், அனைவரிடமும் தங்கத்தைப் பவுன் கணக்கில் வாங்கி போடப் பணம் இருக்காது. இதனால் பொதுமக்கள் பலரும், குறிப்பாக மாத சம்பளம் வாங்குவோர் PF பணத்தை எடுத்து தங்கம் வாங்கலாமா என்றே யோசிக்கிறார்கள். இது மேலோட்டமாக பார்க்கும் போது நல்ல யோசனை போலத் தெரிந்தாலும் இதில் மிகப் பெரிய சிக்கல் இருப்பதாகப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் எச்சரிக்கையை விடுக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில், "நான் எனது வாழ்க்கையில் PF, PPF என எதுவும் போட்டது இல்லை.. வேலை செய்யும் இடத்தில் PF பிடிக்கத் தான் செய்வார்கள். இன்டிபென்டன்ட் பிசினஸ்மேனாக இருந்தால் மட்டுமே PF கட்ட தேவையிருக்காது.
PF தொகை
ஆனால், மாத சம்பளம் வாங்குவோருக்கு ஒரு செக்யூரிட்டி இருக்கிறது. 1ம் தேதி வந்தால் சம்பளம் வந்துவிடும் என்ற உத்தரவாதம் இருக்கிறது. ஆனால், என்னைப் போன்ற சொந்தமாகத் தொழில் செய்வோருக்கு மாதம் 1ம் தேதி வந்தால் இத்தனை பேருக்குச் சம்பளம் தர வேண்டும் என்ற பொறுப்பு தான் இருக்கிறது. எல்லா ரிஸ்கும் நான் எடுக்க வேண்டி இருக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ரிஸ்க் எடுப்பவர்களுக்கு PF கிடையாது.. பாதுகாப்பான ரூட்டை தேர்வு செய்வோரிடம் அரசு அதிகபட்ச தொகையை இப்படி எல்லாம் வசூலிக்கப் பார்க்கிறது.
எதற்குப் பயன்படும்!
ரூ.12 லட்சம் வரை வருமான விலக்கு கொடுத்தாலும் இதில் இருந்த மற்ற சலுகைகளை நீக்கிவிட்டார்கள். PFல் கூட 10% மட்டுமே வெளியே சந்தையில் முதலீடு செய்வார்கள். மற்ற தொகையை வைத்து அரசின் பத்திரங்களையே வாங்குவார்கள்.
இப்படிச் சிக்கல்கள் இருந்தாலும் சரி, PF பணத்தை எல்லாம் எடுக்கக்கூடாது.. இந்த PF இருந்தால் தான் ஓய்வு பெறும் போது குறைந்தபட்சம் ஒரு தொகை கிடைக்கும். அதையாவது வாங்கிக்கலாம். அந்த தொகையை வைத்து ஒரு கடன் பத்திரம் வாங்கி போட்டால்.. மாதம் மாதம் ஓய்வூதியம் போல ஒரு தொகை வரும்.
தங்கம் வாங்கலாமா!
PF பணத்தை எடுத்து தங்கம் வாங்கலாமா எனச் சிலர் கேட்கிறார்கள். தங்கம் இப்போது ஏறி இருக்கிறது ஓகே.. குறுகிய காலத்தில் ரூ.3000 டூ ரூ.12,000 ஏறுச்சு எனச் சிலர் சொல்வார்கள்.. ஆனால், அப்படி மின்னல் வேகத்தில் ஏறிய காலம் முடிந்துவிட்டது. மீண்டும் அதுபோல கண்டிப்பாக நடக்கும் எனச் சொல்ல முடியாது. PF இருந்தால் தான் சுய ஒழுக்கத்தோடு பணத்தைச் சேமிப்போம். இல்லையென்றால் யாராக இருந்தாலும் சேமிக்க மாட்டார்கள். இதனால் தான் சொல்கிறேன் PFஇல் யாரும் கை வைக்க வேண்டாம்" என்றார்.
-
Gold Price Today: 3 நாள் உயர்வுக்கு பிரேக்.. இன்று குறைந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு? -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்! -
Gold Price Today: தங்கம் விலை இன்றும் அதிரடி உயர்வு.. தொடர்ந்து 3 நாட்களாக அதிகரிப்பு! சென்னையில் ஒரு சவரன் என்ன ரேட்? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications